புரட்டாசி மாதம் அனுமன் வழிபாடு.. வீட்டில் விரதம் இருந்து பூஜை செய்யும் வழிமுறைகள்! - Tamil News | purattasi month hanuman worship pooja procedure in home in tamil | TV9 Tamil

புரட்டாசி மாதம் அனுமன் வழிபாடு.. வீட்டில் விரதம் இருந்து பூஜை செய்யும் வழிமுறைகள்!

Published: 

20 Sep 2024 22:24 PM

Hanuman: புரட்டாசி மாதம் என்றாலே பூஜைகள், விரதங்கள் என ஒவ்வொரு வீட்டிலும் வழிபாடுகள் களைக்கட்டும். புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாட்களுமே தெய்வீக வழிபாட்டிற்கு உகந்தது தான். இருக்கக்கூடிய 12 மாதங்களில் புரட்டாசி மாதம் இறைவழிபாட்டில் ஈடுபட்டால் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறும் என்பது நம்பிக்கை.

புரட்டாசி மாதம் அனுமன் வழிபாடு.. வீட்டில் விரதம் இருந்து பூஜை செய்யும் வழிமுறைகள்!

அனுமன் ( Image : Getty)

Follow Us On

புரட்டாசி சனிக்கிழமைகளில் அனுமனை வழங்கினால் சனி பகவான் நமக்கு கொடுக்கும் தொல்லைகளிலிருந்து விமோசனம் அடையலாம் என புராணங்கள் கூறுகிறது. சனிபகவான் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வங்களுக்கும் தொல்லை கொடுக்கும் என்பதை புராணங்கள் வாயிலாக அறிய முடியும். அதன்படி சொல்லப்படும் புராணக்கதை என்னவென்றால், அனுமனை பிடிப்பதற்கு சனி பகவான் அவரிடமே அனுமதி கேட்டு தொந்தரவு செய்தார். சனிபகவானின் தொல்லை தாங்க முடியாத அனுமன் தன் தலையின் மீது அமர்ந்து கொள்ள அனுமதித்தார். தன்னை பிடித்துக் கொண்ட சனி பகவானை கீழிறக்க யோசித்த அனுமன் உடனடியாக தன் வாலின் மூலம் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி சனிபகவான் தலையின் மீது வைத்து விட்டார்.

வாரம் தாங்க முடியாத சனிபகவான் தன்னை விடுவிக்குமாறு ஆஞ்சநேயர் இடம் கெஞ்சினார். அதற்கு என்னையும் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து வைத்துக் கொண்டால் அவர்களை தொல்லை செய்யக்கூடாது என்று வாக்கு கொடு என்பதை அனுமன் சனி பகவானிடம் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கட்டளையை சனி பகவான் ஏற்றுக் கொண்ட பின்னர் அனுமன் தலையிலிருந்து கீழே இறக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை புரட்டாசி சனிக்கிழமைகளில் யாரேனும் ஒருவர் அனுமனை வழிபட்டால் அவர்களின் சனி தோஷம் நீங்கும். இதனால்தான் புரட்டாசி சனிக்கிழமையில் அனுமனுக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது.

அனுமன் என்றாலே ஒரு நம்பிக்கை பிறக்கும்.‌ மற்றவர்கள் மீது வந்து பாசம் வைக்கின்ற உணர்வை ஏற்படும். அனுமரை வழிபடக்கூடிய அவர்களின் பக்தர்களை எல்லோரும் பிறருக்கு உண்மையாக இருப்பார்கள். எப்பொழுதும் நீதிநெறி தவறாமல் வாழ வேண்டும் என்று மனதில் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொள்வார்கள். பிறரை தவறான கண்ணோட்டத்தில் என்றுமே பார்க்க மாட்டார்கள். சுத்தமான பக்தியுடையவர்களாக இருப்பார்கள்.

Also Read: புரட்டாசி சனி விரதம்.. இப்படி பூஜை செய்தால் நன்மைகள் தேடி வரும்!

வீட்டில் அனுமனை வழிபடுவது எப்படி?

காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி ராம நாமம் சொல்ல வேண்டும். ராமா என்று நம் வாயால் அழைத்தாலே அந்த இடத்தில் ஆஞ்சநேயர் வந்து விடுகிறார். 108 முறை ஆஞ்சநேயர் பெயரை சொல்லி அழைத்தால் தான் ஆஞ்சநேயர் வருவார். ஆனால் ஒரே ஒருமுறை ராம நாமத்தை உச்சரித்தால் அங்கே உடனடியாக ஆஞ்சநேயர் வருகிறார்.

ராம நாமத்தை சொல்லி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். காலையில் துளசி நீர் மட்டும் குடித்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். மதிய நேரங்களில் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் ஸ்ரீராமஜெயம் எழுத வேண்டும். இல்லையென்றால் சுந்தரகாண்டம் படிக்கலாம். சுந்தரகாண்டம் படிப்பது புண்ணியங்கள் பல ஏற்படுத்தி தரும். அனுமனுடைய படத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அனுமருக்கு துளசி மாலையை போடுவது உங்களுக்கு வெற்றியை கொண்டு வந்து தரும். மேலும் செல்வக் கடாட்சத்தை உண்டாக்கும்.

அதைப்போல் வெற்றிலை மாலை போட்டால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். ஆஞ்சநேயரை வழிபடுபவர்கள் வீட்டில் செந்தூரம் வைத்துக் கொள்ளுங்கள். செந்தூரத்தை திலகமாக இட்டுக் கொள்வது அனுமனுடைய ஆசீர்வாதத்தை பெற்று என்பது நம்பிக்கை.

உடல் நலம் குன்றியவர்கள் அனுமனை வழிபட்டு அவருக்கு வடை மாலை சாத்தினால் நிச்சயமாக குணம் அடைவதோடு உடல் வலிமையும் அடையும் என்பது ஐதீகம்.

என்ன நைவேத்தியம் வைக்க வேண்டும்?

வாழை இலையில் பொரிகடலை, ஏதாவது பழங்கள் குறிப்பாக கொய்யாப்பழம், வாழைப்பழம் வைக்கலாம், அவல், கடலை, வெண்ணெய், சக்கரை, தேன், பானகம், இளநீர் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்தப் படையலில் கட்டாயமாக வெண்ணெய் இடம்பெற வேண்டும்.

இப்படி செய்து வழிபடும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் கை கூடுகிறது. குடும்பத்தோடு அமர்ந்து ராம நாமத்தை உச்சரிக்கும் போதும் ஆஞ்சநேயரை அழைக்கும் போதும் கட்டாயமாக நாம் நினைத்தது பலிக்கும்.

சிலர் ஆஞ்சநேயருக்கு வேண்டுதல் வைத்திருப்பார்கள். நினைத்த காரியங்கள் நடக்காமல் தடையாகும். அதற்கு வெண்ணை சாத்தி வழிபட்டால் தடைகள் நீங்கும். நினைத்த காரியங்கள் நடக்காத பொழுது வெண்ணை சாத்தி வழிபட்டால் வெண்ணெய் உருகுவதற்குள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அதனால்தான் இன்று வரை ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தி வழிபடுவது பிரச்சித்தி பெற்ற ஒன்றாக இருக்கிறது. அனுமருடைய வாலில் பொட்டு வைத்து வழிபடும் பொழுது நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இப்படி அனுமனை வழிபடும் போது தடைகள் நீங்கி நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

Also Read: புரட்டாசி விரதம் – வழிபடும் முறையும் அதன் பலன்களும்!

பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version