Diwali: இலங்கை முதல் சிங்கப்பூர் வரை தீபாவளி கொண்டாடப்படும் கதை தெரியுமா? - Tamil News | Not just India some countries around the world that celebrate the festival of lights Diwali details in Tamil | TV9 Tamil

Diwali: இலங்கை முதல் சிங்கப்பூர் வரை தீபாவளி கொண்டாடப்படும் கதை தெரியுமா?

Diwali Outside India: இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வர இருக்கிறது. இந்த விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்படுகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். தீபங்களின் திருநாளான தீபாவளி இந்தியா மட்டுமின்றி சில நாடுகளிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை நம் நாட்டைப் போல் எந்தெந்த நாடுகள் கோலாகலமாக கொண்டாடுகின்றன என்பது குறித்த தகவல்கள் இதோ.

Diwali: இலங்கை முதல் சிங்கப்பூர் வரை தீபாவளி கொண்டாடப்படும் கதை தெரியுமா?

தீபாவளிக்கு அலங்காரம் செய்யப்பட்ட சிங்கப்பூர் சாலை (Photo Credit: Pinterest)

Published: 

24 Oct 2024 23:00 PM

தீபங்களின் திருநாளான தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த தீபத் திருநாளை பட்டாசு வெடித்தும், வீட்டில் விளக்கு ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குவது வழக்கம். இதனால் நமது இந்தியாவில் இந்துக்களின் இந்த புனித பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் தீபாவளி ஐந்து நாட்கள் கோலாலமாக கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த விஷயம், சில நாடுகளிலும் இந்த தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையை நம் நாட்டைப் போல் எந்தெந்த நாடுகள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றன என்பதைப் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா போன்று தீபாவளியை கோலாகலமாக கொண்டாடும் பிற நாடுகள்:

நேபாளம்:

நேபாளத்தில் தீபாவளி பண்டிகை திகார் என்று கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு தெய்வங்கள் வழிபடப்படுவதுடன் விலங்குகளும் வழிபடப்படுகின்றன. இவ்விழாவின் ஐந்து நாட்களும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மலர்கள், விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளால் வீடுகளை அலங்கரிக்கின்றனர்.

மலேசியா:

மலேசியாவிலும் இந்தியாவைப் போலவே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இங்கு இந்த பண்டிகை “ஹரி தீபாவளி” என்று கொண்டாடப்படுகிறது. தீபத்திருவிழாவையொட்டி, ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வீடும் மின்விளக்குகளாலும், வண்ணமயமான பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேலும் பல கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. இது தவிர, இந்த புனித நாளில் இந்திய பாரம்பரிய உணவு வகைகளை மலேசியர்கள் ரசிக்கின்றனர். இந்த பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பொது விடுமுறை இருப்பது சிறப்பு.

Also Read: Diwali: தீபாவளி பட்டாசு வெடிப்பதில்லை.. இந்த கிராமத்தில் மட்டும் ஒரு ரூல்.. காரணம் என்ன?

இலங்கை:

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையும் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. இராவணனை இராமன் வென்றதன் அடையாளமாக, தீமையின் மீது நன்மை வென்றதைக் கொண்டாடும் விழாவாக இங்குள்ள தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பார்கள்.

அமெரிக்கா:

அமெரிக்காவில் அதிகமான இந்திய வம்சாவளியினர் உள்ளனர், மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். மேலும், இந்துக்களின் மத நம்பிக்கையை போற்றும் வகையில் அமெரிக்காவில் தீபாவளியை ஒரு தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளனர். தீபாவளி இந்துக்கள் மட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள மற்ற சமூகத்தினரும் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகில் தீபாவளி தொடர்பான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்:

சிங்கப்பூரிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. தீபத் திருவிழாவின் போது இங்கு மக்களுக்கு பொது விடுமுறையும் உண்டு. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது, அங்கு அனைத்து இந்தியர்களும் பட்டாசுகளை வெடிக்காமல் விளக்குகள் ஏற்றி இனிப்புகளை விநியோகித்து பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

மொரிஷியஸ்:

இந்தியாவைப் போலவே மொரிஷியஸிலும் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மொரிஷியஸ் கலாச்சாரத்தில் இந்தியாவின் செல்வாக்கு மகத்தானது, மேலும் இந்த தீவில் இந்து பண்டிகையான தீபாவளியும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது தவிர, இங்குள்ள மக்கள் ஹோலி மற்றும் மகா சிவராத்திரி பண்டிகையையும் கொண்டாடுகின்றனர்.

யுனைடெட் கிங்டம்:

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரிலும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு தீபத் திருவிழாவையொட்டி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது.

Also Read: Diwali 2024: தீபாவளி அன்று லட்சுமி தேவி வணங்கப்படுவதற்கு காரணம் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்..

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினர் சிட்னி மற்றும் மெல்போர்ன் போன்ற நகரங்களில் ஒன்று கூடி பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, தீபங்களின் திருவிழாவான தீபாவளியை, இந்திய உணவுகளை தயாரித்து மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.

இது தவிர பிஜி, குயானா, மியான்மர், நேபாள், பாகிஸ்தான், வியட்நாம்,சுரிநாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு போன்ற நாடுகளில் தீபாவளிக்கு‌ பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!