5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புரட்டாசி விரதம் – வழிபடும் முறையும் அதன் பலன்களும்!

Purattasi Fasting: தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக இருப்பது புரட்டாசி. சூரிய பகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் போது தான் புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தில் பகலில் தங்கம் உருகும் அளவுக்கு கடுமையான வெயில் அடிக்கும். இரவில் மண் உருகி வழிந்தோடும் அளவுக்கு நல்ல மழை பெய்யும்.

புரட்டாசி விரதம் – வழிபடும் முறையும் அதன் பலன்களும்!
கோப்புப்படம் (Photo Credit: David Talukdar/Moment/Getty Images)
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Updated On: 18 Sep 2024 17:38 PM

புரட்டாசி விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் இதை தெரிந்து கொண்டு விரதத்தை தொடர்ந்தால் விரதத்தின் முழு பலன்களும் கிடைக்கும். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் எப்படி அம்மனுக்கு உகந்த மாதமோ அதுபோல புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்கள் பெருமாளுக்கு உகந்த மாதங்கள் ஆகும். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்பது என்பது இந்த மாதத்தின் சிறப்பு. விரதம் என்பது கடவுளை நினைக்கவும் நமது தூய்மைப்படுத்தி வாழ்க்கையை நெறிப்படுத்த ஒரு பாதையாக அமைகிறது. அந்த வகையில அசைவத்தை விட்டு சாந்தம் கொடுக்கக்கூடிய சைவ உணவுகளை மட்டும் எடுத்து கொண்டு விரதம் இருக்கக்கூடிய ஒரு அருமையான மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது.

விரதம் மேற்கொள்ள வழிமுறை:

புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவம் எடுத்துக் கொள்ளாமல் முழுவதுமாக விரதத்தை கடைபிடிக்க‌ வேண்டும். அந்த மாதத்தில் வருகின்ற ஏதாவது ஒரு சனிக்கிழமை அன்று தளிகை போட வேண்டும். அதை முறையாக செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியம். சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

பின் தலை குளித்துவிட்டு பூஜை பொருட்களை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். அடுத்து தளிகை கேட்டு போக ஒரு சின்ன சொம்பினை சுத்தம் செய்து அது மேல திருமண் (திருநாமம்) சின்னமிட்டு துளசி மாலையை சுத்தி வைக்க வேண்டும். இந்த செம்பை தான் வீடு வீடா எடுத்து சென்று தளிகை கேட்க வேண்டும். மற்றவர்களிடம் சென்று அரிசி அல்லது காணிக்கை கேட்க வேண்டும்.

இது போல் செய்வதால் நம் அகந்தை அழியும் என்பது ஐதீகம். இதை இந்த விரதத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டும். யாசகமாக பெற்ற அரிசி, பணத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும். நைவேத்தியங்கள் படைப்பதற்கு இந்த அரிசியை சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும்.

Also Read : கனவில் விநாயகர் வந்தால் என்ன பலன் தெரியுமா?

நைவேதியம்மாக வாழை இலையில புளிசாதம், தயிர் சாதம், சக்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயசம் இதெல்லாம் கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு சிலர் சாதம், சாம்பார் கூட்டு, பொரியல், அப்பளம், வடை என்று படையல் போடுவார்கள். உங்களின் குலவிளக்கம் எதுவோ அதுபடி செய்து கொள்ளுங்கள். தரையில மாக்கோலம் போட்டு நைவேத்தியம் படை வேண்டும். பெருமாளுக்கு வடை மாலை சாத்த வேண்டும்.

வடையை 9 அல்லது 11 என்கிற ஒற்றப்படை எண்ணிக்கையில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சொம்பில் நாமம் போட்டு பச்சரிசியும் நாணயங்களையும் போட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும். துளசியை மாலையாக கட்டி சொம்பின் கழுத்து பகுதியில சுற்றி விட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தத்தை அவசியம் சேர்த்துக் கொகொள்ள வேண்டும்.

தீர்த்த பாத்திரத்தில் கொஞ்சம் பச்சை கற்பூரம், துளசி சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். மங்களப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பூப்பழம், தேங்காய் எல்லாவற்றையும் சாமி உருவப்படம் முன்னால் வைக்க வேண்டும். ரெண்டு மாவிளக்குகளையும் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த விரதம் அன்று மாவிளக்கு ஏத்துவது விசேஷமான பலன்களை தரும். திருப்பதிக்கு செல்வதற்காக காணிக்கை சேர்த்து வைக்கும் உண்டியலில் தளிகை கேட்டு வாங்கிய பணத்தை போட வேண்டும்.

எல்லாம் தயார் செய்த பிறகு தேங்காயை உடைத்து தேங்காய் தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பெருமாளுக்கு இரண்டு பக்கமும் தீபம் ஏற்றி மாவிளக்கிலும் தீபம் ஏற்ற வேண்டும். சாம்பிராணி போட்டுவிட்டு கற்பூர ஆரத்தியை படையல் முழுவதையும் சுற்றி எடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் “கோவிந்தா கோவிந்தா” என்று பெருமாளை அழைத்து வழிபட வேண்டும்.

இந்த விரதத்தை முடிக்கும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது மிக நல்லது. முடியாதவர்கள் பால் அருந்திக் கொள்ளலாம். சனிக்கிழமைகளில் மதியம் 1:30 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் எமகண்டம் இருப்பதால் 1:30 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்து விட வேண்டும். பிறகு நைவேதியம்மாக படைத்த எல்லா உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒன்றாக கலந்து ஒரு சின்ன வாழை இலையில் வைத்து அதை காகத்திற்கு வைக்க வேண்டும்.

காகம் அந்த உணவை எடுத்த பின்னால் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து விரதத்தை முடித்து உணவை சாப்பிட வேண்டும். குறிப்பாக இந்த நாளில் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. அண்டை வீட்டுக்காரர்களுக்கு நைவேத்தியங்களை பிரசாதமாக கொடுக்க வேண்டும். இதுதான் புரட்டாசி விரதத்தை முழுதாக கடைபிடிக்க செய்ய வேண்டிய சரியான வழிமுறை.

புரட்டாசி விரதம் கொடுக்கும் பலன்கள்:

புரட்டாசி சனிக்கிழமை விரதம் நிறைய அற்புதங்களை தரும் விரதம். இந்த விரதத்தை சரியான முறையில் கடைபிடிப்பவர்கள் அந்த வருடம் முழுவதும் குறையாத செல்வத்தை பெறுவார்கள். கூடவே 16 பேறுகள் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த விரதத்தால் சனி பகவானுடைய பார்வையும் பலவினமாகும். சனி திசை நடப்பவர்கள், ஏழரை சனி அஷ்டமி சனி, கண்டக சனி என சனி பகவானின் பிடியில் இருப்பவர்கள் இந்த விரதம் இருந்து பெருமாள் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கி சுபயோகம் கூடி வரும் . திருமண தடையும் நீங்கும்.

Also Read: வசூலை அள்ளிய பழனி ஆண்டவர் கோயில்.. விடுமுறை நாட்களில் மட்டும் ரூ. 5 கோடி காணிக்கை..

Latest News