Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜை.. கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு… என்ன தெரியுமா? - Tamil News | maximum of 80000 pilgrims allowed per day at mandala makaravilakku season in sabarimala temple tamil news | TV9 Tamil

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜை.. கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு… என்ன தெரியுமா?

Updated On: 

06 Oct 2024 19:52 PM

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதவாது, மண்டல, மகர விளக்கு பூஜையின்போது ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு பூஜை.. கட்டுப்பாடுகளை விதித்த கேரள அரசு... என்ன தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோயில்

Follow Us On

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதவாது, மண்டல, மகர விளக்கு பூஜையின்போது ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரபலம். அந்த கோயிலுக்கு கேரளாவிலிருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகைதருவார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வருடம் முழுவதும் பக்தர்கள் அங்கு செல்வது வழக்கம். அந்த புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை

அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், சபரிமலை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், சபரிமலை கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசன் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26ஆம் தேதி அன்று மண்டல பூஜையுடன் நிறைவடையும்.

அதன்பிறகு மகரவிளக்கு சீசனுக்காக இந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜையுடன் ஜனவரி 14ஆம் தேதி நிறைவடையும். இந்த மண்டல மகர விளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: இந்தியாவின் பணக்கார கோயில்கள் எது தெரியுமா? விவரங்கள் இதோ…

கடந்த வருடம் க்தர்கள் வருகை அதிகரித்தாலும், கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தவறியதாலும் பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டதாக தெரிகிறது. எனவே, பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்டுப்பாடுகள் என்னென்ன?

இதனால், மகர, மண்டல சீசனில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு சிரமமின்றி தரிசனம் செய்து திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், பூஜை காலத்தில் தினமும் 80 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.

இணையம் மூலம் முன்பதிவு செய்யும் போது எந்த வழியாக யாத்திரை மேற்கொள்வது என்பதை என்பதை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். இம்முறை நிலக்கல், பம்பை பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் நிறைவு பெற உள்ளது.

Also Read: ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கிறதா? அதிலிருந்து விடுபட இந்த பரிகாரங்கள் மற்றும் பூஜையை செய்யுங்கள்…

மேலும் பாதையிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளம் மூலம் தரிசனத்திற்காக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினமும் வெல்லம் கலந்த பால் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
Exit mobile version