Money Astrology: 6 ராசிக்கு பண யோகம்.. கிரகப்பெயர்ச்சியால் தீரும் பொருளாதார பிரச்னை..
Astrology: நேரம் சரியாக இல்லாவிட்டால் இறக்கத்தை சந்திக்க நேரும். இப்படியான நிலையில் பொருளாதார பிரச்னையில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். ஒருபக்கம் கடன் பிரச்னை, மறுபக்கம் வருமானம் அதிகரிக்காமல் இருப்பது போன்ற சிக்கலில் சிக்கி தவிப்போம்.
கிரகப்பெயர்ச்சி: ஜாதகத்தில் கிரகப்பெயர்ச்சி என்பது மிக முக்கியமானது. நம் வாழ்வின் ஒவ்வொரு நிலைமைக்கும் இந்த கிரகப்பெயர்ச்சி என்பது முக்கிய காரணமாக அமைகிறது. சில நேரங்களின் கிரகப்பெயர்ச்சி மிகப்பெரிய அளவில் நன்மைகளை வாழ்க்கையில் அள்ளித்தரும். அதேசமயம் நேரம் சரியாக இல்லாவிட்டால் இறக்கத்தை சந்திக்க நேரும். இப்படியான நிலையில் பொருளாதார பிரச்னையில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். ஒருபக்கம் கடன் பிரச்னை, மறுபக்கம் வருமானம் அதிகரிக்காமல் இருப்பது போன்ற சிக்கலில் சிக்கி தவிப்போம். ஆனால் நடக்கவுள்ள கிரகங்களின் பெயர்ச்சி மேஷம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்னையில் விடுபட உதவும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
- மேஷம்: இந்த ராசி பணத்திற்கு அதிபதியான வியாழனுடன் கூட்டணி அமைவதால், வருமானம் அதிகமாகவும், கடன்கள் மற்றும் செலவுகள் மிகவும் குறைவாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. புதிய நிதி சிக்கல்கள் எதுவும் வராது. வருமானம் நாளுக்கு நாள் பெருக வாய்ப்புள்ளதால், பணப் பிரச்சனைகள், நிதித் தேவைகளில் இருந்து படிப்படியாக விடுபட வாய்ப்பு உள்ளது. வீடு மற்றும் கார் கடன்கள் இருப்பது அதிக சிக்கலை ஏற்படுத்தாது.
- கடகம்: இந்த ராசிக்கு பண ஸ்தானத்தில் புதனும், சுக்கிரனும் இருக்கிறது. அதேசமயம் பண அதிபதியான சூரியனும் சந்திக்க உள்ளது. மேலும் ஆறாம் வீட்டு அதிபதியான குரு பாக்ய ஸ்தானத்தில் இருப்பதால், மிகக் குறுகிய காலத்தில் பணப் பிரச்சனைகள் விலக வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் திட்டமிட்டபடி நிதி பிரச்சனைகளை சமாளிக்க முடியும். மேலும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
- துலாம்: பண அதிபதி செவ்வாயும் ஆறாம் அதிபதி குருவும் இந்த ராசிக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் வருமான முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடரும். இதன் விளைவாக, நிதி சிக்கல்கள் பெருமளவில் குறையும். ஓரிரு மாதங்களில் இந்த ராசிக்காரர்கள் வீட்டுக் கடன் தவிர அனைத்து வகையான கடன்களிலிருந்தும் முற்றிலும் விடுபடுவார்கள்.
- விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் பணவீட்டுக்கு அதிபதியான வியாழன் இணைவதால் ஆண்டு முழுவதும் வருமானத்துக்குக் குறைவே இருக்காது. பல தரப்பிலிருந்து வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், வியாழன் இருப்பதால் நீண்ட கால கடன்களிலிருந்தும் விடுபடுவீர்கள். எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கத் தயாராக இருக்கும் இந்த ராசிக்கு பல வருமான ஆதாரங்கள் கூடி வரும். படிப்படியாக கடனில் இருந்து விடுபடுவீர்கள்.
- மகரம்: பணவீட்டின் அதிபதியான சனி இந்த ராசியில் சஞ்சரிப்பதால் வருமான வழிகள் விரிவடையும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, கடன் பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடிகள் படிப்படியாக நீங்கும். இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்க வாய்ப்பில்லை. இந்த வருடம் முழுவதும் பண அதிபதி மிகவும் சாதகமாக இருப்பதால், பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.
- மீனம்: பணவீட்டின் அதிபதியான செவ்வாயும், ஆறாம் வீட்டின் அதிபதியான சூரியனும் இந்த ராசிக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கிறார்கள். இதனால், வருமானம் அபரிமிதமாக உயர வாய்ப்புள்ளது. சம்பளம், தொழில், வியாபாரத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கடன் பிரச்சனைகளில் இருந்து வெகு விரைவில் விடுபடுவார்கள். கடனைத் தவிர, இந்த ராசிக்காரர்கள் கூடுமானவரை செலவுகளைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)