Diwali: தீபாவளி தன திரயோதசி எம தீபம் ஏற்றும் முறை… இதை யாரெல்லாம் ஏற்றக்கூடாது..? - Tamil News | Procedure for lighting Diwali Dhan thirayodhasi yema Diya details in tamil | TV9 Tamil

Diwali: தீபாவளி தன திரயோதசி எம தீபம் ஏற்றும் முறை… இதை யாரெல்லாம் ஏற்றக்கூடாது..?

Deepavali Yema Deepam: நம்முடைய முன்னோர்கள் காலாகாலமாக ஏற்றி வரும் ஒரு தீப வழிபாடு தான் எம தீப வழிபாடு. தீபாவளிக்கு முந்தைய நாளாக வரக்கூடிய தன திரயோதசி ‌ தினத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். தீபாவளிக்கு முந்திய நாள் நமது முன்னோர்கள் எமலோகத்தில் இருந்து நம்மை தேடி வருவதாகவும் நம்மை ஆசீர்வதித்து செல்வதாகவும் நம்பப்படுகிறது. அவர்களை வரவேற்கும் வகையில் இந்த எம தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் இந்த நாளில் தான் அன்னபூரணி தேவிக்கு அட்சய பாத்திரம் கிடைத்தது.

Diwali: தீபாவளி தன திரயோதசி எம தீபம் ஏற்றும் முறை... இதை யாரெல்லாம் ஏற்றக்கூடாது..?

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

30 Oct 2024 08:38 AM

நம்முடைய முன்னோர்கள் காலாகாலமாக ஏற்றி வரும் ஒரு தீப வழிபாடு தான் எம தீப வழிபாடு. தீபாவளிக்கு முந்தைய நாளாக வரக்கூடிய தன திரயோதசி ‌ தினத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தன திரயோதசி நாளில் தான் குபேரருக்கு நிறைந்த அளவு சொத்து கிடைத்தது. இந்த நாளில் தான் குபேரர் மகாலட்சுமியின் அருளையும் பெற்றார். குபேரர் மற்றும் அன்னலட்சுமியின் ஆசியை பெறுவதற்காகவும் இந்த நாளில் எம தீபம் ஏற்றப்படுகிறது. அதோடு எமதர்மரின் அருளை பெறுவதற்காகவும் இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

ஏன் எம தீபம் ஏற்றப்படுகிறது?

எம தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபாடு செய்வது சாஸ்திரத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறது. கடந்த புரட்டாசி மாதம் மஹாளய‌‌ பட்சத்தின் போது 15 நாட்கள் பூமியில் முன்னோர்கள் இருப்பதாக‌ நம்பப்படுகிறது. இந்த நாட்களில் பூமிக்கு வரும் நம் முன்னோர்கள் ஐப்பசி மாத அமாவாசையில் மீண்டும் எமலோகத்திற்கு திரும்புவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்திய நாளான தன திரயோதசி நாளில் நம் முன்னோர்களின் நினைத்து தீபம் ஏற்றினால் அவர்கள் சொர்க்கம் சென்று நம்மை வாழ்த்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

Also Read: Lord Murugan: வாழ்வை மாற்றும் முருகனின் 48 நாள் விரதம்.. எப்படி இருக்க வேண்டும்?

திரயோதசி திதி நேரம்:

அக்டோபர் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:29 மணிக்கு தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி புதன்கிழமை மதியம் 2:21 மணி வரை திரயோதசி‌ திதி இருக்கிறது.

தீபம் ஏற்றும் முறை:

வீட்டின் நிலை வாசல் படிக்கு வெளியே இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். வீட்டு வாசப்படிக்கு வெளியே ஏற்ற முடியாதவர்கள் வீட்டின் மாடிக்குச் சென்று இந்த தீபத்தை ஏற்றலாம். இந்த எம தீபம் தரையில் இருந்து சற்று உயரமான இடத்தில் ஏற்ற வேண்டும். எனவே மேஜை போட்டு அதன் மீது தாம்பூலம் தட்டு வைத்து அந்த தாம்பூல தட்டில் தீபம் ஏற்ற வேண்டும். எம தீபம் ஏற்றிய இந்தப் பொருள்களையும் திரும்ப வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

ஒரு தாம்பூல தட்டில் ஐந்து அகல்விளக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வட்ட வடிவில் இல்லாமல் ஐந்து அகல் விளக்குகளையும் வரிசையாக வைக்க வேண்டும். எறியக்கூடிய விளக்கு தெற்கு திசையை நோக்கி எறிய வேண்டும். இப்படி வழிபடும் பொழுது ஐந்து தலைமுறைக்கு முன்னே உள்ள முன்னோர்கள் சொர்க்கம் செல்வார்கள். இதன் மூலம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் போன்றவை விலகும். வீட்டில் தடைப்பட்டு வந்த நல்ல காரியங்கள் நடைபெறும்.

இந்த தீபத்தை ஏற்றும் பொழுது தீபத்திற்கு முன்னால் என்று ஏற்றாமல் பின்னால் நின்று ஏற்ற வேண்டும். இந்தத் தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எரிய வேண்டும்.

இந்த தீபத்தை யாரெல்லாம் ஏற்றக்கூடாது:

மாதவிடாய் காலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. கருவுற்றிருக்கக்கூடிய பெண்கள், நீண்ட நாட்களாக நோய்வாய் பட்டிருப்பவர்கள், உடல்நிலை பிரச்சினை இருப்பவர்கள் யாரும் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. தாய் தந்தையை சரியாக கவனிக்காதவர்கள், சகோதர சகோதரிகளுக்கு துரோகம் செய்தவர்கள் யாரும் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. இவர்களைத் தவிர ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.

Also Read: Diwali Horoscope: தீபாவளி ராசிபலன்.. எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

பலன்கள்:

எம தீபம் ஏற்றுவதால் மரண பயம் நீங்கும். துர் மரணங்கள் நடைபெறாது. விபத்துக்கள் அடிக்கடி நடைபெறாது. துர்மரணங்கள் உங்கள் வீட்டில் நடந்திருந்தால் அந்த ஆத்மாக்கள் உங்களுக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கும்‌. இதுபோக பித்ருக்களின் சாபமும் தோஷமும் நீங்கும். உங்களின் முன்னோர்களின் அருள் ஆசிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காரிய தடைகள் நீங்கி குடும்பத்தில் நல்லது நடக்கும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை. இந்த தகவலின் உள்ள உண்மைகளின் துல்லியத்திற்கு TV9 Tamil எந்த விதத்திலும் பொறுப்பாகாது)

படுத்தவுடன் தூங்குவதற்கான டிப்ஸ்கள் - முயற்ச்சி செய்து பாருங்கள்!
ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும் - ஏன் தெரியுமா?
ஒரு மனிதரிடம் இருக்க வேண்டிய மிக உயர்ந்த பண்புகள் இவைதான்!
இரவில் தூங்குவதற்கு முன்பு குளிப்பதால் கிடைக்கும் பலன்கள்!