5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Purattasi Saturday: புரட்டாசி சனிக்கிழமையில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?

புரட்டாசி மாதம் பெருமாள் மற்றும் அம்பிகைக்கு மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. அதனால் தான் பெருமாள் கோயில்கள் மற்றும் அம்மன் கோயில்கள் களைகட்டுகிறது. மேலும் இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் தான் சனி பகவான் அவதரித்ததாக நம்பப்படுகிறது. அதனால்தான் அன்றைய நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைக்கும் என்பதை நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Purattasi Saturday: புரட்டாசி சனிக்கிழமையில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 25 Sep 2024 19:00 PM

புரட்டாசி சனிக்கிழமை: ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் பெருமாள் மற்றும் அம்பிகைக்கு மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. அதனால் தான் பெருமாள் கோயில்கள் மற்றும் அம்மன் கோயில்கள் களைகட்டுகிறது. மேலும் இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் தான் சனி பகவான் அவதரித்ததாக நம்பப்படுகிறது. அதனால்தான் அன்றைய நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைக்கும் என்பதை நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் பெருமாள் மற்றும் தாயாரின் அருள் கிடைப்பதோடு மட்டுமின்றி குலதெய்வத்தின் அருளும் நமக்கு முழுமையாக கிடைக்கும். இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் நீங்கி செல்வ வளம் பெருகும்.

மேலும் குடும்ப உறவுகளுக்கிடையே இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி செழிக்கும். சனி தோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். இதன்மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவார்கள். மேலும் அஷ்டம சனி, கண்டக சனி, ஏழரை சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர்கள் இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு  விரதம் இருந்து மனமுருக வழிபட்டால் சனியால் ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

Also Read: School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..

புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்னர் பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு பூ, துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், புளி சாதம், தயிர்சாதம், சுண்டல், வடை பாயாசம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து வாழை இலையில் படைத்து வழிபட வேண்டும். மேலும் துளசி தீர்த்தம் கட்டாயம் பெருமாள் வழிபாட்டில் இடம்பெற வேண்டும். முடிந்தவர்கள் மாவிளக்கு போட்டும் வழிபடலாம். மேலும் தூபம் காட்டும் போது கோவிந்தா கோவிந்தா என்ற நாமம் சொல்லி பூஜை செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து காகத்திற்கு உணவு வைத்த பின்னர் தான் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு பேருக்கு வந்து புரட்டாசி சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்ய வேண்டும். முடிந்தவர்கள் பிரபலமான பெருமாள் கோவிலுக்கும், முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கும் சென்று புரட்டாசி சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

பெருமாள் கோவிலுக்கு சென்றாலோ அல்லது ஏதேனும் கோவிலில் பெருமாளை தரிசித்தாலோ நமக்கு புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கையாகும். ஆனால் பெருமாள் கோவிலுக்கு செல்வதற்கு முன் நான் சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக கோவிலுக்கு சென்றால் மூன்று விஷயங்களை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பெருமாள் கோவிலில் வழங்கப்படும் துளசி தீர்த்தம் நம் உடலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளையும் அளிக்க வல்லது. அதனால் கண்டிப்பாக பெருமாள் கோவிலுக்கு சென்றால் துளசி தீர்த்தம் வாங்கி பருக வேண்டும். பெருமாளை வணங்கும்போது அவரது சிலையில் சூடப்பட்டிருக்கும் துளசி மாலை நமக்கு கொடுக்கப்படும். இதனை கண்களில் ஒற்றிக்கொண்டு இரண்டு இலைகளை சாப்பிட வேண்டும். மீதமிருக்கும் துளசியை கோவிலில் விட்டுவிடாமல் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

Also Read: Etteluthu Perumal Temple: குழந்தை வரம் அருளும் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில்!

எக்காரணம் கொண்டும் புரட்டாசி சனிக்கிழமை யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது, நாம் கடன் வாங்கவும் கூடாது. அதே சமயம் தர்மம் செய்யலாம். மேலும் நடப்பு புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமை வருகிறது. இதில் முதலாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. அதே சமயம் இரண்டாவது சனிக்கிழமையுடன் ஏகாதசி வருகிறது. இது பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகுவதோடு திருமண தடை விலகி கிரக தோஷங்களும் அகலும் என்பது நம்பிக்கையாகும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News