Purattaasi 2024: வந்தது புரட்டாசி சனிக்கிழமை.. தென்னிந்தியாவில் உள்ள இந்த 5 விஷ்ணு கோயிலுக்கு மறக்காமல் செல்லுங்க! - Tamil News | Purattasi Masam 2024: Here let's know about 5 famous Vishnu (Perumal) Temples in South India | TV9 Tamil

Purattaasi 2024: வந்தது புரட்டாசி சனிக்கிழமை.. தென்னிந்தியாவில் உள்ள இந்த 5 விஷ்ணு கோயிலுக்கு மறக்காமல் செல்லுங்க!

Published: 

21 Sep 2024 12:14 PM

Vishnu Temples: புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை உணவு எதுவும் உட்கொள்ளாமல் மாலை 6 மணிக்கு விரதம் இருப்பார்கள். இப்படி செய்வதால் காக்கும் கடவுளான விஷ்ணு தமக்கும், தனது குடும்பத்திற்கும் நல்ல அருளை தருவார் என்பது ஐதீகம். அந்தவகையில், நீங்கள் இந்த புரட்டாசி மாதம் வெளியூர்களில் இருந்து தென்னிந்தியாவிற்கு வருகிறீர்கள் என்றால், தென்னிந்திய மக்கள் விஷ்ணு கோயிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தால் தென்னிந்தியாவில் உள்ள 5 புகழ்பெற்ற விஷ்ணு (பெருமாள்) கோயில்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

Purattaasi 2024: வந்தது புரட்டாசி சனிக்கிழமை.. தென்னிந்தியாவில் உள்ள இந்த 5 விஷ்ணு கோயிலுக்கு மறக்காமல் செல்லுங்க!

திருப்பதி (Image: Arun HC/IndiaPictures/Universal Images Group via Getty Images)

Follow Us On

தமிழ்நாட்டில் புரட்டாசி மாதம் வந்துவிட்டால் பெரும்பாலான மக்கள் அந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல், சனிக்கிழமைகளில் விரதம் இருந்து காக்கும் கடவுளான விஷ்ணு (பெருமாளை) தரிசனம் செய்வார்கள். புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை உணவு எதுவும் உட்கொள்ளாமல் மாலை 6 மணிக்கு விரதம் இருப்பார்கள். இப்படி செய்வதால் காக்கும் கடவுளான விஷ்ணு தமக்கும், தனது குடும்பத்திற்கும் நல்ல அருளை தருவார் என்பது ஐதீகம். அந்தவகையில், நீங்கள் இந்த புரட்டாசி மாதம் வெளியூர்களில் இருந்து தென்னிந்தியாவிற்கு வருகிறீர்கள் என்றால், தென்னிந்திய மக்கள் விஷ்ணு கோயிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தால் தென்னிந்தியாவில் உள்ள 5 புகழ்பெற்ற விஷ்ணு (பெருமாள்) கோயில்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

உங்களால் இந்த 5 கோயில்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், ஏதேனும் ஒரு விஷ்ணு கோயில்களுக்கு சென்று பெருமாளின் அருளை குடும்பத்துடன் பெறுங்கள்.

ALSO READ: Egg Veg or Nonveg: முட்டை சைவமா? அசைவமா? புரட்டாசி மாதம் சாப்பிடலாமா..?

தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்று பெருமாள் கோயில்:

தென்னிந்தியாவில் இருக்கும் ஐந்து புகழ்பெற்ற விஷ்ணு கோயில்கள் மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மட்டுமல்லாமல், அவற்றின் அழகிற்காகவும் மக்களின் மனதை கவர்ந்துள்ளது.

திருப்பதி திருமலை கோயில்:

கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக திருப்பதி திருமலை கோயில்களை பற்றி செய்திகள் வாயிலாக அதிகம் கேள்வி பட்டிருக்கும். உலகில் மிகவும் பணக்கார கடவுளாக பார்க்கப்படும் பெருமாள், இந்த கோயிலில்தான் மக்களுக்கு அருள் புரிந்து வருகிறார். தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற திருப்பதி திருமலை விஷ்ணுவின் கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூரில் அமைந்துள்ளது. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோயில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

திருப்பதி மலைகளில் கிடைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகள். இந்த பகுதி பண்டைய தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தின் பகுதியாக இருந்துள்ளது. தென்னிந்தியாவில் பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் நினைவுக்கு வருவது திருப்பதி கோயில்தான். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

விருபாக்ஷா கோயில்:

தென்னிந்தியாவின் விருபாக்ஷா கோயில் விஷ்ணுக்காக கட்டப்பட்டு, தற்போது புகழ்பெற்று விளங்குகிறது. இந்த கோயிலுக்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து மக்கள் விஷ்ணுவை தரிசனம் செய்து வருகின்றனர். விருபாக்ஷா கோயில் (விருபாட்சர் கோயில்) கர்நாடகா மாநிலம் அம்பி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. அதேபோல், விஜயநகர பேரரசின் தலைநகராக இருந்த அம்பியில் துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த கோவில் விஜயநகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்டு, இன்றுவரை இதன் கட்டிடக்கலை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். குடும்பத்துடன் இந்த கோயிலுக்கு விஷ்ணுவை தரிசித்து வரலாம்.

குருவாயூர் கோயில்:

குருவாயூர் கோயில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில் ஆகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தலமாகவும், பூலோக வைகுண்டமாகவும் இந்த கோயில் பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில்தான் புவியில் இறைவன் விஷ்ணு வாசம் செய்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

108 திவ்ய தேச கோயில்களில் இந்த கோயில் ஒன்றல்ல எனிலும் வைணவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்படுகிறது. இந்த கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணன் சில வடிவம் மனம் கவரும் பாணியில் நான்கு கைகளுடன் காட்சியளிப்பார். அதில், பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்ற கதாயுதத்தையும், நான்காவது கரங்களில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார்.

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலம் ஆகும். திருவரங்கம் கோயில் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலானது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987-ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் திவ்விய தேச தலம்.

ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பெருமாளின் சிலையானது பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றிய சிலை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கோயிலில் சிறப்பு 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள.

ALSO READ: Purattasi Full Moon: புரட்டாசி மாத பௌர்ணமி‌ விரதம்… நினைத்தது நடக்க இதை செய்யுங்க!

அத்தி வரதர் கோயில்:

அத்தி வரதராஜ பெருமாள் கோயில் 1053ல் சோழர்களால் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலின் திருக்குளமான அமிர்தசரசு அல்லது ஆனந்த புஷ்கரணி தீர்த்தத்தின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் மூலவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

கடந்த 1709ம் ஆண்டு ஆனந்தசரஸ் கோயில் குளத்திலிருந்த நீரை முற்றிலும் வெளியேற்றியபோது, சயனகோலத்தில் அத்தி வரதர் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது, கோயில் சேவகர்கள் அத்தி வரதரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுத்து பூஜை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்கள் பெருமாள் காட்சியளிப்பார்.

கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்..
பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
Exit mobile version