Kulasai Mutharamman Temple: மைசூருக்கு இணையான குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா! - Tamil News | purattasi month kulasekarapattinam-mutharamman-temple special | TV9 Tamil

Kulasai Mutharamman Temple: மைசூருக்கு இணையான குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா!

Published: 

28 Sep 2024 18:00 PM

இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. இது அனைத்து சமுதாய மக்களாலும் கொண்டாடப்படும் கோயிலாக உள்ளது.  இக்கோயிலில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். இங்கு பக்தர்கள் முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். புரட்டாசி மாதம் மாலை அணிந்து ஆண், பெண்கள் அனைவரும் விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.

Kulasai Mutharamman Temple: மைசூருக்கு இணையான குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா!

கோப்பு புகைப்படம்

Follow Us On

குலசை முத்தாரம்மன் கோயில்: இந்தியாவை பொறுத்தவரை தசரா பண்டிகை என்றாலே கர்நாடகா மாநிலம் மைசூரு தான் நம் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் மைசூருக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு ஊரில் தசரா பண்டிகை பிரபலம் என்பது பலருக்கும் தெரியாது. அந்த இடம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தான். 300 ஆண்டுகள் பழமையான இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. இது அனைத்து சமுதாய மக்களாலும் கொண்டாடப்படும் கோயிலாக உள்ளது.  இக்கோயிலில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். இங்கு பக்தர்கள் முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். புரட்டாசி மாதம் மாலை அணிந்து ஆண், பெண்கள் அனைவரும் விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது.

இதையும் படிங்க: Exclusive: மதிய உணவாக சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்..? டாக்டர் கொடுத்த டிப்ஸ்!

கோயில் உருவான வரலாறு

குலசேகர பாண்டிய மன்னன் பெயரால்தான் இந்த ஊருக்கு குலசேகரப்பட்டினம் என்ற பெயர் வந்தது. அந்த மன்னன் சுற்றியுள்ள சிற்றரசர்களை எல்லாம் போரிட்டு வென்று தனது ஆதிக்கத்தை மதுரை முழுவதும் பரப்பினார். இதனைத் தொடர்ந்து கேரள நாட்டை கைப்பற்ற எண்ணி திருவனந்தபுரம் மன்னரிடம் போரிட்ட நிலையில் குலசேகர பாண்டியன் தோல்வியுற்றான். பின்னர் தனது நாட்டுக்கு திரும்பி வரும் வழியில் வெகு நேரமானதால் ஓய்வெடுக்கும் வண்ணம் தூங்கியுள்ளான். அப்போது குலசேகர பாண்டிய மன்னன் கனவில் அறம் வளர்த்த நாயகி அம்மன் தோன்றினாள். அவள், “குலசேகர பாண்டிய மன்னனே… தூங்கி விடாதே.. ஒரு முறை போரில் தோற்றால் என்ன மறுமுறை முயற்சி செய்” என ஆசீர்வதித்து மறைந்தாள். மீண்டும் மன்னன் படையெடுத்து போரில் வெற்றி பெற்றான். தனக்கு ஆசி வழங்கிய அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு கோயில் கட்டினான். அந்தக் கோவில் தான் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்படுகிறது.

திருமண கோலத்தில் காட்சி கொடுக்கும் சிவன் பார்வதி

தற்போது முத்தாரம்மன் என அழைக்கப்படும் இக்கோயிலின் அம்மனின் இயற்பெயர் தட்டத்து அம்மன் ஆகும். கோபம் வரும் சமயத்தில் ஊரில் உள்ள மக்களுக்கு முத்துக்களை வாரி போடுவது இந்த அம்மனின் வழக்கம் என்பதால் இன்று இவருக்கு முத்தாரம்மன் என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. தென் தமிழகத்தில் பெருவாரியான பெயர்கள் முத்தாரம்மன் பெயரை அடிப்படையாக கொண்டு இருக்கும்.

இதே போல் குலசேகரப்பட்டினம் அருகே கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் முன்பொரு காலத்தில் வியாபாரிகள் தோணிகளில் பொருட்களை எடுத்துச் சென்று வணிகம் செய்வது வழக்கம். ஒரு வணிகர் தனது மனைவியுடன் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சென்றபோது கடல் அலைகளால் அவருடைய பொருட்கள் அனைத்தும் கடலில் மூழ்கியது. இதனால் வேதனையற்ற இருவரும் சிவனை வேண்டினார்கள். சிவன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு காட்சி தந்து என்ன வரவேண்டும் என கேட்டார்.

இதையும் படிங்க: Food Recipes: புரட்டாசி சனிக்கிழமை விரதமா..? இந்த முறையில் பாயாசம் செய்து விரதம் விடுங்க!

அதற்கு நீங்கள் எனக்கு காட்சி தந்ததே மிகப்பெரிய பாக்கியம். நீங்கள் இருவரும் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சித் தர வேண்டும்  என கோரிக்கை விடுத்தார். அந்த வகையில் குலசேகரப்பட்டினம் கோயிலில் சிவனும் பார்வதியும் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாராமனாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

மேலும் இந்த கோவிலைச் சுற்றி கருங்காளி, பத்ரகாளி, சந்தியம்மன், அங்காளம்மன், தட்டத்தியம்மன், பரமேஸ்வரி, வீரகாளியம்மன்ம் அரம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய எட்டு வகையான காளியம்மன்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். இதில் வீரகாளியம்மனுக்கு மட்டும் ஊருக்கு வெளியே கோயில் அமைந்துள்ளது.

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா

குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழாவை காண தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அலை கடலென திரண்டு வருவது வழக்கம். இதன் பின்னாலும் ஒரு வரலாறு உள்ளது. உலகையே தன் கைக்குள் கொண்டு வர அசுர பலம் கொண்ட அரக்கன் ஒருவன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக தவம் புரிந்தான். அவனின் தவத்தை மெச்சிய சிவன் உடனடியாக கேட்ட வரத்தை வழங்குகிறார். ஆனால் அசுரன் சிவனையே கொல்ல முயற்சிக்கிறான். இதனால் பார்வதி தேவி கோபம் கொண்டு துர்க்கையாக மாறி அரக்கனை அழித்தாள்.

இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் குலசேகரப்பட்டினத்தில் பத்தாம் நாளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் செய்யும் போது அசுரனின் தலை கீழே விழுவதை தடுத்து துர்க்கை அம்மன் சிம்மவாகனத்துடன் தன் கையில் ஏந்துவாள். மேலும் அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் ரத்தம் வழியாக மீண்டும் அவன் அசுரனாக உருவாகக்கூடாது என எண்ணிய துர்க்கை அம்மன் சந்தியம்மனை அசுரனின் ரத்தத்தை உறிஞ்ச கட்டளையிட்டதாகவும்,  இவ்வாறு உறுஞ்சிய துளிகள் மீண்டும் கீழே விழும் போது காளியம்மன் ஆக உருவெடுத்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஒருமுறையாவது குலசேகரப்பட்டினம் சென்று வாருங்கள்.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version