5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamil Nadu Famous Churches: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. தமிழகத்தின் பிரபலமான தேவாலயங்கள்

பிரபல தேவாலயங்கள்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில் சிலர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வெளியூரில் சென்று கொண்டாட திட்டமிடுவார்கள். அந்த வகையில் தமிழகத்தின் பிரபலமான மற்றும் பழமை வாய்ந்த தேவாலயங்களுக்கு சென்று இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுங்கள்.

Tamil Nadu Famous Churches: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. தமிழகத்தின் பிரபலமான தேவாலயங்கள்
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 11 Dec 2024 13:45 PM

தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புகழ்மிக்க பேராலயங்கள் இருக்கிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிடங்களுக்குச் சென்று கொண்டாட திட்டம் இருந்தால் இந்த பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தேவாலயங்களுக்கு சென்று கொண்டாடுங்கள்

தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி:

புகழ்மிக்க இந்த திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது. மோர் விற்று சிறுவனுக்கு காட்சியளித்த அன்னை மரியாள், செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல் என்று கட்டளையிட்டார். அதன்படி அந்த இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. அதன் பிறகு 1671 ஆம் ஆண்டு பாய்மரக் கப்பலில் பயணம் செய்த போர்த்துக்கீசியர்கள் கடும் புயலில் மாட்டிக்கொண்டனர். எங்களை நன்றாக கரை சேர்த்தால் நாங்கள் கடை சேரும் இடத்தில் உனக்கு ஒரு ஆலயம் கட்டுவோம் என்று அவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

அதன்படி அவர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை ஒதுங்கியதை அடுத்து வேளாங்கண்ணியில் சிறிய அளவில் இருந்த ஆலயத்தை பெரியதாக கட்டினர். உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் இந்த பேராலயத்திற்கு வந்து செல்கிறார்கள்.

சாந்தோம் பேராலயம், சென்னை:

இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையர் கிறிஸ்துவத்தை பரப்புவதற்காக இந்தியா வந்தார். தமிழ்நாட்டின் சென்னையில் அவர் ஒரு குகையில் தங்கி கிறித்துவத்தை பரப்பி வந்தார். இந்த நிலையில் இங்கு வாழ்ந்து வந்த மக்களுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரை ஈட்டியால் குத்தி கொல்லப்படுகிறார். பிறகு அவரது உடல் மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது. பின்பு போர்த்துக்கீசியர்களின் வருகைக்குப் பின்பு அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.

இந்த தேவாலயம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் 155 உயரம் கொண்டது. இந்த பேராலயம் கடந்த 2006 ஆம் ஆண்டு தேசிய வழிபாட்டுத் தலமாக அறிவிக்கப்பட்டது .

Also Read: Christmas Churches: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… சென்னையில் உள்ள பழமையான தேவாலயங்கள் லிஸ்ட்!

தூய அலங்கார உபகார மாதா திருத்தலம், கன்னியாகுமரி:

இங்கு இருக்கும் மேரி மாதாவின் சொரூபம் ரோம் நகரில் இருந்து பெறப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தேவாலயம் இந்தியாவின் முக்கிய கத்தோலிக்க நம்பிக்கையுடன் நெருக்கமாக தொடர்புடையது. 1218 ஆம்‌ ஆண்டு இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது கிறிஸ்தவர்களை இவர் பாதுகாத்தார் என்று கூறப்படுகிறது.

புதிய தேவாலயத்திற்கான அடித்தளம் 1900 ஆம்‌ ஆண்டு போடப்பட்டது. இந்த தேவாலயம் 153 அடி நீளமும் 53 அடி அகலமும் கொண்டது. மேலும் இந்த தேவாலயம் 153 அடி உயரம் கொண்டதாகும்.

சலேத் அன்னை தேவாலயம், கொடைக்கானல்:

பிரஞ்சு கட்டிடக்கலையோடு 1846 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த தேவாலயம். கொடைக்கானலில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இதுதான். மேலும் சலேத் அன்னைக்காக உலகில் கட்டப்பட்ட இரண்டாவது தேவாலயம் இது. இங்கு இருக்கும் அன்னையின் சிலை பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த தேவாலயம் பசுமையான தோற்றத்தை கொண்டுள்ளது. இங்கு பல வெளியூர் சுற்றுலா பயணிகளும்‌ வந்து செல்கின்றனர்.

புனித மரியன்னை பேராலயம், மதுரை

இந்தப் பேராலயம் 1840 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தமிழ்நாட்டின் பிரபலமான தேவாலயமாகும். இது ஜெர்மனிய கட்டடக்கலை, கிரேக்க வடிவமைப்பு, போர்த்துக்கீசிய கலைநயங்கள், பெல்ஜிய கலை வடிவங்கள் ஆகிய பல்வேறு கட்டிடக்கலையை கொண்டு உருவாக்கப்பட்ட தேவாலயம்‌. 1916 ஆம் இந்த ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு மொத்தம் 164 கோபுரங்கள் உள்ளது. இந்த பேராலயம் முன்னர் வியாகுல மாதா ஆலயம் என்று அழைக்கப்பட்டது.

Also Read: Christmas: உண்மையான சாண்டா கிளாஸ் யார்? கிறிஸ்துமஸ் தாத்தாவின் வரலாறு!

பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி:

16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பேராலயம் போர்த்துக்கீசிய பாணியில் கட்டப்பட்டது. 1603 ஆம் ஆண்டு குறுநில மன்னனாக இருந்த கயத்தாறு மன்னன்‌ வெட்டும் பெருமாள் மற்றும் மதுரை நாயக்கர் ஆகியோர் பெரும்படைகளோடு வந்து பனிமய மாதாவின் முதல் ஆலயத்தை இடித்து நெருப்பு வைத்தனர். பின்னர் மீண்டும் 1621 ஆம் ஆண்டு மீண்டும் அந்த ஆலயம் எளிய முறையில் கட்டப்பட்டது.

பின்னர் 1695 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் இந்த ஆலயத்தை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கினர். இடிக்கப்பட்ட தேவாலயங்களை மீண்டும் கட்டுவதற்கு டச்சுக்காரர்கள் அனுமதி கொடுத்ததை அடுத்து 1712 ஆம் ஆண்டு புதிய கற்கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

Latest News