5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Naga Panchami: நாகபஞ்சமி வழிபாடு.. இப்படி செய்தால் புண்ணியம் கிடைக்கும்!

Aadi Masam: சர்ப்ப தோஷம் என்பது திருமண வரன் அமைவதில் தடை, மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையாமல் இருப்பது போன்ற பிரச்னைகளை உண்டாக்கலாம். இவர்களின் தோஷத்தை போக்க பல்வேறு தலங்கள் உள்ள நிலையில், அவற்றிற்கு செல்வது ஒருபக்கம் இருந்தாலும் நாக தேவதைகளுக்கு என சிறப்பு நாளாக கொண்டாடப்படும் நாக பஞ்சமி தினத்தில் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

Naga Panchami: நாகபஞ்சமி வழிபாடு.. இப்படி செய்தால் புண்ணியம் கிடைக்கும்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 Aug 2024 12:29 PM

நாக பஞ்சமி வழிபாடு: ஆடி மாதம் என்றால் திரும்பும் திசையெங்கும் திருவிழாக்கோலம் தான் நியாபகம் வரும். அந்த வகையில் பல ஊர்களில் பல பெயர்களில் குடிகொண்டுள்ள அம்மனுக்கு திருவிழாக்கள் இந்த மாதத்தில் தான் நடத்தப்படும்.  என்னதான் ஜாதகத்தில் பல அதிர்ஷ்டம் கொடுக்கும் யோக அமைப்பு இருந்தாலும், சர்ப்ப தோஷம் இருந்தால் அவைகளின் பலன்களை நம்மால் பெற இயலாது. சர்ப்ப தோஷம் என்பது திருமண வரன் அமைவதில் தடை, மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையாமல் இருப்பது போன்ற பிரச்னைகளை உண்டாக்கலாம். இவர்களின் தோஷத்தை போக்க பல்வேறு தலங்கள் உள்ள நிலையில், அவற்றிற்கு செல்வது ஒருபக்கம் இருந்தாலும் நாக தேவதைகளுக்கு என சிறப்பு நாளாக கொண்டாடப்படும் நாக பஞ்சமி தினத்தில் வழிபாடு மேற்கொண்டால் சகலவித தடைகளும் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: Naga Panchami: நாக பஞ்சமி எப்போது? – 5 ராசிக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்!

புராணங்களின் படி, பாம்பு பல தெய்வங்களுக்கு வாகனங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளது. கடவுளின் தலை முதல் கால் வரை தனக்கென ஒரு இடத்தை பாம்புகள் பிடித்திருக்கிறது. ஜாதகத்தை பொறுத்தவரை கிரகங்களில் உள்ள ராகு மற்றும் கேது ஆகிய இரண்டும் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் விரதம் இருந்து நாகங்களை வழிபடுவது மிகப்பெரிய அளவில் பலன்களை கொடுப்பதோடு, சர்ப்ப தோஷங்களையும் போக்கும் என்பது ஐதீகமாகும். நாக பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) அதிகாலை 12.36 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) அதிகாலை 3.14 மணிக்கு முடிவடைகிறது.

இன்றைய நாளில் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாக சிலைகளுக்கு பாலாபிஷேகம் அல்லது பூஜை செய்தால் நாக தோஷம் போகும் என்பது நம்பிக்கையாகும். ஒருவேளை நாக சிலைகளுக்கு அபிஷேகம் செய்யாமுடியாவிட்டால் சில ஊர் கோயில்களில் புற்று இருக்கும். அந்த கோயிலுக்கு வழக்கம்போல சென்று பால் ஊற்றி வெற்றிலை,பாக்கு, கற்பூரம் வைத்து வழிபாடு மேற்கொள்ளலாம். அன்று நாள் முழுவதும் திதி இருப்பதால் உங்களுக்கு ஏற்ற நேரத்தில் தேவையான வகையில் பூஜை வழிபாட்டை செய்யலாம். ஆனால் கண்டிப்பாக அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். நாக தேவதை அருளால் வீட்டில் செல்வம் பெருகுவதோடு மகிழ்ச்சியும், புண்ணியமும் அதிகரிக்கும்.

Also Read: Srivilliputhur Andal: “கோவிந்தா.. கோபாலா” – வெகுவிமரிசையாக நடந்த ஆண்டாள் கோயில் தேரோட்டம்!

வீட்டில் பூஜை செய்வோர் இந்நாளில் அதிகாலை எழுந்து நீராடி விட்டு பின்னர் தூய்மையான ஆடை அணிந்து கொள்ளுங்கள். சிவலிங்கம் சிலைக்கு நீர் படைத்து வழிபடலாம். சாமி படத்திற்கு முன் பால், பழம், இனிப்புகள் வைத்து நாகதேவதையை மனதில் நினைத்து வழிபடலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News