Richest Temples: இந்தியாவின் பணக்கார கோயில்கள் எது தெரியுமா? விவரங்கள் இதோ… - Tamil News | List of top 5 richest Temples in India details in tamil | TV9 Tamil

Richest Temples: இந்தியாவின் பணக்கார கோயில்கள் எது தெரியுமா? விவரங்கள் இதோ…

Published: 

06 Oct 2024 09:23 AM

Richest Temples in India: இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் நீண்ட நெடிய வரலாறுகளும் தனிச்சிறப்பும் பெற்று இருக்கிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் கோடிக்கணக்கில் பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். பக்தர்களால் வழங்கப்படும் நன்கொடைகள், கோயில் சொத்து ஆகியவற்றை வைத்து இந்தியாவின் பணக்கார கோயில் எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 5பத்மநாபசுவாமி

பத்மநாபசுவாமி கோயில்: இந்தியாவில் உள்ள பணக்கார கோயிலில் இந்த கோயில் முதலிடம் பிடிக்கிறது. மகாவிஷ்ணு மூலவராக குடி கொண்டிருக்கும் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நூறடி உயரத்துடன் ஏழு வரிசைகள் கொண்ட கோபுரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்து கோயிலின் மொத்த சொத்து மதிப்பு 1,20,000 ஆகும். மேலும் இந்த கோயிலில் எண்ணற்ற புதையல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2 / 5

திருப்பதி கோயில்: ஆந்திர பிரதேசத்தில் திருப்பதியில் அமைந்துள்ள இந்த கோயில் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. உலகிலேயே பக்தர்களால் அதிகம் புனித யாத்திரை வரும் தளங்களில் ஒன்றான இந்தக் கோயில் மூலவர் பெருமாள் ஆவார்.‌ இந்த கோயிலுக்கு ஒன்பது டன் தங்கம் மற்றும் 14000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அதிக தங்க நகைகள் சேர்வதால் அவ்வப்போது நகைகள் ஏல விடப்படுவதும் உண்டு.

3 / 5

வைஷ்ணவா தேவி கோயில்: ஜம்மு & காஷ்மீர் அமைந்துள்ள இந்த கோயில் தன் குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் தாய் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றன. நன்கொடையாக மட்டுமே இந்த கோயிலுக்கு ரூபாய் 500 கோடி கிடைக்கிறது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 1.2 தன் தங்கம் இருக்கும் நிலையில் மேலும் கிலோ கணக்கு தங்கம் நன்கொடையாக பெறப்படுகிறது. இந்த பட்டியலில் இந்த கோயில் நான்காம் இடத்தில் இருக்கிறது.

4 / 5

சீரடி சாய்பாபா கோயில்: சீரடி சாய்பாபாவுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் உள்ளார்கள். இந்தக் கோயில் மகாராஷ்டிராவில் உள்ள அஹமது நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. சாய்பாபா 1858 ல் சீரடிக்கு வந்து 1918 முக்தி அடையும் வரை இங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.இங்கு நன்கொடையாக 2000 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்கில் 350 கிலோ தங்கம், 4000 கிலோவுக்கு மேல் வெள்ளி மற்றும் 1,800 கோடி ரூபாய் இருக்கிறது. இந்தக் கோயிலும் இந்தியாவின் பணக்கார கோயிலில் ஒன்றாக திகழ்கிறது.

5 / 5

குருவாயூர் கோயில்: கேரளாவில் குருவாயூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். இங்கு தங்க முலாம் பூசப்பட்ட 3.5 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பம் உள்ளது. மேலும் இந்த கோயிலின் சொத்து மதிப்புகள் 2500 கோடி ரூபாய் ஆகும்.

Follow Us On
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
Exit mobile version