5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Etteluthu Perumal Temple: குழந்தை வரம் அருளும் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில்!

ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்திருந்த மாயாண்டி சித்தரின் கனவில் ஸ்ரீ ராமபிரான் தோன்றினார். அப்போது, “ராம அவதாரத்தின் போது ஜடாயுவுக்கு தாமிரபரணி நதிக்கரையில் திதி செய்த பின்னர் தான் அமர்ந்து ஓய்வு எடுத்த இடம் அருகன்குளத்தில் இருப்பதாக தெரிவித்தார். எனவே அங்கு நான் எட்டெழுத்து பெருமாளாக பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளேன். எனக்கு அந்த இடத்தில் நீ எனக்கு ஒரு கோயில் கட்டி வணங்கு” என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Etteluthu Perumal Temple: குழந்தை வரம் அருளும் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 16 Oct 2024 12:56 PM

ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில்: திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அருகன்குளம் என்ற இடத்தில் தான் தர்மபதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தோன்றியதற்கு பின்னால் சுவாரஸ்யமான வரலாறு ஒன்று உள்ளது. அதாவது இக்கோயில் தோன்ற காரணமானவர் சித்தர் பெருமகனார் மாயாண்டி சித்தர் ஆவார். 1891 ஆம் ஆண்டு ஆனி மாதம் 18ஆம் தேதி அருகன்குளத்தில் பிறந்தவர் சிறு வயது முதலே ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவராக வளர்ந்தார். இதன் காரணமாக வல்லநாடு மலைக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் தியானம் செய்ய சென்றவர் நீண்ட காலமாக வீடு திரும்பவே இல்லை. ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்திருந்த மாயாண்டி சித்தரின் கனவில் ஸ்ரீ ராமபிரான் தோன்றினார். அப்போது, “ராம அவதாரத்தின் போது ஜடாயுவுக்கு தாமிரபரணி நதிக்கரையில் திதி செய்த பின்னர் தான் அமர்ந்து ஓய்வு எடுத்த இடம் அருகன்குளத்தில் இருப்பதாக தெரிவித்தார். எனவே அங்கு நான் எட்டெழுத்து பெருமாளாக பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளேன். எனக்கு அந்த இடத்தில் நீ எனக்கு ஒரு கோயில் கட்டி வணங்கு” என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Also Read: புரட்டாசி மாதம்.. திருப்பதி போக முடியலையா? வேண்டுதலை நிறைவேற்ற இங்கு போகலாம்!

எட்டெழுத்து பெருமாளின் ரகசியம்

உடனடியாக மாயாண்டி சித்தர் அருகன் குளம் வந்து பெருமாளுக்கு கோயில் கட்டினார். ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரிப்பதன் எதிரொலியாக அந்த எட்டு எழுத்துக்களையும் சேர்த்து ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் என இங்கு கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு பெயர் சூட்டினார். இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமர் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கோசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரக்கம், கனிவு, அன்பு, ஆர்வம், கருணை போன்ற அணிகலன்கள் நிறைந்த கண்களை கொண்ட கண்ணனாக சிவபெருமான் மற்றும் கோமாதாவாகிய பசுவுடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழலுடன் நின்ற கோலத்தில் மகாதேவ கோபாலகிருஷ்ணன் அருள் பாலிக்கிறார்.

கோசாலையில் ஆலயம்

உலகெங்கும் அமைக்கப்பட்டுள்ள கோயில்களில் கோசாலை என்ற இடம் தனியாக இருக்கும். ஆனால் கோசாலையில் ஆலயம் என்பது ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயிலில் மட்டுமே அமைந்துள்ளது. கோகுலத்தில் கிருஷ்ணர் பசுக்களுடன் கொஞ்சி விளையாடிய போது தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். இந்த கோசாலையில் கிருஷ்ணர் இருபக்கமும் பசுக்கள் சூழ்ந்து இருக்க கோ கால கிருஷ்ணராக வீற்றிருக்கின்றார். இந்த கோசாலையில் இருக்கும் பசுக்களை பராமரிப்பவர்கள் மட்டுமின்றி இங்கு நடைபெறும் கோபூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குலவிருத்தி ஆகியவை அனைத்தும் நீக்க மறப்பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குஜராத்தில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..

எனவே தான் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் நடக்கும் கோசாலை பூஜையில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோயிலில் அன்னதர்மம் மற்றும் திருமணி வெண்முத்திரை ஆகிய இரண்டு விஷயங்கள் உள்ளது. இதில் திருமணி வெண்முத்திரை என்பது மகாலட்சுமியின் அருளால் நிறைந்த முத்திரை ஆகும். நெற்றியில் இடப்படும் இந்த முத்திரையை பெறுபவர்கள் அனைத்து விதமான நன்மைகளையும் பெற்று மேன்மையான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அதேபோல் இக்கோயிலில் மார்கழி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை திருப்பூட்டு யாகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும். மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற வித்யாலட்சுமி வேள்வி, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்கு புத்திர காமேஷ்டி யாகம் ஆகியவையும் நடைபெறுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா எங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். அப்போது வழங்கப்படும் கிருஷ்ண கலய பிரசாதத்தை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள். இந்த பிரசாதத்தில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை போட்டு தங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கினால் நாம் எந்த கோரிக்கையை முன்வைத்து வணங்குகிறோமோ அது விஷ்ணுவால் உடனடியாக கேட்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில் காலை ஆறு மணி முதல் 10 மணி வரையும்,  மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் நடை திறந்திருக்கும். திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 6 கிலோமீட்டர் தொலைவில் எட்டெழுத்து பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல மினி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

Latest News