5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Alwarthirunagiri: நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீ ஆதிநாதர் ஆழ்வார் ஆலயம்!

108 திவ்ய தேசங்களில் 89 ஆவது திருத்தலமாக அமையப்பெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி வட்டத்தில் அமையப் பெற்றுள்ள அருள்மிகு ஆதிநாதன் ஆலயம். இத்தலம் 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். பொதுவாக பெருமாளை தான் ஆழ்வார்கள் மங்கள சாசனம் செய்வார்கள். ஆனால் இக்கோயிலில் மதுரகவியாழ்வார் தனது குருவான நம்மாழ்வாரை மங்கள சாசனம் செய்துள்ளது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Alwarthirunagiri: நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீ ஆதிநாதர் ஆழ்வார் ஆலயம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 26 Sep 2024 15:00 PM

108 திவ்ய தேசம்: புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. வைணவம் என குறிப்பிடப்படும் இந்த பிரிவில் பல்வேறு வகையான பெயர்களில் பெருமாள் பல அவதாரங்களில் ஒவ்வொரு ஊர்களிலும் கோயில் கொண்டு உள்ளார். இதில் சிறப்பான 108 வைணவ திருத்தலங்கள் திவ்ய தேசம் என அழைக்கப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற வைணவ திருத்தலங்கள் இந்த பட்டியலில் இருக்கும். இதில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளத்திலும் உள்ளன. மற்ற இரண்டு தளங்கள் வானுலகில் உள்ளதாக நம்பப்படுகிறது. வைணவ சமயத்தை சார்ந்தவர்கள் இந்த 108 தலங்களுக்கும் தன் வாழ்நாளில் சென்று வழிபட வேண்டும் என்பது மிகப்பெரிய பாக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்த 108 திவ்ய தேசங்களில் 89 ஆவது திருத்தலமாக அமையப்பெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி வட்டத்தில் அமையப் பெற்றுள்ள அருள்மிகு ஆதிநாதர் ஆலயம். இத்தலம் 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். பொதுவாக பெருமாளை தான் ஆழ்வார்கள் மங்கள சாசனம் செய்வார்கள். ஆனால் இக்கோயிலில் மதுரகவியாழ்வார் தனது குருவான நம்மாழ்வாரை மங்கள சாசனம் செய்துள்ளது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோல் நம்மாழ்வாருக்கு ஆதிநாத பெருமாள் தான் குருவாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

இதையும் படிங்க: பணி சுணக்கமா? லிப்ஸ்டிக் பிரச்னையா? சென்னை மேயர் – டபேதார் சிக்கல் என்ன? முழு விவரம்!

நம்மாழ்வார் அவதரித்த காரணத்தினால் இந்த இடம் ஆழ்வார் திருநகரி என அழைக்கப்படுகிறது. நவதிருப்பதிகளில் குருவுக்குரிய தலமாக இக்கோயில் திகழ்கிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக இக்கோயில் அமையப்பெற்றுள்ளது. மூன்று பிரகாரங்களுடன் கூடிய இக்கோயிலின் பிரகாரத்தில் ராமர், வேணுகோபாலன், திருப்புழியாழ்வார், நரசிம்மர், வராக பெருமாள், திருவேங்கமுடையான், நாத முனிகள், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.

இக்கோயிலில் ஆதிநாதன் பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அவரின் பொற்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பான பழமையான நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரம் இன்றும் அக்கோயிலில் காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க: தாலிக்கயிறு மாற்றப் போறீங்களா? – இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!

கோயில் தோன்றிய வரலாறு

காரியார் என்ற குறுநில மன்னருக்கு சடகோபர் என்ற மகன் பிறந்தார். பிறந்ததிலிருந்து கண்கள் மூடிய நிலையிலும் அழாமலும் சாப்பிடாமலும் சடகோபர் இருந்ததைக் கண்ட பெற்றோர் மிகுந்த கவலை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சடகோபர் ஓடி சென்று புளிய மரத்தில் அடியில் இருந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். அதன் பிறகு அவரை என்ன செய்தும் அசைத்துப் பார்க்கவே முடியவில்லை. 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்த சடகோபர் உடல் வளர்ச்சி குன்றாமல் அப்படியே இருந்துள்ளார். இதனிடையே வடநாட்டுக்கு யாத்திரை சென்றிருந்த மதரகவியாழ்வார் அயோத்தியில் இருந்தபடியே தென்திசையில் தான் வணங்கும் போது ஒரு பேரொளியை கண்டார்.

அந்த ஒளியை நோக்கி நடந்து வந்த மதுரகவியாழ்வாருக்கு அது ஒரு புளிய மரத்தடி அடி வரை வந்தவுடன் மறைந்து விட்டதை கண்டார். அங்கு தியான நிலையில் சடகோபர் இருப்பதை கண்டார். சடகோபரை எழுப்ப நினைத்து கல் ஒன்றை போட்டார். சத்தம் கேட்டு அதுவரை கண் விழிக்காத பேசாமல் இருந்த சடகோபர் கண் விழித்து மதுர கவியாழ்வார் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அக்கணத்திலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என மதுரகவி ஆழ்வார் அழைக்க ஆரம்பித்தார். நம்மாழ்வாரை மதுர கவியாழ்வார் குருவாக ஏற்றுக் கொண்டதால் இத்தலம் குரு ஸ்தலமாக விளங்குகிறது.

இதையும் படிங்க:iPhone 16 Series : வெளிநாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படும் ஐபோன் 16.. எவ்வளவு தெரியுமா?

இந்த கோயில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும். திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூருக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ரயில் மற்றும் பேருந்து மூலமாக எளிதாக வரலாம். கண்டிப்பாக திருச்செந்தூர் வருபவர்கள் ஆண்டில் ஒருமுறையாவது இந்த கோயிலுக்கு சென்று வணங்கி பலனை பெற வேண்டும் என ஆன்மிக அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest News