5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mahalaya Amavasya: பித்ருபக்‌ஷ நாட்களில் மறந்தும் கூட இதெல்லாம் வாங்காதீங்க!

புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி தொடங்கி அமாவாசை தேதி வரை வரையிலான நாட்கள் தான் இந்த பித்ரு பக்ஷம் காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடப்பாண்டு பித்ரு பக்ஷம் கடைபிடிக்கப்படுகிறது. பிரதமை முதல் அமாவாசை வரையிலான திதியில்தான் நம்முடைய முன்னோர்கள் கண்டிப்பாக மரணித்து இருப்பார்கள்.

Mahalaya Amavasya: பித்ருபக்‌ஷ நாட்களில் மறந்தும் கூட இதெல்லாம் வாங்காதீங்க!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 28 Sep 2024 19:00 PM

மஹாளய அமாவாசை: புரட்டாசி மாதத்தில் வரும் பித்ரு பக்ஷம் மிக முக்கியமான ஒன்று. காரணம் முன்னோர்கள் வழிபாடு என்பது அனைத்து மதங்களிலும் தவறாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்து மதத்தை பொறுத்தவரை இது காலம், திதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. முன்னோர்களை வழிபடாவிட்டால் நமது எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்திப்பார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் குலதெய்வம் குடும்பத்தின அரணாக இருப்பது போல முன்னோர்களும் நமது எதிர்கால சந்ததியின் அரணாக இருந்து காப்பதாக நம்பப்படுகிறது. இந்த முன்னோர்களை வழிபடும் பொருட்டு சாஸ்திரங்களில் அமாவாசை திதி குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் நிலையில் ஆடி,தை மற்றும் புரட்டாசி ஆகிய மூன்று மாதங்களில் வரும் அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

Also Read: Solar eclipse: மஹாளய அமாவாசையில் சூரிய கிரகணம்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

குறிப்பாக ஆடி மாதத்தில் பித்ரு உலகத்தில் இருந்து பூமிக்கு நம்மை காண முன்னோர்கள் புறப்படுவார்கள். புரட்டாசி மாதம் வரும் பெரிய அமாவாசையான மகாளய அமாவாசை அன்று பூமியில் தங்கி தை அமாவாசையில் அவர்கள் மீண்டும் பித்ரு உலகத்திற்கு திரும்புவார்கள் என்பது கணக்காக உள்ளது. இதில் புரட்டாசி மாசம் வரும் மஹாளய அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்த காலகட்டம் பித்ரு பக்ஷ காலம் என அழைக்கப்படும்.

புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி தொடங்கி அமாவாசை தேதி வரை வரையிலான நாட்கள் தான் இந்த பித்ரு பக்ஷம் காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடப்பாண்டு பித்ரு பக்ஷம் கடைபிடிக்கப்படுகிறது. பிரதமை முதல் அமாவாசை வரையிலான திதியில்தான் நம்முடைய முன்னோர்கள் கண்டிப்பாக மரணித்து இருப்பார்கள். அந்த திதியை இந்த காலகட்டத்தில் கணக்கில் கொண்டு அன்றைய நாளில் முன்னோர் வழிபாடு செய்தால் மிகவும் புண்ணியம் என கருதப்படுகிறது. அன்றைய நாளில் முன்னோர்களுக்கு வாழையிலை விரித்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் இட்டு வணங்கலாம். பின்னர் அமாவாசை என்று தர்ப்பணம் செய்து வழக்கம் போல வழிபாடும் மேற்கொள்ளலாம்.

Also Read:Mint Leaves Benefits: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை.. எண்ணற்ற நன்மைகளை தரும் புதினா இலைகள்..!

ஆனால் பித்ருபக்‌ஷ  காலகட்டத்தில் சில வகையான பொருள்களை நாம் வாங்க கூடாது என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. அவை நம் முன்னோர்களை கோபத்திற்கு ஆளாக்கும் எனவும் நம்பப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

பொதுவாக புரட்டாசி மாதத்தில் எந்தவித நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். இந்த மாதம் ஆன்மீக மாதம் என குறிப்பிடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் குறிப்பாக பித்ருபக்‌ஷ நாட்களில் புதிய வாகனங்கள், வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்கவே கூடாது. இது அசுபமாக கருதப்படுகிறது. காரணம் புதிய பொருட்களை வாங்கும் போது அதன் மீது தான் நம் காண கவனம் இருக்கும். அதனால் முன்னோர்களை நாம் நினைக்க மாட்டோம் என்பதால் எப்படி செய்யக்கூடாது.

மேலும் விலை உயர்ந்த நகைகள் ஆடைகள், ஆடம்பர பொருள்கள் புரட்டாசி மாத காலத்தில் வாங்க கூடாது. ஆடம்பரம் நம் வாழ்க்கைக்குள் வரும்போது நம்முடைய வழக்கமான வாழ்வியல் காணாமல் சென்று விடும். முன்னோர் வழிபாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தப் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எலக்ட்ரானிக் பொருட்கள், டிஜிட்டல் சாதனங்கள் அது தொடர்பான எதையும் வாங்கவே கூடாது. குடும்ப நல்லிணக்க சூழல் இதனால் கெடுவதற்கு வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. இம்மாதம் ஆன்மீக மாதம் என்பதால் முன்னோர்களை வணங்குவதோடு மட்டுமல்லாமல், ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மேலும் வீட்டை புதுப்பிப்பது புதிய பொருட்கள் வாங்குவது போன்ற எந்த சின்ன செயல்கள் என்றாலும் அதனை தள்ளி வைக்க வேண்டும். அதேபோல் நீங்கள் இந்த காலகட்டத்தில் எதை வாங்கினாலும் பித்ருபக்ஷத்தின் போது எதை வாங்கினாலும் வீட்டில் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News