5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புரட்டாசி மாத ராசிபலன்… துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!

Purattasi Month Horoscope: தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கி இருக்கிறது. துலாம் முதல் மீனம் வரையிலான‌ ராசிக்காரர்கள் எதைச் செய்யலாம், எதை செய்யக்கூடாது, திருமணம் முடிவுகள், பொருளாதாரம் ஆகியவை பற்றி முடிவு எடுக்க ஜாதக ரீதியிலான ராசி பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

புரட்டாசி மாத ராசிபலன்… துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!
புரட்டாசி மாத ராசி பலன் (Photo Credit: Sarayut Thaneerat/Moment/Getty Images)
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 17 Sep 2024 13:51 PM

துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு இருந்தாலும் வரவிற்கு ஏற்ற செலவுகள் இருப்பதால் சேமிப்பிற்கு சாத்தியம் இல்லை. அடிக்கடி ஏதாவது ஒரு உடல் உபாதை இருந்து கொண்டே இருக்கும். மருத்துவச் செலவுகளை தவிர்க்க முடியாது. திருமண முயற்சிகளில் அலைச்சல் தான் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் விரக்தி ஏற்படக்கூடும். இதற்கு குடும்பக் கவலைகளும் காரணமாகும். குடும்பத்திலும், நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். உத்தியோகத்தை பொருத்தவரை அன்றாட பணிகளில் கவனமாக இருத்தல் அவசியமாகும். நிர்வாகத்தினரை பற்றி சக ஊழியர்களுடன் விமர்சிக்க வேண்டாம்.

பெண் ஊழியர்களுடன் நெருங்கி பழக வேண்டாம். வியாபாரத்தை பொருத்தவரை உங்கள் லாபத்தை காப்பாற்றிக்கொள்ள நீங்கள் பாடுபட வேண்டி இருக்கும். மேலும் பல தருணங்களில் பண நெருக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் நல்ல முன்னேற்றம் காண முடியும். விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்க வாய்ப்புண்டு. நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் வெற்றிக்கனியை பிடித்து விடுவீர்கள். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் தங்கள் பொறுப்புகளில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். இந்த ராசிக்காரர்கள் கை பணத்தை எண்ணி, எண்ணி செலவளியுங்கள். ஏனெனில் மாதக் கடைசியில் பற்றாக்குறை ஏற்படக்கூடும். பணம் மற்றும் பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். பொருட்கள் களவு போக வாய்ப்புள்ளது.

விருச்சகம்: நிதிநிலைமை இம்மாதம் முழுவதும் திருப்திகரமாக உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். முடிந்தவரை தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. திருமணம் சம்பந்தமான முயற்சிகளுக்கு சாதகமாக இப்புரட்டாசி மாதம் இருக்கும். உத்தியோகத்தை பொருத்தவரை வேலை சுமையும் பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாக இருக்கும். உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வு மேலும் தாமதப்படும். சக ஊழியர்கள் எவரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தை பொருத்தவரை போட்டிகள் கடுமையாக இருக்கும் ஆனால் அது உங்கள் லாபத்தை பாதிக்காது. அளவோடு புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வெளி மாநிலங்களில் உங்கள் சரக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் லாபம் படிப்படியாக உயர்வதை காணலாம்.

மாணவர்களை பொறுத்தவரை பாடங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். உயர்கல்விக்கு உங்கள் விருப்பம் போல் இடம் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தேடி வரும். கணவரின் அன்பும் அரவணைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும். இந்த மாதத்தில் கடின உழைப்பை தவிர்க்க வேண்டும். விருச்சக ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்துங்கள்.

Also Read: புரட்டாசி மாத ராசிபலன்… துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!

தனுசு: இந்த ராசிக்காரர்கள் சற்று கடுமையான பண நெருக்கடியை சந்திக்க நேரிடும். மாதத்தின் ஆரம்பத்திலிருந்து திட்டமிட்டு செலவு செய்தல் மிகவும் அவசியமாகும். முடிந்த வரையில் புதிய கடன்களை ஏற்காமல் இருப்பது எதிர்கால நிம்மதிக்கு வழிவகுக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். வீண் செலவுகளில் பணம் விரயமாகும். அடிக்கடி ஏதாவது ஒரு உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை ஏற்க நேரிடும். உத்தியோகத்தை பொருத்தவரை அலுவலக சூழ்நிலை மனதிற்கு இதமாக இருக்கும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணிகளில் உற்சாகத்தை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மனதிற்கு உகந்த வேலை கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாக இருக்கும். நிதி நிறுவனங்களின் ஆதரவு குறையும்.

புதிய கடன்களை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். புதிய முயற்சிகளில் முதலீடு செய்யாமல் இருப்பது முக்கியம். மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் மேலிடும். தேர்வுகளில் மிகச் சரியான விடைகளை அழித்து உயர்ந்த மதிப்பெண்களை பெறுவது உறுதி. விளையாட்டுக்கள், பேச்சுப்போட்டிகள் ஆகியவற்றிலும் வெற்றிக்கனியை எளிதில் பிடித்து விடுவீர்கள். பெண்களைப் பொறுத்தவரை குடும்ப சூழ்நிலை மன அமைதியை பாதிக்கும். திருமணம் ஆகி உள்ள பெண்களுக்கு கணவருடன் கருத்து வேற்றுமையும் அந்நியோன்யக் குறைவும் ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை குறைத்துக்கொள்ள முயற்சிக்கவும். வரவை விட செலவுகளை அதிகமாக இருக்கும். எனவே குடும்பத்தில் கடன் சுமை அதிகரிக்கும். ஆதலால் திட்டமிட்டு செயல்படுவது அதிக நன்மையை தரும்.

மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப சூழ்நிலை மன நிறைவு அளிக்கும். சிறு சிறு சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணமான பெண்கள் கருத்தரிப்பதற்கு ஏற்ற காலம் இது. உபயோகத்தை பொருத்தவரை அலுவலகத்தில் ஏற்பட்ட வந்த பல பிரச்சனைகள் இந்த மாதம் நல்லபடியாக தீரும். எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் நீங்கும். இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு இனிக் கிட்டும். வெளிநாடுகளில் வேலை பார்க்க விரும்புபவர்கள் அதற்காக முயற்சிக்கலாம். மாணவர்களுக்கு உடலில் சோர்வும் அசதியும் மனதில் கவலைகளும் ஏற்படும்.

பாடங்களில் மனதை ஊன்றி செலுத்துவது சிரமமாக இருக்கும். பெண்களுக்கு ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த ராசிக்காரர்கள் பேச்சில் நிதானம் வேண்டும். முன்கோபம் அறவே கூடாது.

கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த இயலாது. வருமானம் நல்லபடி இருப்பதால் செலவுகளை சமாளித்து விடுவீர்கள். அடிக்கடி ஏதாவது ஒரு உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை ஏற்க நேரிடும். மனதில் எதிர்காலத்தை பற்றிய கற்பனையான அச்சம் உருவாகும். கணவர் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். உத்தியோகத்தை பொருத்தவரை சிலர் புதிய பொறுப்புகளை ஏற்க நேரிடும். சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படும். உடல் நலன் பாதிக்கப்பட்டு பணியில் இருந்து சில நாட்கள் ஓய்வெடுக்க நேரிடும். அலுவலகத்தில் எவரையும் நம்ப வேண்டாம். வியாபாரத்தை பொருத்தவரை கடினமான போட்டியை சமாளிக்க வேண்டி வரும்.

முக்கிய தருணங்களில் நிதி நிறுவனங்கள் கைவிட்டு விடும். மாணவர்கள் ஆரோக்கியத்திலும் படிப்பிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது, படிப்பது, உறங்கச் செல்வது என்று கட்டுப்பாடான வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக படிப்பும் பாதிக்கப்படும். பெண்களுக்கு கணவரின் மனநிலை மிகவும் வேதனை தரும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் சக ஊழியர்களிடமிருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகளை தவிர்க்க முடியாது. திருமணம் முயற்சிகள் தோல்வி வரும். பூர்விக சொத்து கைவிட்டுப் போகும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படுவதற்கு சாத்திய கூறு உள்ளது. சிலர் வழக்குகளில் சிக்கி நீதிமன்றம் செல்ல நேரிடும். உத்தியோகத்தை பொறுத்தவரை அலுவலகப் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் நிர்வாகத்தினரை திருப்தி செய்ய இயலாது. சிலருக்கு அவர்களது விருப்பத்திற்கு மாறான இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வியாபாரத்தைப் பொறுத்தவரை மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்வதால் விற்பனையை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.

வரவேண்டிய பாக்கிகள் தக்க நேரத்தில் வராது. இதனால் கடும் பண பிரச்சனையை நீங்கள் சமாளிக்க நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் மனனம் செய்வது கடினமாக இருக்கும். வெளிநாடு சென்று கல்வி பெற விரும்பும் மாணவ மாணவியருக்கு விசா கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். பல்வேறு காரணங்களினால் மேல்படிப்பு தடைப்படக்கூடும். பெண்களைப் பொறுத்தவரை பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமை, நிதானம் ஆகியவற்றை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இன்று வளைந்து கொடுத்தால் நாளை நிமிர்ந்து கொள்ளலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இந்த ராசிக்காரர்கள் கைப்பணத்தை எண்ணி, எண்ணி செலவழியுங்கள். பிறருடன் அனாவசியமாக பேச வேண்டாம். எக்காரணத்திலும் பொறுமை, நிதானம் ஆகியவற்றை இழக்க வேண்டாம்.

Also Read: Weekly Horoscope: திருமணம் கைக்கூடும் ராசிக்காரர்கள்… யாருக்கு அதிக லாபம்? இந்த வார ராசிபலன்

Latest News