கார்த்திகை மாத ராசிபலன்கள்.. துலாம் முதல் மீனம் வரை முழு பலன்கள் இதோ!

Karthigai Month Horoscope: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் எட்டாவது தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாத ராசி பலன்

கார்த்திகை மாத ராசிபலன்கள்.. துலாம் முதல் மீனம் வரை முழு பலன்கள் இதோ!

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

15 Nov 2024 08:53 AM

துலாம்: தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் ஒரு தெளிவு, முன்னேற்றம் கிடைக்கும். பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை என்றாலும் திருப்திகரமாக செல்லும். உங்களுடைய கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். செலவுகள் அதிகம் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தன வரவு இருக்கும். வீடு, மனை வாங்குவதற்கு சிறந்த நேரம் இது. ஆன்மீக விஷயமாக செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். உங்களால் கொடுக்கப்படும் வாக்குகள் நிறைவேற்றப்படும்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் ஆதரவாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் இருக்கும். எடுத்த காரியம் அற்புதமாக நிறைவேறும்.

விருச்சிகம்:

பெரிய முன்னேற்றங்கள் ஏற்படாது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தன வரவு வருவதில் சில சிக்கல் உண்டு. உடன்பிறப்புகள் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும்.

கடன் சுமையில் இருந்தால் அதை கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் அதன் மூலம் பிரச்சினைகள் வர நேரிடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆன்மீக விஷயங்கள் மூலமாக உங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும். எனவே ஆன்மீக விஷயங்களில் அதிகம் ஈடுபடுங்கள். வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

தனுஷ்:

எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் ஓரளவு சிறப்பாக செயல்பட முடியும். செலவு மலைபோல் வந்து குவியும். ஆனால் இதை சமாளிக்க கூடிய பக்குவத்தையும் வருமானத்தையும் பெறுவீர்கள். வீண்பழி, அவமானங்கள் ஏற்படலாம். அரசுக்கு வரி கட்ட வேண்டியது இருந்தால் அதை தவறாமல் கட்ட வேண்டும். அதன் மூலம் அவமானம் ஏற்படலாம். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் ஏற்படும்.

வீடு, மனை, வாகனம், இடமாற்றம் போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணை உறவினர்களுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மூத்த உடன்பிறப்புகள் உங்களுக்கு சில தொந்தரவுகளை கொடுக்கலாம்.

Also Read: கார்த்திகை மாத ராசிபலன்கள்.. மேஷம் முதல் கன்னி வரை முழு பலன்கள் இதோ!

மகரம்:

ஆன்மீக விஷயங்கள் மூலமாக உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்படும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்பட்டாலும் உடன்பிறப்புகளால் சில குழப்பங்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்விக சொத்துக்கள் உங்களிடம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களின் உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கிடைக்கும்.

உறவினர்களால் சில குழப்பம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நண்பர்கள் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டுக்கு சென்று படிக்க நினைப்பவர்கள் வேலை தேட நினைப்பவர்கள் இந்த மாதத்தில் முயற்சி செய்யலாம்.

கும்பம்:

உடல் ஆரோக்கியம், பேசுகின்ற வார்த்தை, உறவினர்கள்‌ ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். இருக்கக்கூடிய கஷ்டங்கள் குறையும். எடுக்கக்கூடிய காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். செலவுகள் வந்து கொண்டிருக்கும். ஒரு முடிவு எடுத்தால் அதை தள்ளி போடாமல் உடனே முடிக்க இல்லையென்றால் அதை முடிக்கவே முடியாமல் போகக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் இருப்பதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

தொழில், வியாபாரத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். தந்தையின் உடலில் கவனம் தேவை. வீண்பழி, அவமானங்கள் நேரிடலாம். வாழ்க்கைத் துணை மூலமாக சில முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களுக்கு எதுவும் தேவை என்றால் கடன் கொடுக்க வேண்டாம். மாறாக தானமாக கொடுத்து விடலாம். குடும்பத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு சென்று படிக்க நினைப்பவர்களுக்கு சில தடைகள் ஏற்படும்.

மீனம்:

தைரியத்தோடு மகிழ்ச்சியிலே மேற்கொண்டால் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கைத் துணை, நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளை அனுபவிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அருமையான லாபங்கள் வந்து குவியும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம்.

Also Read: Varahi Amman: காளியின் சொரூபம்… வாராகி‌ அம்மனை வீட்டில் வைத்து வணங்கலாமா?

ஆன்மீக விஷயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தந்தை மற்றும் தந்தை வழி உறவு மூலமாக சில நன்மைகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் விலக ஆரம்பிக்கும். கடன் சுமை குறைவதற்கு ஒரு வருமானம் வரும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!
தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?