Sri Dharmeswar Temple: போராட்டமே வாழ்க்கையாக இருக்கா? – செல்ல வேண்டிய கோயில் இதுதான்!

Kumbakonam: வெற்றியோ தோல்வியோ முடிவு எதுவாக இருந்தாலும் எல்லா காலத்திலும் மன உறுதியுடன் போராடுவதற்கு தேவையான வலிமையை நாம் ஒரு கோயிலில் செய்யும் வழிபாடு மூலம் பெறலாம். அந்தக் கோயில் திருவாரூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து நன்னிலம் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அச்சுத மங்கலம் என்று ஊர் உள்ளது.

Sri Dharmeswar Temple: போராட்டமே வாழ்க்கையாக இருக்கா? - செல்ல வேண்டிய கோயில் இதுதான்!

கோப்பு புகைப்படம்

Published: 

24 Nov 2024 12:12 PM

கும்பகோணம்: நாம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக கடவுளை வணங்கிவிட்டு தான் செய்வோம். கடவுளால் தான் நாம் படைக்கப்படுகிறோம்,  வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் உருவாக்கி நம்மை சோதனைக்கு ஆட்படுத்துவதும், வெற்றியை கொடுப்பது அவனே என சொல்லப்படுகிறது. கோயில்கள் எப்போதும் ஒரு பாசிட்டிவான எனர்ஜியை நமக்குள் தருகிறது. ஒவ்வொரு கோயிலிலும் ஒரு ஒரு சிறப்பு இடம்பெற்றுள்ள நிலையில் வாழ்க்கையில் எப்போதும் மன உறுதி வேண்டும் என சொல்வார்கள்.வெற்றியோ தோல்வியோ முடிவு எதுவாக இருந்தாலும் எல்லா காலத்திலும் மன உறுதியுடன் போராடுவதற்கு தேவையான வலிமையை நாம் ஒரு கோயிலில் செய்யும் வழிபாடு மூலம் பெறலாம். அந்தக் கோயில் திருவாரூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து நன்னிலம் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அச்சுத மங்கலம் என்று ஊர் உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் அஞ்சல் அலுவலகத்திற்கு எதிராக இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் காலை 10 மணி முதல் இரவு 7 மணிக்கு பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

Also Read: Astrololy: ரிஷப ராசியில் இராகு.. இந்த 6 ராசிக்கு பணத்துக்கு பஞ்சமே இருக்காது!

கோயில் சிறப்பு

இந்த கோயிலில் தர்ம சம்பர்த்தினி உடனுறை தர்மேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பாண்டவர்கள் சூழ்ச்சியின் காரணமாக தான் ஆண்டு வந்த தேசத்தையும் அரண்மனையும் விட்டு வனவாசம் மேற்கொண்டார்கள். காடுகளில் அலைந்து பல கஷ்டங்களை அனுபவித்தார்கள். எல்லாம் விதிகளின் பயன் என பொறுமையோடு ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்ற கூற்றுக்கு உறுதியாக நமக்கான காலம் மீண்டும் வரும் என நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

வனவாசம் மேற்கொண்ட கால கட்டத்தில் அவர்கள் இந்தியா முழுவதும் பல வழிபாட்டு தலங்களுக்கு தனியாகவும் இணைந்தும் சென்று வழிபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒருமுறை பாண்டவர்களில் மூத்தவரான தர்மன் தலைமையில் சேர்ந்து வழிபட்ட தலமாக இக்கோயில் உள்ளது. தர்மனை தலைமை ஏற்று வழிபட்டதால் இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு தர்மேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

Also Read: Sabarimala: சபரிமலை போகிறவர்கள் மறக்காமல் இந்த கோயிலுக்கும் போங்க!

இந்தக் கோயிலில் தியான கோலத்தில் அமைந்துள்ள நந்தியம் பெருமானை வழிபட்டு உள்ளே சென்றால் அழகிய மகா மண்டபம் உள்ளது. அங்கு இருக்கும் கருவறையில் தர்மேஸ்வரர் லிங்க ரூபமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு நாளும் மதிய நேரத்தில் இறைவன் மீது சூரிய ஒளி படுவது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இவரை வணங்கி விட்டு வெளியே வந்தால் மகா மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி நின்ற கோளத்தில் காட்சி தருகிறார் தர்மசம்வர்த்தினி. பெண்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் இந்த அம்பாள் ஸ்பெஷலானவர் என்பதால் ஆண்களை விட பெண் பக்தர்கள் கூட்டத்தால் இக்கோயில் களை கட்டும்.

இந்த தர்மேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவனுக்குரிய முக்கிய விழாக்கள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் இந்த கோயிலில் பக்தர்கள் வழிபாட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் கூடி திருவாசகம் தேவாரம் பாடி கடவுளை வழிபடுகிறார்கள்.

Also Read: “பள்ளிக்கட்டு சபரிமலைக்கு” பாடல் உருவான விதம் தெரியுமா? – பிரமிக்க வைக்கும் தகவல்கள்!

வாழ்க்கை எப்போதுமே போராட்டமாக இருக்கிறது, எது எடுத்தாலும் எதிர்மறையான முடிவாக இருக்கிறது உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படும் பக்தர்கள் இந்த தர்மசங்கர்த்தினி உடனுறை தர்மேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் மன உறுதியுடன் வாழ்க்கையில் போராடி ஜெயிக்க கூடிய நிலையை பெறலாம் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பணியிடங்கள் அரசியலில் பதவி பொறுப்புகளை இழந்தவர்கள் தவறான குற்றச்சாட்டுகளால் வேலையை பறிகொடுத்தவர்கள் இங்கு வந்து வழிபட்டுவதால் அவர்களுக்கு இழந்த பதிவையும் பொறுப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்