5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புரட்டாசி சனி விரதம்.. இப்படி பூஜை செய்தால் நன்மைகள் தேடி வரும்!

Purattasi Month Saturday Fasting: புரட்டாசி மாதம் சனிக்கிழமை என்றாலே ரொம்பவும் விசேஷமானது. இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகள்‌ வருகிறது.புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையை சக்தி வாய்ந்த சனிக்கிழமைகளாக கருதப்படுகிறது. இந்த மகத்துவம் மிக்க சனிக்கிழமைகளில் எப்படி பூஜைகள் செய்வது பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

புரட்டாசி சனி விரதம்.. இப்படி பூஜை செய்தால் நன்மைகள் தேடி வரும்!
பெருமாள் தளிகை (Photo Credit: Foodie Cooking)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 19 Sep 2024 21:17 PM

புரட்டாசி மாதம் சனிக்கிழமை என்றாலே ரொம்பவும் விசேஷமானது.  சனிபகவான் தொல்லையில் இருந்து வெளிவருவதற்காகவும் நாராயணற்கு ரொம்ப உகந்த நாளாகிய சனிக்கிழமை அன்று செய்யக்கூடிய வழிபாடு தோஷங்களை எல்லாம் நமக்கு நீக்கி தந்து எந்த வகையான கிரக பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து நம்மை காப்பாற்றும் என்பதால் தான் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையை சக்தி வாய்ந்த சனிக்கிழமைகளாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு தளிமை போடுவது என்பது அனைவரும் அறிந்ததே.

அட்சய பாத்திரம் ஏந்தி கோவிந்தா கோவிந்தா என பெருமாளுடைய நாமத்தை சொல்லி அரிசி பெற்று வந்து அதிலிருந்து இறைவருக்கு படையலிட்டு வழிபாடு செய்வதும் அன்னதானம் செய்வதும் வழக்கம். சிலர் வீடு வீடாக சென்று கேட்காமல் அவர்களே வீட்டில் சமைத்து பெருமாளுக்கு தளிமை போடுவதும் வழக்கம்.

இதில் எந்த வழக்கமாக இருந்தாலும் சரி எதாவது ஒரு சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகையிட்டு செய்யக்கூடிய வழிபாடு அற்புதமான நலன்களை பெற்றுத் தரும்.

தளிகையிடுவதற்கு என்னெல்லாம் செய்ய வேண்டும்?

ஐந்து வகையான கலவை சாதங்கள் செய்ய வேண்டும். சக்கரை பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகிய 5 வகை சாதங்கள். மிளகும் சீரகமும் மட்டும் போட்டு சுடக்கூடிய உளுந்து வடை. கருப்பு சுண்டல் அல்லது வெள்ளை சுண்டல் ஆகியவை தான் பெருமாளுக்கு செய்யக் கூடிய நைவேத்தியம்.

பானகம், துளசி தீர்த்தம், மாவிளக்கு ஆகியவை வைத்துக் கொள்ளலாம். 5 சாதங்களையும் வரிசையாக வைத்து தளிகையிடலாம் அல்லது பெருமாளுடைய திருஉருவத்தை தளிகையாக போடலாம்.

சிலர் எளிமையாக சாதம், சாம்பார், அப்பளம் வைத்து வைத்து தளிகையிடுவார்கள். தங்களுக்கு எது முடியுமோ அதை செய்யுங்கள். செய்வதை உளமாற செய்தால் இறைவன் அதை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்.

Also Read: பித்ரு தோஷத்தைப் போக்க காகங்களுக்கு ஏன் உணவளிக்கிறார்கள் தெரியுமா?

விசேஷமான மற்ற வழிபாடுகள்:

புரட்டாசி முதல் சனிக்கிழமை 21-09-2024 அன்று வருகிறது. இந்நாளில் தளிகையிடலாம் அல்லது மாவிளக்கு போட்டு வழிபாடு செய்து கொள்ளலாம். 28-09-2024 அன்று இரண்டாவது சனிக்கிழமை வருகிறது. அன்றைக்கு ஏகாதசியாக இருக்கிறது.அன்று பலரும் விரதம் இருப்பதால் தளிகையிட்டால் அதை சாப்பிட முடியாது. அதனால் துளசியினால் பூஜை செய்து கொள்ளலாம்.

அடுத்து 05-10-2025 அன்று மூன்றாம் சனிக்கிழமை வருகிறது. அன்று நவராத்திரி துவங்குகிறது. மேலும் கிரியை நிதி இந்நாளில் அமைந்திருக்கிறது. இந்நாளில் மகாலட்சுமி வழிபாடு செய்தால் உன்னதமான பலன்கள் கிடைக்கும்.

அடுத்ததாக கடைசி சனிக்கிழமை 12-10-2024 அன்று வருகிறது. இந்த நாளில் திருவோண நட்சத்திரமும் அமைந்திருக்கிறது. இன்று தளிகை அல்லது மாவிளக்கு போட்டுக் கொள்ளலாம்.

பலன்கள்:

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் கடன் தொல்லை நீங்கும். ஆனால் புரட்டாசி சனிக் கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. ஏழரை சனி, அஷ்டம சனி, கண்னடச் சனி, அர்த்தாஷ்ட சனி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், புனர்ப்பு தோஷத்தினால் திருமண தடை ஏற்பட்டுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளுக்கு படையல் போட்டு வழிபடலாம். திருமணம் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

சனிக்கிழமை விரதம் இருந்தால் படிப்பில் கவனமில்லாமல் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும். குழந்தை செல்வத்துக்காக காத்திருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம், கிருஷ்ணாஷ்டகம் போன்ற ஸ்தோத்திரங்களை படிக்கலாம். சனிக்கிழமை விரதமிருந்து நரசிம்ம பிரபத்தியை பாராயணம் செய்தால் போதுமான பண வரவு இல்லாமல் பண கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பயன் அளிக்கும். மேலும் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கும்
சனியின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது.

ஒட்டுமொத்த நல்வாழ்வு, செழிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் கொடுக்கிறது.
ஆசைகளை நிறைவேற்றுகிறது. மேலும் மோட்சத்தை (முக்தி) அடைய உதவுகிறது. இது தவிர வேண்டுவதெல்லாம் நடக்க சனிக்கிழமை விரதமிருப்பவர்கள், மனம் உருகி வேண்டும் அனைத்தையும் பெருமாள் தவறாமல் நடத்தி வைப்பார்.

Also Read: புரட்டாசி விரதம் – வழிபடும் முறையும் அதன் பலன்களும்!

Latest News