5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் முறையும் அதன் பலன்களும்!

Brahma Muhurtha Light: காலையில் ஏற்றப்படும் விளக்குகளில் பிரம்ம முகூர்த்த விளக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பிரம்ம முகூர்த்த விளக்கு எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும் எப்படி ஏற்ற வேண்டும் என்பது பற்றிய குழப்பங்கள் இருந்து வருகிறது. இந்த பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றுவதன் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் முறையும் அதன் பலன்களும்!
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 03 Dec 2024 17:31 PM

பொதுவாக காலையில் ஏற்றப்படும் விளக்குகளில் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றப்படும் விளக்கு ஆகும். இந்த பிரம்ம முகூர்த்தம் நேரம் என்பது காலை 3 மணிக்கு தொடங்கி சூரியன் உதயமாகும் நேரம் வரை நீடித்திருக்கிறது. எனவே 3:00 மணிக்கு விளக்கேற்ற முடியாதவர்கள் நாலு முதல் ஐந்து முப்பதுக்குள் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றுவிட வேண்டும். பொதுவாக காலையில் குளித்துவிட்டு விளக்கு ஏற்றுவது சிறந்தது. ஆனால் குளிக்க முடியாதவர்கள் உடல் சுத்தமாக இருந்தால் விளக்கேற்றிக் கொள்ளலாம்.

விளக்கேற்ற அனைவரும் எழுந்திருக்க வேண்டுமா?

பிரம்ம முகூர்த்த விளக்கேற்றும் பொழுது வீட்டில் உள்ள அனைவரும் எழ வேண்டும் என்பது அவசியம் இல்லை. பூஜை அறைக்கு எதிராக யாரும் படுத்திருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தனியாக பூஜை அறை இல்லாமல் வீட்டின் பொதுவான இடத்தில் சாமி படங்களை வைத்து வணங்குபவர்கள் என்றால் சாமி படங்களுக்கு நேராக யாரும் படுத்து இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Also Read: Karthigai: கார்த்திகை அமாவாசை.. லட்சுமி தேவி அருளை பெற சொல்ல வேண்டியவை!

எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

பொதுவாக ஒரு வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றுவது விசேஷமானது. அதேபோல் அதிகபட்சமாக ஐந்து விளக்கு ஏற்றலாம். ஐந்து விளக்கு ஏற்றுவது மிக மிக விசேஷமானது. ஆனால் ஒற்றை விளக்கு ஏற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விளக்கில் தான் ஏற்ற வேண்டும் என்று எதுவும் கிடையாது. உங்கள் வீட்டில் என்ன விளக்கு இருக்கோ அந்த விளக்குகளை வைத்து விளக்கேற்றிக் கொள்ளலாம். விளக்கு ஏற்றுவதற்கு நெய் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. நெய் விளக்கு ஏற்றுவதற்கு சிரமமாக இருந்தால் நல்லெண்ணெய் பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். ஆனால் குறைந்தது ஒரு விளக்காவது நெய் பயன்படுத்தி ஏற்றினால் சிறந்தது.

விளக்கேற்றிய பின் தூங்கலாமா?

நோயாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் தூங்குவதில் தவறில்லை. எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அவர்களின் மற்ற வேலையை தொடர வேண்டும். எல்லா தெய்வங்களையும் வீட்டிற்கு அழைப்பதற்காகவே காலையில் விளக்கேற்றப்படுகிறது. விளக்கேற்றி தெய்வங்களை வீட்டிற்கு அழைத்துப் பிறகு போய் தூங்குவது முறையல்ல.

பெண்கள் தான் ஏற்ற வேண்டுமா?

வீட்டில் பெண்கள் இல்லாத நேரங்களிலோ அல்லது தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்து வந்தாலோ ஆண்கள் கண்டிப்பாக இந்த பிரம்ம முகூர்த்த விளக்கை ஏற்றலாம். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருக்கும் ஆண்கள் இந்த விளக்கை ஏற்றலாம். குழந்தைகளும் ஏற்றலாம். எனவே இந்த விளக்கு பெண்கள் தான் ஏற்ற வேண்டும் என்பது இல்லை.

Also Read: திருவண்ணாமலை மகா தீபத்தின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

பலன்கள்:

காலையில் எழுந்து விளக்கு ஏற்றுவதன் மூலமாக வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் வழிபடுவது மூலமாக நீங்கள் வேண்டுவது எல்லாம் கிடைக்கும். ஆரோக்கியம், நோய், செல்வம் என எல்லாவற்றிற்குமான தேவை பூர்த்தி செய்யப்படும். வறுமையை நீக்கி செல்வத்தை கொடுத்து நோயை போக்கி ஆரோக்கியத்தை தந்து சண்டை சச்சரவுகளை நீக்கி மன அமைதியை தந்து உங்களை வாழ்வில் வெற்றி அடையச் செய்வது தான் இந்த பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றப்படும் விளக்கு.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

Latest News