புரட்டாசி மாதம்.. திருப்பதி போக முடியலையா? வேண்டுதலை நிறைவேற்ற இங்கு போகலாம்!

தாமிரபரணி நதிக்கரையில் சிறிய மலை குன்றின் மீது கிழக்கு நோக்கி இந்த கோயில் அமையப் பெற்றுள்ளது. இந்த கோயிலின் கருவறைக்கு நேர் எதிரே கருடாழ்வார் சன்னதி அமைய பெற்றுள்ளது. அவரை வணங்கி விட்டு உள்ளே நுழைந்தால் கருவறைக்கு முன் உள்ள கொழுமண்டபத்தில் உற்சவர் சீனிவாச பெருமாள் தாயார் உடன் நின்று கோலத்தில் காட்சி தருகிறார். உள்பிரகாரத்தில் தாயார்கள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் பரமபத வாசல் ஆகியவையும் உள்ளது.

புரட்டாசி மாதம்.. திருப்பதி போக முடியலையா? வேண்டுதலை நிறைவேற்ற இங்கு போகலாம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

24 Sep 2024 17:32 PM

திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயில்: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கருட சேவை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு பெயர்களில் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரம் பகுதியில் கோயில் கொண்டுள்ள பெருமாள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். பொதுவாக பெருமாள் கோயில் என்றாலே நாம் அனைவருக்கும் திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்கள் தான் நினைவில் வரும். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் சிறு சிறு கோயில்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் பெருமாள் பற்றி நம் நிச்சயம் அறிந்து அக் கோயில்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என சொல்லப்படுகிறது.

Also Read: Srilanka PM: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர்.. யார் இந்த ஹரிணி அமரசூரிய?

திருவேங்கடநாதபுரம் கோயில் வரலாறு

முன்னொரு காலத்தில் திருவேங்கடநாதபுரம் வைப்பராட்சியம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த இடத்தில் வியாச முனிவரின் சீடரான பைலர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தர் ஆவார். அக்காலத்தில் பெருமாளுக்கு என்று தனியாக கோயில் அல்லது திருவுரும் அந்த பகுதியில் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் தன் மனதிற்குள் பெருமாளை நினைத்து தினமும் பூஜை செய்து வந்தால் பைலர்.

இப்படியான நிலையில் ஒருநாள் அவர் ஒரு கோடி மலர்களை தாமிரபரணி நீரில் பெருமாளை நினைத்து அர்ச்சனை செய்கிறார். அப்போது அந்த மலர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய ஒளியாக தோன்றியுள்ளது. அதில் பெருமாள் வெங்கடாசலபதி கோலத்தில் தாமிரபரணி அம்மையோடு காட்சியளித்துள்ளார்.

இதனைக் கண்டு மனம் இன்பமுற்ற பைலர் யான் கண்ட இந்த காட்சியை இங்கு தேடி வரும் பக்தர்களும் காண வேண்டும் என வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திருவேங்கடநாதபுரம் கோயிலில் பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி ஆக பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

கோயிலின் சிறப்பு

இந்தக் கோயிலின் கருவறையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக அருள் பாலிக்கும் பெருமாள் நான்கு கரங்கள் கொண்டும், அதில் சங்கு சக்கரம் ஏந்தியும் நின்ற கோலத்தில் அர்ச்சாவதாரம் மூர்த்தியாக காட்சி தருகிறார். இந்தக் கோயிலின் முகப்பில் 12 படிகள் உள்ளது. இவை பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், குலசேகர ஆழ்வார், மதுரகவி ஆழ்வார், திருப்பானாழ்வார்,  தொண்டரடி பொடியாழ்வார் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்களின் பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: TN Deputy CM : ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்.. துணை முதலமைச்சர் குறித்த கேள்விக்கு மு.க.ஸ்டாலி பதில்!

தாமிரபரணி நதிக்கரையில் சிறிய மலை குன்றின் மீது கிழக்கு நோக்கி இந்த கோயில் அமையப் பெற்றுள்ளது. இந்த கோயிலின் கருவறைக்கு நேர் எதிரே கருடாழ்வார் சன்னதி அமைய பெற்றுள்ளது. அவரை வணங்கி விட்டு உள்ளே நுழைந்தால் கருவறைக்கு முன் உள்ள கொழுமண்டபத்தில் உற்சவர் சீனிவாச பெருமாள் தாயார் உடன் நின்று கோலத்தில் காட்சி தருகிறார். உள்பிரகாரத்தில் தாயார்கள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் பரமபத வாசல் ஆகியவையும் உள்ளது.

இந்த திருக்கோயில் திருப்பதிக்கு நிகரான பெருமையை பெற்றுள்ளதால் தென்திருப்பதி என அனைவராலும் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு நேர்ந்து கொண்ட நேர்த்திக்கடன்களை அங்கு சென்று செலுத்த முடியாதவர்கள் இக்கோயிலில் சென்று செலுத்தலாம் எனவும் சொல்லப்படுகிறது.

திருப்பதி கோயிலில் மேற்கே பாபநாச தீர்த்தம் மற்றும் ஆகாய கங்கை தீர்த்தம் இருக்கும். அதே போல் இந்த கோயிலின் மேற்கே பாபநாசம் தீர்த்தமும், கங்கைக்கு நிகரான தாமிரபரணி தீர்த்தம் இருப்பது சிறப்பாகும்.எப்படி திருப்பதிக்கு அருகே காலகஸ்தியில் ராகு ஸ்தலமான சிவாலயம் அமைந்துள்ளது. அதேபோல் திருவேங்கடநாதபுரம் அருகே குன்னத்தூர் என்ற பகுதியில் ராகு ஸ்தலமான கோத பரமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் நள்ளிரவில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய நாளில் கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் கிரி பிரகாரத்தில் உலா வருவதோடு 12 படிகள் வழியாக ஒய்யாளி சேவையில் எழுந்தருளுவதை காண பக்தர்கள் கூட்டம் திரளாக கூடும். அது மட்டுமல்லாமல் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழாவும் இக்கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வெங்கடாஜலபதிக்கு பால் பாயாசம் செய்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பதை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.மேல திருவேங்கடநாதபுரத்தில் வெங்கடாஜலபதி கோயில் கொண்டு நிலையில் அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கீழ திருவேங்கடநாதபுரம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சரியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?