Tamil NewsReligion > Navratri 2024 These items should be removed from your home before Navratri Day 1
Navarathiri: நவராத்திரி பண்டிகைக்கு முன் வீட்டில் இருக்கக்கூடாத பொருட்கள்!
நவராத்திரி பண்டிகை என்றாலே நம் வீட்டில் அம்பிகையின் வாசம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதனால் கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நவராத்திரியின் 9 நாட்களும் வீட்டை சுத்தப்படுத்தி, நாமும் சுத்தமாக இருந்து கடவுளை வணங்க வேண்டும், ஒன்பது நாட்கள் அம்பிகையே வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி பண்டிகையாகும். அதனை மனதில் கொண்டு செயல்பட்டு அவளின் அருள் பெற வேண்டும்.
கோப்பு புகைப்படம்
நவராத்திரி விழா இந்துக்களால் புனிதமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இது அம்பிக்கைக்குரிய விசேஷ தினமாக பார்க்கப்படுகிறது. மலை மகள், கலை மகள், அலை மகள் ஆகிய 3 பேரும் ஒன்றிணைந்து மகிஷாசுரனை வதம் செய்ய தவம் இருந்த காலமாகும்.
பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகைக்கான திதி அக்டோபர் 3 ஆம் தேதி நள்ளிரவு 12.18 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது
இந்த நவராத்திரி தொடங்குவதற்கு முன் நம் வீட்டிலிருந்து சில பொருட்களை வெளியேற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அதன்படி பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதால் அதனை வீட்டிலிருந்து அகற்றவும்.
அதேபோல உலர்ந்த பூக்களை வீட்டில் வைத்திருப்பது நல்லது இல்லை. மேலும் வீட்டில் குப்பைகளை மொத்தமாக போடலாம் என சேர்க்கக்கூடாது. இவை இரண்டையும் வீட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டும்.
சிலருக்கு பழைய, தேய்ந்து போன காலணிகள், செருப்புகள், உடைந்த துடைப்பம் ஆகியவற்றை வீட்டின் இன்னபிற தேவைகளுக்கு பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதனை தவிர்க்க வேண்டும்.
மேலும் நீண்ட நாட்களாக நீங்கள் பயன்படுத்தாத பொருட்களை தானம் செய்யுங்கள் அல்லது அப்புறப்படுத்து விடுங்கள். அதேபோல் உலர்ந்த துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது அசுபமானது. அதனை உடனடியாக அகற்றவும். அப்போதுதான் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பாயும்.