Vijayadhasami 2024: விஜயதசமி அன்று இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.. என்ன தெரியுமா?
Dusshera 2024: விஜயதசமி எனப்படும் தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்தால் நோய்கள் விளங்கும். பூஜைகள் செய்ய வேண்டிய நேரம் மற்றும் இந்த நாளில் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்து மதத்தில் விஜயதசமி எனப்படும் தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசை கழிந்த பத்தாவது நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ராமருக்கு அர்பணிக்கப்பட்ட நாளாகும். இந்தப் புனிதமான நேரத்தில் ராமர் மற்றும் துர்கா தேவியை பக்தர்கள் வழிபடுவார்கள். ராவணன் சடங்குகளும் நடைபெறும். புராணங்களின்படி ராமன் இலங்கையின் அரசனான ராவணனை கொன்றார். இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தசரா கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா நாளில் அன்னதானம் செய்யும் வழக்கமும் உண்டு. தசரா நாளில் நீராடி தியானம் செய்த பிறகு ராமரை வழிபடுவார்கள். ஏழைகளுக்கு உதவிகளும் தொண்டும் வழங்கப்படும்.
பஞ்சாங்கத்தின் படி இந்த விஜயதசமி அக்டோபர் 12ஆம் தேதி காலை 10:59 மணிக்கு தொடங்கி மறுநாள் அக்டோபர் 13 ஆம் தேதி காலை 9:08 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தின் அடிப்படையில் தசரா அக்டோபர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தசரா நாளில் செய்ய வேண்டியவை:
- தசரா அன்று சுந்தரகாண்டம் பாராயணம் செய்தால் நோய்கள் விலகும். இது செய்யும்போது ஒரு தேங்காயை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அனுமன் சாலிசா உச்சரிக்கும் போது அந்த தேங்காயை நோயாளியின் தாயிலையை ஏழுமுறை சுற்ற வேண்டும். அதன் பிறகு தேங்காயை இராவணத் தகனத்தில் வைத்தால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும்.
- வியாபாரத்தில் முன்னேற்றம் பெற தசரா நாளில் பெரியவர்களுக்கு மஞ்சள் துணியில் தேங்காய், இனிப்பு, பவித்திரமான பூணூல் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்ற பாதை திறக்கும்.
- ஜாதகத்தில் சனி கிரக நாளில் சனி தோஷம் நீங்க தசரா அன்று ஷமி மரத்தடியில் எள் எண்ணெய் கொண்டு 11 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். இது சனி தோசத்தை நீக்கிவிடும்.
- இந்து மதத்தில் தொண்டுக்கென தனி இடம் உண்டு. எனவே தசரா அன்று பிராமணர்கள் அல்லது ஆதரவற்ற நபர்களுக்கு உணவு, உடைகள் அல்லது மதிப்பு மிக்க பொருட்களை தானம் செய்யலாம். இதனால் வறுமை ஒழியும். அதுமட்டுமில்லாமல் வீட்டில் பிரச்சனைகள் இருந்தால் அவை நீங்கும்.
- தசரா அன்று ராவணனின் உருவ பொம்மையை எரிப்பது வழக்கம். இது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை குறிக்கிறது. உங்களிடத்தில் ராவண தகனம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொள்ளுங்கள். இந்த செயல் வாழ்க்கையில் இருந்து தீமையை நீக்குகிறது.
- உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டால் தசரா நாளில் கோயிலுக்கு சென்று விளக்குமாறு தானம் செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்து நிதி சிக்கல்களும் தீரும். இந்த பரிகாரத்தை மாலையில் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது லட்சுமி தேவியை தியானிக்க மறக்க வேண்டாம்.
பூஜை செய்ய வேண்டிய நேரம்:
நவராத்திரி பண்டிகை பத்தாவது நாளில் விஜயதசமி பூஜை செய்வது வழக்கம். சிலர் காலையிலும் சிலர் மாலையிலும் பூஜை செய்வார்கள். எனவே பூஜை செய்வதற்கு சரியான நேரம் புரட்டாசி மாதம் 26 ஆம் நாள் 12.10.2024 சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8:30 மணிக்குள் அல்லது காலை 10:45 மணி முதல்11:45 மணிக்குள் அல்லது மாலை 6:00 மணி முதல் 7:30 மணிக்குள் அல்லது இரவு 8:00 மணி முதல் 9:00மணிக்குள் பூஜை செய்வது உத்தமம்.
தசராவின் முக்கியத்துவம்:
தசரா நாளில் ராமர் மற்றும் துர்கா தேவியை வழிபடுகின்றனர். சிலர் குபேரனையும் லட்சுமிதேவியை ஒன்றாக வணங்குகிறார்கள். குபேரனையும் லட்சுமியையும் வழிபடுவதால் வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்காது என்பது நம்பிக்கை. இதன் மூலம் பொருளாதார நிலை நிலையாக இருக்கும். இவ்வாறு செய்வதால் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை.இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பாகாது))