Navrathiri 2024: துர்க்கை அம்மன் கையில் இருக்கும் ஆயுதங்கள் யார் கொடுத்தது தெரியுமா? - Tamil News | Navratri 2024 Do you know who gave the weapons in the hands of Goddess Durga? | TV9 Tamil

Navrathiri 2024: துர்க்கை அம்மன் கையில் இருக்கும் ஆயுதங்கள் யார் கொடுத்தது தெரியுமா?

Published: 

28 Sep 2024 22:00 PM

இந்து மதத்தில் நவராத்திரி பண்டிகை என்பது மிகவும் முக்கியமானது. நவராத்திரி விழா துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இவ்விழா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் 9 நாட்களும் துர்கா தேவிக்கு ஒன்பது வெவ்வேறு வடிவங்களில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அக்டோபர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி அக்டோபர் 12 ஆம் தேதி சனிக்கிழமை முடிவடைகிறது.

1 / 6இந்து

இந்து மதத்தில் நவராத்திரி விழா மிகவும் முக்கியமானது. நவராத்திரி விழா துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இவ்விழா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நாம் துர்கா தேவி கையில் இருக்கும் ஆயுதங்களை யார் யார் வழங்கியது என்பதை காணலாம்.

2 / 6

சுதர்சன சக்கரம் துர்கா தேவிக்கு விஷ்ணுவால் பரிசாக வழங்கப்பட்டது. துர்கா தேவி இந்த ஆயுதத்தால் பல அரக்கர்களைக் கொன்றாள்.திரிசூலம் துர்கா தேவியின் முக்கிய ஆயுதம். சிவபெருமான் அதை பரிசளித்தார்.

3 / 6

துர்கா தேவி கையிலிருக்கும் வாளை விநாயகப்பெருமான் கொடுத்ததாக நம்பப்படுகிறது. வில்லும் அம்பும் காற்றின் கடவுளான வாயு தேவனால் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

4 / 6

துர்கா தேவி கையில் சூலாயுதம் வைத்திருக்கிறார். வலிமையின் சின்னமாக கருதப்படும் இது எமதர்மன் மன்னன் கொடுத்ததாக புராணங்கள் சொல்லப்படுகிறது. கையிலிருக்கும் வஜ்ரா மற்றும் மணியை இந்திரன் கொடுத்தார்.

5 / 6

துர்கா தேவி கையிலிருக்கும் தெய்வீக சங்கு ஒலியால் மூன்று உலகங்களையும் அதிரச் செய்தாள். வருண பகவான் இந்த தெய்வீக சங்கை வழங்கினார்.

6 / 6

துர்கா தேவி கையிலிருக்கும் அக்னி சட்டி அக்னி தேவனால் வழங்கப்பட்டு மகிஷாசுரனுடன் கடுமையான போரில் ஈடுபட்டபோது பயன்படுத்தப்பட்டது.பிரம்மா துர்கா தேவிக்கு தாமரை மற்றும் கமண்டலத்தை பரிசாக வழங்கினார்.

Follow Us On
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
விஜய் பட நடிகை தான் இந்த சிறுமி...
குழந்தைகளிடம் பெற்றோர்கள் கேட்க வேண்டிய விஷயங்கள்!
Exit mobile version