5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கார்த்திகை மாத ராசிபலன்கள்.. மேஷம் முதல் கன்னி வரை முழு பலன்கள் இதோ!

Karthigai Month Horoscope: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் எட்டாவது தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாத ராசி பலன்...

கார்த்திகை மாத ராசிபலன்கள்.. மேஷம் முதல் கன்னி வரை முழு பலன்கள் இதோ!
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 15 Nov 2024 03:22 AM

மேஷம் : பணவரவு சில இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். நீங்கள் கொடுக்கும் வாக்கை உங்களால் நிறைவேற்ற முடியாது. எனவே இந்த மாதம் வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து மறையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிதானம் வேண்டும். மருத்துவ செலவு பெரிதாக வராது என்றாலும் உடல் ஆரோக்கியத்தை சற்று கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். வீண் பழி, அவமானங்கள் ஏற்படாது. உங்களுடைய முயற்சியில் வீண் போகாது. உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சொத்துக்களில் சில பிரச்சினைகள் ஏற்படும். வீடு, மனை, வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது.‌

சீருடை பணியாளர்களான காவலர் ராணுவம் தீயணைப்பு துறை மருத்துவத் துறையில் வேலை பார்க்கும் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம் பதவி மாற்றம் பதவி உயர்வு சம்பள உயர்வு சற்று கால தாமதத்திற்கு பிறகு நிறைபெறும். தாயார் உடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தாய்வழி உறவினர்களிடையே அனாவசிய பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளக்கூடாது. பூர்வீக சொத்துக்களை சில பிரச்சனைகள் வரலாம். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். எல்லா விதத்திலும் முன்னேற்றங்கள் வந்து சேரும். வீடுகளில் சுப காரியங்கள் நடைபெறும்.

ரிஷபம்:

இந்த ராசிக்காரர்களுக்கு சில முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறு சிறு பிரச்சனைகள் வரும் ஆனால் அவை பெரிய அளவில் பாதகங்களை ஏற்படுத்தாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானமான வெற்றி உங்களை தேடி வரும். குழந்தைகளின் முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்கள் உங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கை துணை மிகவும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் உங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருப்பார்கள். உங்களின் பூர்வீக சொத்து உங்களுக்கு வந்து சேரும். உடன்பிறப்புகளால் சில குழப்பங்கள் ஏற்படும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத ரூபத்தில் நிறைய செலவுகள் வரும். நினைத்த காரியங்கள் நடைபெறும். வெளிநாடுகளில் படிக்க நினைப்பவர்கள் வேலை பார்க்க நினைப்பவர்கள் இந்த மாதத்தில் முயற்சி செய்தால் கைகூடும்.

மிதுனம்:

இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சில இடமாற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஒருவித ஏற்றம் ஏற்படும். நல்ல விஷயத்துக்கான செலவுகள் நிறைய ஏற்படும். சுகத்திற்கு குறைவில்லை. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கடன் சுமை குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Also Read: கஜகேசரி யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள் என்ன தெரியுமா?

உங்களால் கொடுக்கப்படும் வாக்குறுதியை காப்பாற்ற முடியாது. எனவே வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் குடும்பத்திற்கு என எதுவும் செய்ய முடியாது. கண்டபடி செலவு செய்யாமல் இருப்பது உங்களை பலவற்றில் இருந்து காப்பாற்றும். பண ரீதியாக உங்களுக்கு பல அவமானங்கள் ஏற்படலாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

கடகம்:

உங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களிலும் தெளிவு இருக்காது. குழந்தைகள் மூலம் உங்களுக்கு சந்தோசம் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி இடத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் குடும்பத்தில் சுபிட்ச போக்கு இருக்கும்.

தொழில்,உத்தியோகம், வியாபாரம் எதிலும் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகளின் படிப்பு உத்தியோகம் போன்ற விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. பண வரவு இருக்கும். திடீர் செலவுகள் நிறைய ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்:

பெரிய அளவில் இந்த ராசிக்காரர்களுக்கு பாதகம் இருக்காது. ஆனால் எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயமாக இருக்கும். சுகத்திற்கு குறை இருக்காது. பொன்,பொருள்,ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. தந்தையின் உடல் நலத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வது அவசியம்.

மருத்துவச் செலவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் குழப்பம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வீண்பழி, அவமானங்கள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது .

Also Read: Thulasi Malai: ஐயப்பனுக்கு பிரியமான துளசி மாலை.. யாரெல்லாம் அணியலாம் தெரியுமா?

கன்னி:

இந்த ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்குகளுக்காக வழக்குகள் இருந்தால் நல்ல வழக்கறிஞர் வைத்து வாதாட வேண்டும். இல்லையென்றால் பல வாய்தாக்களை சந்திக்க நேரிடும். எடுத்துக் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.

முயற்சிகள் வெற்றியடையும். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். முயற்சிகள் மூலமாக மட்டுமே உங்களுக்கு நன்மை பயக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு சில காலதாமதம் ஏற்படும்.

 

Latest News