Navaratri 2024: நவராத்திரி பண்டிகை.. கொலு வழிபாடு மேற்கொள்வது எப்படி?
ஒன்பது நாட்கள் அம்பிகையே வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி பண்டிகையாகும். பலருக்கும் நவராத்திரியை எப்படி கொண்டாட வேண்டும், என்ன மாதிரியான வழிபாடு நடத்த வேண்டும் என்கிற கேள்வி இருக்கும். நாம் அனைவருக்கும் நவராத்திரி என்றாலே கொலு கண்காட்சிதான் நினைவுக்கு வரும். கோயில்கள் மட்டுமல்லாது இல்லங்களிலும் வைக்கப்படும் கொலு பொம்மைகள் நம்மை மனமகிழ்ச்சியோடு வரவேற்கும்.
நவராத்திரியின் சிறப்புகள்: புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே நம் அனைவருக்கும் நவராத்திரி பண்டிகையும், தசரா திருவிழாவும் தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட நவராத்தி விழாவின் சிறப்புகள் பல உள்ளது. ஆன்மிக பெருமகனார் கிருபானந்த வாரியார் சொல்லும் போது, ஆண்களுக்கு (ஆண் கடவுள்) எல்லாம் ஒரு ராத்திரி அது சிவராத்திரி. பெண்களுக்கெல்லாம் (பெண் கடவுள்) நவராத்திரி என குறிப்பிடுவார். சிவராத்திரி என்பது நாம் முழுக்க முழுக்க வீட்டில் எந்த வித வேலைகளையும் செய்யாமல் விரதம் இருக்கக்கூடிய நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் நவராத்திரி அப்படி கிடையாது. வீட்டிற்கு வருபவர்களுக்கு சிற்றுண்டி முதல் உணவு வரை வழங்கி சிறப்பிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நவம் என்கிற சொல்லுக்கு ஒன்பது மற்றும் புதுமை என வெவ்வேறு பொருள் உண்டு.
ஒன்பது நாட்கள் அம்பிகையே வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி பண்டிகையாகும். பலருக்கும் நவராத்திரியை எப்படி கொண்டாட வேண்டும், என்ன மாதிரியான வழிபாடு நடத்த வேண்டும் என்கிற கேள்வி இருக்கும். நாம் அனைவருக்கும் நவராத்திரி என்றாலே கொலு கண்காட்சிதான் நினைவுக்கு வரும். கோயில்கள் மட்டுமல்லாது இல்லங்களிலும் வைக்கப்படும் கொலு பொம்மைகள் நம்மை மனமகிழ்ச்சியோடு வரவேற்கும். இத்தகைய கொலு கண்காட்சி வைத்துள்ள வீடுகளுக்கு வாசம் செய்து வழிபாட்டில் பங்கேற்று நாம் இன்பம் பெறுவோம்.
Also Read: அக்டோபர் மாத ராசிபலன்… ஆரோக்கியத்தில் கவனம்.. முதல் 6 ராசிக்கான பலன்கள்!
நவராத்திரி கொண்டாட காரணம்
அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்வதற்காக தவம் செய்த ஒன்பது நாட்கள் தான் நவராத்திரி பண்டிகை ஆகும். அதாவது முப்பெரும் தேவியர் ஆகக்கூடிய விளங்கக்கூடிய மலைமகள், கலைமகள், அலைமகள் ஆகியோர் ஒரே ரூபமாக இணைந்து மகிஷாசுரனை வதம் செய்ததை தான் நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடுகிறோம்.இதன் பின்னணியில் மனித வாழ்க்கைக்கான ஒரு அர்த்தமும் உள்ளது. அதாவது நம்மிடையே உள்ள நற்பண்புகளை எல்லாம் ஒன்றாக திரட்டி தீய எண்ணங்களை அழிப்பதற்காக நம்மை பக்குவப்படுத்த தவக்காலமாக இந்த நவராத்திரி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கொலு கண்காட்சி
பல பேர் வீட்டில் பாரம்பரியமாக கொலு கண்காட்சி வைத்திருப்பதை காணலாம். ஆனால் எதற்காக இந்த கொழு வைக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. 3,5,7,9, 11 என்ற படிகளின் அடிப்படையில் கொலு கண்காட்சி வைக்கலாம்.
படிப்படியாக மனிதனின் வாழ்க்கை எப்படி உயர்ந்தது என்பதை இந்த படிநிலைகள் காட்டுகிறது. மற்றொன்று படிப்படியாக உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பதற்கான வழிபாடாகும். மனிதன் வாழ்க்கை படிப்படியாகத்தான் உயரும் என்பதை காட்டும் வாழ்வியல் நெறியாகவும் இந்த நவராத்திரி கொலு படிநிலைகள் அமைகிறது.
Also Read: Chennai jobs: 89 காலிப் பணியிடங்கள்.. சென்னை மாநகராட்சியில் அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!
கொலு வைப்பவர்கள் கவனத்திற்கு
ஒருவேளை நீங்கள் இந்த முறை தான் முதல் முறையாக கொலு வைக்கப் போகிறீர்கள் என்றால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம். காரணம் புதிதாக வைப்பவர்கள் அதனை எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தொல்காப்பியத்தில் கொலு கண்காட்சி வைப்பது குறித்து மிக தெளிவாக நமக்கு புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் படியில் ஓரறிவு உயிரினங்கள் ஆன மரம் செடி கொடி ஆகியவை வைக்க வேண்டும். இரண்டாம் படியில் ஈரறிவு உயிரினங்களான நத்தை, சங்கு போன்றவை இடம்பெற வேண்டும். மூன்றாம் படியில் மூவறிவு உயிரினங்களான கரையான், எறும்பு ஆகியவை இடம் பெறும்.
நான்காம் படியில் நண்டு, வண்டு போன்ற நான்கறிவு உயிரினங்களும், ஐந்தாம் படியில் பறவைகள்,விலங்கினங்கள் ஆகியவையும் இடம்பெறும். ஆறாம் படியில் மனிதர்கள், அவர்தம் பழக்க வழக்கங்கள், தொழில்கள் ,நடனம் ஆடுவது போன்ற பொம்மைகள் ஆகியவற்றை வைக்கலாம். ஏழாம் படியில் விவேகானந்தர், வள்ளலார் போன்ற மனிதர்களில் மகான்களாக கொண்டாடப்படும் நபர்களின் உருவங்களை வைக்கலாம்.
எட்டாம் படியில் கடவுள்களின் அவதார பொம்மைகளையும், அஷ்டலட்சுமிகளையும் வைக்கலாம். ஒன்பதாம் படியில் முப்பெரும் தேவர்களான சரஸ்வதி, பார்வதி, லட்சுமிதேவி ஆகியவையோடு பூரண கலச கும்பத்தையும் பிள்ளையார் பொம்மையும் வைக்கலாம். 10 மற்றும் 11ஆவது படியில் விருப்பமுள்ள பொம்மைகளை வைத்து வழிபடலாம்.
கொலு வைக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
ஒருவேளை வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் தினமும் நாம் வழிபடக்கூடிய கடவுளுக்கு வழக்கம்போல பூ வைத்து வழிபடுவதோடு இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் தினமும் ஒரு தானியங்களை வேக வைத்து நைவேத்தியம் செய்து அம்பாளுக்கு படைத்து வழிபடலாம். அந்த நைவேத்தியத்தை நம் வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது தாம்பூலத்தில் வைத்து கொடுக்க வேண்டும். காரணம் தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. நவராத்திரி தினத்தில் நம் இல்லத்திற்கு வருவோர்களுக்கு தாம்பூலத்தில் நைவேத்தியம் கொடுத்து மகிழ்ச்சியாக அனுப்பினால் லட்சுமி அருளை பெறலாம் என்பது ஐதீகம் ஆகும்.