Naga Panchami: வருடத்திற்கு ஒருமுறை திறப்பு.. நாக பஞ்சமி நாளில் வணங்க வேண்டிய கோயில்!
Nagchandreshwar Temple: இம்முறை ஆகஸ்ட் 9ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகசந்திரேஸ்வரர் கோயில் திறக்கப்படும் என்றும், மறுநாள் ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 12 மணி வரை மட்டுமே கோயில் கதவுகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ஓராண்டுக்கு நாகசந்திரேஸ்வரா கோவில் மூடப்படும்.
நாகசந்திரேஸ்வர் கோயில்: ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று நாக பஞ்சமி. இது அம்மாதத்தின் வளர்பிறையின் 5வது நாளில் கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான நாக பஞ்சமி நிகழ்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும் கோயிலைப் பற்றி நாம் பார்க்கலாம். அந்த கோயிலில் பெயர் நாகசந்திரேஸ்வர் ஆலயம். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலின் மூன்றாவது தளத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தின் வளர்பிறையின் ஐந்தாம் நாளான நாக பஞ்சமி அன்று மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படுகிறது. அதற்கான காரணம், கோயிலின் சிறப்புகள் என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
Also Read: Relationship Advice: தம்பதிக்குள் காதலை குறைக்கும் ஸ்மார்ட்ஃபோன்.. நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!
கோயில் வரலாறு
இந்த கோயிலில் தக்ஷக் மன்னன் வசிப்பதாக இன்று வரை நம்பப்படுகிறது.நேபாளத்தில் இருந்து இங்கு வந்து மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோயிலில் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாக தேவியின் சிலை தனித்துவமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கே அருள்பாலிக்கும் நாகேந்திரன் சிலையில் விஷ்ணு மற்றும் லட்சுமிக்கு பதிலாக சிவன் பார்வதி அருள்பாலிக்கிறார்.வருடத்திற்கு ஒருமுறை நாக பஞ்சமியன்று திறக்கப்படும் இந்த ஆலயத்தில் அன்றைய நாளில் மூன்று முறை வழிபாடு நடத்தப்படுகிறது.
இக்கோயிலின் கருவறையில் ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்களால் வழிபடப்படும் சிலையில், சிவன் பார்வதி தன் மகன் கணபதியுடன் பத்துமுக நாகத்துடன் கூடிய பீடத்தில் அமர்ந்துள்ளார்கள்.இப்படியான கோயில் உலகிலேயே இதுமட்டும் தான் என்று கூறப்படுகிறது.
நாகச்சந்திரேஸ்வரர் கோயில்
இம்முறை ஆகஸ்ட் 9ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகசந்திரேஸ்வரர் கோயில் திறக்கப்படும் என்றும், மறுநாள் ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 12 மணி வரை மட்டுமே கோயில் கதவுகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ஓராண்டுக்கு நாகசந்திரேஸ்வரா கோவில் மூடப்படும். நாகச்சந்திரேஸ்வரரை தரிசிக்க பக்தர்களுக்கு 24 மணி நேரமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இக்கோயிலில் உள்ள நாகச்சந்திரேஸ்வரரை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். நாகபஞ்சமி தினத்தன்று பக்தர்கள் இங்கு தரிசனம் செய்தால் அனைத்து வகையான சர்ப்பதோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது. இதனால் பக்தர்கள் வெகு தொலைவில் இருந்து இங்கு வந்து தரிசனம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
Also Read: Vastu Tips: வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலவ இப்படி பண்ணலாம்!
வருடத்திற்கு ஒருமுறை
நாகசந்திரேஸ்வரர் கோவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படுவது ஏன் என்பதற்கும் ஒரு புராணக் கதை உண்டு. அதன் படி ஒருமுறை பாம்பு மன்னன் தக்ஷகன் சிவபெருமானை மகிழ்விக்க கடும் தவம் செய்தான். சிவன் அவன் தவத்தில் மகிழ்ந்தார். அவர் தக்ஷகுவிற்கு எவராலும் அழிக்க முடியாத வரத்தை கொடுத்து அருளினார். இதற்குப் பிறகு தக்ஷகன் சிவபெருமான் முன்னிலையில் மகாகாள் காட்டில் வாழ முடிவு செய்தான். ஆனால் அதற்குமுன் தக்ஷகன் தன் தனிச் சேவையில் எந்தத் தடங்கலும் வரக்கூடாது என்று விரும்பினான். தக்ஷகனின் விருப்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டு முழுவதும் கோயில் மூடப்படுகிறது. மேலும் நாக பஞ்சமி அன்று மட்டும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.