5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tulasi plant: துளசியை இந்த திசையில் வைத்தால் செல்வம் சேரும்.. வாஸ்து கூறும் நன்மைகள்..!

வீட்டு தோட்டத்தில் துளசி செடியை நடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. பல மருத்துவ நன்மைகள் நிறைந்த வீட்டில் வளர்த்தால் ஏராளமான நன்மைகளை பெற முடியும், இந்த துளசி செடிகளை வீட்டில் வைத்திருக்கும் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி காணலாம்.

Tulasi plant: துளசியை இந்த திசையில் வைத்தால் செல்வம் சேரும்.. வாஸ்து கூறும் நன்மைகள்..!
துளசி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 06 Jun 2024 13:39 PM

துளசி செடி இந்து மதத்தில் மிகவும் புனிதமான செடியாக கருதப்படுகிறது. துளசி செடி நடப்பட்ட வீட்டில் விஷ்ணு லட்சுமியுடன் அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கையாகிறது. துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சி, செழிப்பு, புகழ், பெருமை மற்றும் செல்வத்தை கொண்டு வரும் என்று வாஸ்து சாஸ்திரத்தின் வழியாக நம்பப்படுகிறது. வேறு திசையில் வைத்தால், இது வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாழ்க்கையில் பல சிரமங்கள் ஏற்படும். மேலும், வீட்டில் நடப்படும் துளசி செடி, நேர்மறை ஆற்றலின் சுழற்சியை அதிகரிக்கிறது. இது குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல பலனைத் தரும் என்று நம்பபடுகிறது. வீட்டு பால்கனி அல்லது முற்றத்தில் துளசி செடிகளை நடலாம். துளசி செடியை வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் மட்டும் நட வேண்டும். இது வேலைவாய்ப்பு திசை என்று அறியப்படுகிறது. வீட்டில் துளசி செடிகளை நடுவதற்கு வியாழன் மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

Also Read: Asthma: ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்..!

துளசி செடியை சுற்றிலும் கற்றாழை மற்றும் அழகுக்காக வைக்கப்படும் எந்த செடிகளையும் வைக்காமல் இருப்பது நல்லது. இதற்கு பதிலாக நல்ல பூக்கும் தாவரங்களை வைப்பது சிறந்ததாக அமைகிறது. துளசி மாடத்திற்கு அருகில் துடைப்பான் குப்பைத்தொட்டி மற்றும் காலணிகள் போன்ற எந்த பொருளையும் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வது, நல்ல சக்தியை தடுப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அல்லது ஏகாதசியில் துளசி செடியைத் தொடக்கூடாது. இந்து மதத்தில், துளசியை எப்பொழுதும் தரையில் வைக்கக் கூடாது அதிக அளவில் நீர் தேவைப்படாத நிலையில், துளசியை தொடக்கூடாது என்பதால், ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற நாட்களில் தண்ணீர் விடலாம் என்றும் கூறுகின்றனர். கோடைகாலத்தில் துளசி செடியை நிழலில் வைத்து பாதுகாப்பது சிறந்தது. வெப்பத்திலிருந்து துளசி செடியை காப்பதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

Also Read: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி..தேசிய அளவில் பரபரப்பு!

வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை வைப்பது சிறப்பானதாக அமைகிறது. ஆகம விதிப்படி, பண்டிதர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை வீட்டில் வளர்க்கலாம் என்றே கூறுகின்றனர். ஜோதிட சாஸ்திரப்படி வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட துளசி செடிகளை நட வேண்டும் என்றால் 3, 5, 7 என்ற எண்களில் நட வேண்டும். ஒவ்வொரு துளசி செடியையும் விடாமுயற்சியுடன் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.

(இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News