Lunar Eclipse 2024: சந்திர கிரகணத்தால் 6 ராசிகளுக்கு காத்திருக்கும் நற்பலன்கள்..! - Tamil News | Lunar Eclipse 2024 these zodiac signs will get more benefits | TV9 Tamil

Lunar Eclipse 2024: சந்திர கிரகணத்தால் 6 ராசிகளுக்கு காத்திருக்கும் நற்பலன்கள்..!

Published: 

12 Sep 2024 19:09 PM

Astrology: செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் காலை 10.17 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 4 மணி நேரம் 6 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் 6 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம். 

Lunar Eclipse 2024: சந்திர கிரகணத்தால் 6 ராசிகளுக்கு காத்திருக்கும் நற்பலன்கள்..!

கோப்பு புகைப்படம்

Follow Us On

சந்திர கிரகணம்: வானில் ஏற்படும் அதிசய நிகழ்வுகளில் ஒன்று சந்திர கிரகணம். சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பொதுவாகவே கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் எந்தவித சுபகாரியங்களும் செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது. சந்திர கிரகணத்தின் போது நாம் ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் எதிர்மறை ஆற்றலில் இருந்து நாம் நேர்மறை ஆற்றலுக்கு மாறிவிடும்.நடப்பாண்டை பொறுத்தவரை இரண்டு சந்திர கிரகணங்கள் வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் 25ஆம் தேதி நிகழ்ந்து விட்டது. இந்த நிலையில் நடப்பாண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பகுதி சந்திர கிரகணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல நாடுகளிலும் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் காலை 10.17 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 4 மணி நேரம் 6 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தால் 6 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

  •  மேஷ ராசிகளுக்கு வரும் சந்திர கிரகணம் முக்கிய வளங்களை அளிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது எடுத்த காரியங்களும், நடைபெற வேண்டிய வேலைகளும் சிறிய முயற்சியிலேயே குறித்த நேரத்திற்குள் முடிவடையும். வருமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எந்தவிதமான குறையும் இருக்காத அளவுக்கு நிலை இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பளம் உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பணியாளர்களுக்கு சுப செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் மிகப்பெரிய அளவில் லாபம் இருக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் நல்ல விதமாகவே அமையப்போகிறது. அதாவது இதுவரை நிலுவையில் இருந்து முடிய வேண்டிய வேலைகள் அனைத்தும் முடியும். உறவினர் மூலமாக நல்லதொரு செய்தி வந்து சேரும். பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் எடுத்த காரியத்தில் வெற்றிப் பெறுவார்கள்
  • கடகம் ராசிக்காரர்கள்  இந்த சந்திர கிரகண நேரத்தில் நிதி சார்ந்த பிரச்சினைகள் இருந்து விடுதலை பெறுவார்கள். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும் அதே நேரத்தில் சில பிரச்சனைகள் எதிர்பாராத அளவுக்கு சுமூகமாக தீரும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தி பெறும். நண்பர்கள் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும் அதே வேலையில் உங்களுடைய எண்ணத்திற்கு குடும்பத்தின் சார்பாக சூழல் நிலவு பற்றி நிலவும்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கக்கூடிய பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். முக்கியமான காரியங்கள் குறித்த நேரத்தில் முடிவடைந்து மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் அதை வேளையில் எடுத்த அனைத்து முயற்சியுமே வெற்றியடையும். நிதி விவகாரங்கள் சார்ந்த பிரச்சினைகள் தீரும்.  தொழில் மற்றும் வேலைகளில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் இந்த சந்திர கிரகண காலத்தில் ஏற்படும். காதல் விவகாரங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரம் நிதி பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக விடுபடுவீர்கள். வருமானத்தை பெருக்கக் கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உடல் நலம் மற்றும் மாணவர்கள் எதிர்பார்த்த விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் காலத்தில் தொழில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் அது உடனடியாக தீரும். முடிய வேண்டிய முக்கியமான பணிகள் அனைத்தும் விரைந்து முடிவடையும் சூழல் உண்டாகும். கைக்கு கிடைக்க வேண்டிய பணம் உரிய நேரத்தில் வந்து சேரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தூரத்து உறவினர்கள் மூலம் சுப செய்தி வந்து சேரும். மன அழுத்தம போன்ற பிரச்சனையிலிருந்து வெளிப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகள் பெருகும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version