Money Astrology: சந்திர மங்கள யோகம்.. 6 ராசிகளுக்கு கொட்டப்போகும் பண மழை! - Tamil News | Money Astrology these 6 zodiac signs will get sudden money luck | TV9 Tamil

Money Astrology: சந்திர மங்கள யோகம்.. 6 ராசிகளுக்கு கொட்டப்போகும் பண மழை!

வரும் அக்டோபர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் செவ்வாயும் சந்திரனும் கடக ராசியில் இணைந்துள்ளனர். இவ்விரு கிரகங்களின் சந்திப்பால் தன யோகமாக சந்திர மங்கள யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 27ம் தேதி வரை தொடர்கிறது. இந்த யோகத்தால் வருமானத்தில் நல்ல உயர்வு, கூடுதல் வருமான முயற்சிகளில் வெற்றி, திடீர் நிதி ஆதாயம், கடன் பாக்கிகள் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.

Money Astrology: சந்திர மங்கள யோகம்.. 6 ராசிகளுக்கு கொட்டப்போகும் பண மழை!

கோப்பு புகைப்படம்

Published: 

24 Oct 2024 09:30 AM

ஜோதிடப்பலன்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் பலன்கள் என்பது மிக முக்கியமானவை. நம்முடைய வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களை முடிவு செய்வதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பார்த்தால் வரும் அக்டோபர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் செவ்வாயும் சந்திரனும் கடக ராசியில் இணைந்துள்ளனர். இவ்விரு கிரகங்களின் சந்திப்பால் தன யோகமாக சந்திர மங்கள யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 27ம் தேதி வரை தொடர்கிறது. இந்த யோகத்தால் வருமானத்தில் நல்ல உயர்வு, கூடுதல் வருமான முயற்சிகளில் வெற்றி, திடீர் நிதி ஆதாயம், கடன் பாக்கிகள் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பங்குகள் மற்றும் முதலீடுகள் செய்வதற்கு இது மிகவும் சாதகமான நேரமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சந்திர மங்கள யோகத்தால் மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

  1. மேஷம்: இந்த ராசிக்கு நான்காம் இடத்தில் செவ்வாயும் சந்திரனும் இணைவதால், நிதி விவகாரங்கள் மற்றும் சொத்து விவகாரங்கள் நன்றாக இருக்கும். சொத்து தகராறு சுமுகமாக தீர்க்கப்பட்டு சொத்து கைமாறும். நில ஆதாயம் உண்டாகும். சொத்து விற்பனையில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சொந்த வீடுக்காக எடுக்கும் முயற்சிகள் பலன் தரும். வருமானத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. பங்குகள் மற்றும் முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக அமையும்
  2. கடகம்: இந்த ராசிக்கு அதிபதியான சந்திரன் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத நில ஆதாயம் மற்றும் பெற்றோரால் சொத்து சேரும். தனிப்பட்ட சொத்து மதிப்பு அதிகரிக்கும். வருமானத்தை பல வழிகளில் வளர்க்கலாம். வேலையில் சம்பளமும்,  தொழில், வியாபாரத்தில் லாபமும் நன்றாக இருக்கும். பங்குகள் வாங்குவதற்கும் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கும் நல்ல நேரம். பங்குச்சந்தை முதலீட்டு வணிகம் லாபம் தரும்.
  3. கன்னி: இந்த லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் செவ்வாயும் சந்திரனும் இணைந்திருப்பதால் வருமான முயற்சிகள் எதிர்பார்த்ததை விட லாபகரமாக அமையும். பல வழிகளில் வருமானம் பெருகும். லாபகரமான தொடர்புகள் ஏற்படும். சொத்து மற்றும் வீட்டு ஒப்பந்தங்களுக்கு மிகவும் சாதகமான நேரமாக உள்ளது. தனிப்பட்ட சொத்து மதிப்பு வெகுவாக உயரும். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயமாகும் வாய்ப்புள்ளது. பங்குகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் நன்றாக இருக்கும். திடீர் பண வரவும் வாய்ப்பு உண்டு.
  4. துலாம்: இந்த ராசிக்கு பத்தாமிடத்தில் சந்திர மங்கள யோகம் ஏற்படுவதால் உத்யோகத்தில் சம்பளம், கூடுதல் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எந்தவொரு நிதி முயற்சியும் நிறைவேறும். பங்குகள்,முதலீடுகள்,  நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை நன்றாக  செல்லும். சொத்துப் பிரச்னைகள் சுமூகமாக தீரும். தந்தையின் பக்கத்திலிருந்து சொத்து வர வாய்ப்புள்ளது. வீட்டில் செல்வம் நன்றாக வளர வாய்ப்புள்ளது.
  5. விருச்சிகம்: இந்த ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் சந்திர மங்கள யோகம் அமைவதால் ஓரிரு முறை தன யோகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இங்கு அதிபதி  ஆட்சியாதிபதி செவ்வாயுடன் இணைவதால் திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்நியச் செலாவணி ஆதாயமும் உண்டு. உத்தியோகத்தில் சம்பளம் கூடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். பங்குகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் முதலீடு செய்வது அதிகபட்ச லாபத்தை அளிக்கிறது.
  6. மீனம்: இந்த ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைந்திருப்பது இந்த ராசிக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். வருமான அடிப்படையில் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றியடையும். சொத்து தகராறு தீரும். நீதிமன்ற வழக்குகளும் சாதகமாக அமையும். கூடுதல் வருமான முயற்சிகள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட பலனைத் தரும். தொழில், வியாபாரம் லாபப் பாதையில் செல்லும். உத்தியோகத்தில் நல்ல வருமானம் பெருக வாய்ப்பு உண்டு. வரவேண்டிய பணம் கிடைக்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!
கர்ப்ப காலத்தில் கால் வீங்க காரணம் இதுதான்
மண் இல்லாமல் வளரக்கூடிய 10 செடிகள்!