Kandha Sasti 2024: கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்க முடியவில்லையா? ஆறு நாட்களும் இந்த முறையில் தீபம் ஏற்றுங்கள்…

Lighting Diya on Kandha Sasti days: நவம்பர் 2 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. ஆறு நாட்களும் விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலமாக ஆறு நாட்கள் விரதம் இருந்த பலனை அடைய முடியும். மேலும் பணம், பொருளாதார சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். என்னென்ன பொருட்களை பயன்படுத்தி இந்த தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Kandha Sasti 2024: கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்க முடியவில்லையா? ஆறு நாட்களும் இந்த முறையில் தீபம் ஏற்றுங்கள்...

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

02 Nov 2024 07:43 AM

கந்த சஷ்டி விரதம் என்பது சரியாக ஆறு நாட்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதம் ஆகும். ஐப்பசி மாதத்தில் அம்மாவாசை முடிந்து வரும் பிரதமை திதியிலிருந்து சரியாக ஆறு நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்க வேண்டும். அதன்படி நவம்பர் 2ஆம் தேதியிலிருந்து இந்த கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. முருகனை எப்படி எல்லாம் வழிபட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியெல்லாம் இந்த ஆறு நாட்களும் வணங்கி கொள்ளுங்கள். உங்களால் ஆறு நாட்களும் விரதம் கடைபிடிக்க முடியவில்லை என்றால் இந்த முறையில் ஆறு நாட்களும் ‌மாலை நேரத்தில் தீபம் ஏற்றுவது மூலமாக விரதம் இருந்த பலன் அடைய முடியும். இந்த தீபம் ஏற்றுவதின் மூலமாக முருகப்பெருமானின் அருளையும், செவ்வாய் பகவானின் அருள், மகாலட்சுமி தாயாரின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும். இந்த தீபத்தை தொடர்ந்து ஆறு நாட்கள் ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றுவதற்கு தேவையான பொருட்கள்:

செவ்வாய் பகவானின் அருளைப் பெறுவதற்காக முதலாக துவரம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்திருந்தால் கடன் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் இருக்காது. அடுத்ததாக ஒரு அகல் விளக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு அருகில் வைப்பதற்கு இரண்டு சில்லரை நாணயங்களும் ஒரு துண்டு மஞ்சளும் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் என்பது மங்களகரமானது மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாருக்கு உகந்தது.

Also Read: Vastu Tips: வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க பூஜை அறை குறிப்புகள்..!

பூஜை செய்யும் முறை:

தினமும் பூஜை அறையில் ஏற்றும் விளக்கை ஏற்றிவிட்டு, பின் ஒரு மரபலகையில் தட்டை வைத்து அதில் துவரம் பருப்பை பரப்பிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் அகல் விளக்கினை வைத்து அதற்கு இருபுறமும் சில்லறை நாணயங்களை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கிற்கு முன்பு மஞ்சள் துண்டை வைத்துவிட வேண்டும். பின்பு நல்லெண்ணெய் ஊற்றாமல் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். முருகனுக்கு நெய் விளக்கு மிகவும் பிடித்தது. மேலும் முருகப்பெருமாள் ஒரு இனிப்பு பிரியர். எனவே இனிப்பில் எந்த நெய்வேத்தியம் வேண்டுமானாலும் செய்து வைக்கலாம். இந்த தீபத்தை சரியாக நவம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்ற வேண்டும். பொதுவாக பூஜை அறையில் விளக்கு எவ்வளவு நேரம் எரியுமோ அந்த நேரம் இந்த அகல் விளக்கு இருந்தால் போதுமானது. இதை போல் கந்த சஷ்டி விரதம் முடியும் வரை மாலை நேரத்தில் இந்த தீபம் ஏற்ற வேண்டும்.

சூரசம்காரம் முடிந்த பிறகு அகல்விளக்கு அருகில் வைக்கப்பட்ட சில்லறை நாணயங்கள் மற்றும் மஞ்சளை முடிந்து அலமாரியில் வைத்து விட வேண்டும். அந்த நாணயத்தை தவறவிடுவதோ பிறருக்கு கொடுப்பதோ கூடாது. துவரம் பருப்பை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. பறவைகளுக்கு உணவாக அளிக்கலாம். ஆனால் காலில் மிதி படும் இடங்களில் வைக்கக்கூடாது. பறவைகளுக்கு உணவளிக்க முடியவில்லை எனில் அருகில் இருக்கும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கொட்டி விட வேண்டும். இடையில் வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டால் அந்த நாட்களில் தீபம் ஏற்றாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.

Also Read: தெய்வத்திற்கு உகந்த மற்றும் தவிர்க்க வேண்டிய பூக்கள் என்னென்ன தெரியுமா?

முருகப்பெருமானும் எண் ஆறும்:

முருகப்பெருமானுக்கு ஆறு என்ற எண்ணுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. முருகனை வளர்த்த கார்த்திகை பெண்கள் ஆறு. சரவணபவ என்னும் முருகனின் நாமமும் ஆறு. எனவே கந்த சஷ்டிக்கும் ஆறு நாட்களுக்கும் விசேஷ ஒற்றுமை உள்ளது. அதேபோல் ஆறு நாட்களும் தீபம் ஏற்றுக்கொள்வது தனி சிறப்பாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாள் தீபம் ஏற்றும் பொழுதும் ஒவ்வொரு வேண்டுதல்களை முன்வைத்து வணங்கலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!