Purattasi Month: புரட்டாசி 4 ஆம் சனிக்கிழமை.. பக்தர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்!
கிபி 1300 ஆம் ஆண்டு முள்ளிநாடு என்ற பாண்டிய நாட்டின் உட்பிரிவில் இந்த ஊர் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இந்த ஊரின் பெயர் சேரனை வென்றான் திருமடைவிளாகம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஊருக்குக் கிழக்கே ஏரி போல் பறந்து விரிந்து காணப்படும் குளத்தின் பெயரால் பாப்பான் குளம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. கிபி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் இக்கோயிலின் ராஜகோபுர திருப்பணி துவங்கி பாதியிலேயே நின்று போயிருந்தது.
பொதுவாக இந்தியாவில் இதிகாசங்கள் தொடர்புடைய கோயில்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைந்துள்ளது என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் ராமாயணம் தொடர்புடைய கோயில்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஏராளமாக உள்ளது. அவற்றில் ஒரு கோயில்தான் தென்காசி மாவட்டம் பாப்பான் குளம் என்ற ஊரில் அமைந்திருக்கும் ராமர் கோயில். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கடையம் நெடுஞ்சாலையில் பாப்பான் குளம் அமைந்துள்ளது. மேல பாப்பான்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் சென்றால் இந்த கோயிலை அடையலாம். இந்த ராமசாமி கோயிலில் காலை 6.30 மணி முதல் பகல் 11:30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.
இங்கு கல்யாண கோலத்தில் ராமபிரான் எழுந்தருளி இருக்கும் நிலையில் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை ஊர்மக்கள் அருகில் இருக்கும் கடனாநதியிலிருந்து தீர்த்தம் எடுத்து மேளதாளம் முழங்க பால்குடம் மற்றும் பன்னீர் குடங்களுடன் ஊர்வலமாக வந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
Also Read: Astrology: கனவிலோ, வீட்டிலோ குரங்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கிபி 1300 ஆம் ஆண்டு முள்ளிநாடு என்ற பாண்டிய நாட்டின் உட்பிரிவில் இந்த ஊர் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இந்த ஊரின் பெயர் சேரனை வென்றான் திருமடைவிளாகம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஊருக்குக் கிழக்கே ஏரி போல் பறந்து விரிந்து காணப்படும் குளத்தின் பெயரால் பாப்பான் குளம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. கிபி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் இக்கோயிலின் ராஜகோபுர திருப்பணி துவங்கி பாதியிலேயே நின்று போயிருந்தது. தொடர்ந்து பிற்காலத்தில் வந்த மன்னர்களால் இக்கோயில் முழுமை பெற்று செயல்பட்டு வருகிறது.
இந்தக் கோயிலின் எதிரே கலை மண்டபம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது ராமபிரான் எழுந்தருள்வது வழக்கம். ராஜகோபுரம் பகுதியை தாண்டினால் ஆதி ராமர் கோயிலும், தலவிருட்சமான புளிய மரமும் அமைந்திருக்கிறது.
கோயில் உருவான வரலாறு
ராமர் அசுரனை வதம் செய்து தேவர் குலத்தினரையும் முனிவர்களையும் பேராபத்திலிருந்து காத்த நிலையில் அவரின் உள்ளக்குறிப்பை உணர்ந்து ஈசன் அறிவுறுத்திய காரணத்தால் ராமருக்கு கருத்தீசர் என்ற பெயர் ஏற்பட்டது. அசுரவதம் முடிந்து ராமர் அங்கிருந்து கிளம்பும் போது முனிவர்கள் எதிர்காலத்தில் அப்பகுதி மக்களுக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினர். எனவே புளிய மரத்தடியில் நீங்கள் எழுந்தருள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தில் ராமபிரான் அருள்பாலிக்க சம்மதித்துள்ளார். அவர் பாதம் பதித்து நின்றதை குறிப்பிடும் வகையில் அவரது திருவடிகள் உள்ள சிற்ப பலகையும் மற்றும் ராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் ஆகியோர் புடைப்பு சிற்பம் தாங்கிய பலகைக்கல்லும் மூலவராக வைக்கப்பட்டு கோயில் ஒன்றை புளிய மரத்தடியில் எழுப்பியுள்ளனர். அதுவே ஆதி கோயில் என இன்றளவும் நிற்கிறது.
கோயிலின் உள்சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் காணப்படுகிறது. அங்கே ஆண்டாள். கருடாழ்வார். ஆதி பெருமாள், ரங்க மன்னார், திருவடிகள் நவநீதகிருஷ்ணர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னதிகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 11 நாட்கள் இக்கோயிலில் பிரம்மோற்சவம் விழா நடைபெறும். இதில் ஒன்பதாம் நாள் காலை சீதா கல்யாணமும், 10 ஆம் நாளில் தேரோட்டமும், 11 ஆம் நாள் தீர்த்த வாரியும் நடைபெறும்.
மேலும் வைகாசி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகமும், ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி திருவோணம் ஆகிய நாட்களில் வெங்கடாசலபதி அலமேலு மங்கை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நவராத்திரி கொலு, திருக்கார்த்திகை, மார்கழி 30 நாட்களும் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாடல் பாராயணம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி என ஆண்டு முழுவதும் இக்கோயிலில் திருவிழாக்கள் களைக்கட்டும். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் அமைய என பல்வேறு கோரிக்கைகளுக்காக புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி வழிபாடு செய்கிறார்கள். வாழ்வில் சகல செல்வங்களும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் குடும்பத்தினருடன் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று தரிசித்து விட்டு வர வேண்டும் என கூறப்படுகிறது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)