புரட்டாசி மாத ராசிபலன்… மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கான பலன்கள்!
Purattasi Month Horoscope: தமிழ் மாதத்தில் ஆவணி மாதம் முடிந்து அடுத்த மாதமான புரட்டாசி தொடங்க இருக்கிறது. இந்த புரட்டாசி மாதம் சாதக ரீதியாக கொடுக்கப்போகும் ராசிபலன் என்னவென்பதை பார்க்கலாம். (மேஷம் முதல் கன்னி வரை) மேலும் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் லாபமும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்: நன்மை செய்யும் கிரகங்களே உங்களுக்கு அதிக சுப பலம் பெற்றுள்ளதால், வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் குறையும். உத்தியோகத்தை பொறுத்தவரை அலுவலகச் சூழ்நிலை அன்றாடப் பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். அரசாங்க பணியாளர்கள் அதிக நன்மைகள் பெறுவார்கள். வெளிநாடு சென்று பணியாற்ற ஆர்வமிருந்தால் இந்த மாதம் முயற்சிக்கலாம். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அவை உங்கள் லாபத்தை பாதிக்காது. புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இந்த புரட்டாசி. மாணவர்களை பொறுத்தவரை இந்த மாதத்தில் பாடங்களை மனனம் செய்வதில் மிகக் கடினமாக இருக்கும். புத்தகத்தை கையில் எடுத்தால் உறக்கமும் சோம்பலும் மேலிடும்.
பிற மாணவர்களுடன் நெருங்கி பழகாமல் இருப்பது அவசியம். குடும்ப பொறுப்பில் உள்ள பெண்மணிகளுக்கு பிரச்சனை இல்லாத மாதமாகும். திருமண வயதுள்ள கன்னியருக்கு நல்ல வரம் அமையும். பழைய கடன்கள் இருப்பின் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற மாதமாகும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தை விட செலவுகளை அதிகமாக இருக்கும். கையில் இருப்பதைக் கொண்டு சமாளிப்பது கடினமாக இருக்கும். திட்டமிட்டு செலவு செய்தலும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கும். தவறான வரனை நிச்சயத்துவிடும் சாத்தியக்கூறு உள்ளதால் திருமண முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. எவருடனும் வாக்குவாதம் செய்வதையும் கோபமாக பேசுவதையும் தவிர்ப்பது அவசியம். உத்தியோகத்தைப் பொறுத்தவரை சக்திக்கு மீறிய பொறுப்புகளும் பணிச்சுமைகளும் வெறுப்பை ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சிப்பதற்கு கிரக நிலைகள் உதவிகரமாக இல்லை. வெளிநாடுகளில் பணியாற்றி வரும் ரிஷப ராசியினர் தங்கள் பணிகளில் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மேல கூட்டாளிகளினால் பிரச்சனைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் தேவையற்ற கவலைகள் மனத்தை அரிப்பதுடன் பாடங்களில் மனம் ஈடுபடுவதையும் பாதிக்கும். உங்கள் நற்பெயருக்கு கழகம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சக மாணவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்களுக்கு பல குடும்பப் பிரச்சினைகள் கவலையை அளிக்கும். திருமணத்திற்கு காத்துள்ள கன்னியருக்கு வரம் அமைவதில் தடங்கல் ஏற்படும். செயல்கள் அனைத்திலும் பொறுமை, நிதானம் அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி போடவும். சிக்கனமாக செலவு செய்யவும்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு தேவையான அளவிற்கு வருமானம் இருப்பினும் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்களில் எதிர்பாராத செலவு ஒன்றை நீங்கள் சமாளிக்க வேண்டி வரும். அது சுபச் செலவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிணிகள் உடலை வருத்தும். குறிப்பாக சருமம் சம்பந்தமான உபாதைகள் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் பாதிக்கப்பட்டு அடிக்கடி வாக்குவாதமும் கருத்து வேற்றுமையும் ஏற்படும். உத்தியோகத்தை பொறுத்தவரை பணிச்சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதிக ககவனத்துடன் வேலை பார்த்தும், பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். நிதி நிறுவனங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் குறையும்.
மாணவர்களுக்கு முதல் மூன்று மாதத்தில் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அதன் பிறகு பின்னடைவைச் சந்திக்க நேரிடும். தினமும் சிறிது நேரம் இறை தியானத்தில் மனதை செலுத்துவது நல்லது. பெண்களை பொறுத்தவரை உடலில் அசதியும், சோர்வும், ,மாதவிடாய் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உறக்கம் மேலிடும். சிலருக்கு மருத்துவ சிகிச்சை அவசியமாகும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும். இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். கை பணத்தை எண்ணி , எண்ணி செலவளியுங்கள்.
கடகம்: இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். முயற்சிகள் அனைத்திலும் பலனளிக்கும். கீழே விழுந்து அடிபடுவதற்கு சாத்திய கூறு இருப்பதால், பெரியவர்கள் குளியல் அறையில் அறையில் வழுக்கி விழுந்திடாமல் பாதுகாப்பாக காலடி வைத்து நடப்பது நல்லது. தரக்குறைவான உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தை பொறுத்தவரையில் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்தரங்கமான அலுவலக விஷயங்களை சக ஊழியரிடம் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தை பொருத்தவரை நிதி நிறுவனங்களின் ஆதரவு குறைவதால் பல தருணங்களில் பண நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
திருமணத்திற்கு காத்துள்ள பெண்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வரன் அமையும். இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களின் போது அலுவலக ஆவணங்களையும் விலை உயர்ந்த பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Also Read: Weekly Horoscope: திருமணம் கைக்கூடும் ராசிக்காரர்கள்… யாருக்கு அதிக லாபம்? இந்த வார ராசிபலன்
சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்பட வாய்ப்பில்லை. வரவும் செலவும் சமமாகவே இருக்கும். சேமிப்பிற்குச் சாத்தியமில்லை. உடல் நலனில் கவனம் வேண்டும். மனைவியின் ஆரோக்கியமும் கவலையை அளிக்கும். கணவர் மனைவியரிடையே அந்நியோன்யம் பாதிக்கப்படும். இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உத்தியோகத்தை பொருத்தவரை வேலையில் கவனம் குறையும். அதன் விளைவாக உங்கள் கடமைகளில் தவறுகள் ஏற்படும். பலருக்கு நிர்வாகத்தினரின் மெமோ கொடுக்கப்படும். புதிய வேலைக்கு முயற்சித்து வருபவர்களுக்கு வெற்றி கிடைப்பது சற்று கடினமே. வியாபாரத்தைப் பொறுத்தவரை நிதி நிறுவனங்களின் ஆதரவு துணை நிற்கும். புதிய முயற்சிகளில் அளவோடு முதலீடு செய்யலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மனப்பாடங்களில் தீவிரமாக ஏற்படும். நன்னடத்தையும், படிப்பில் ஆர்வமும் நிறைந்த மாணவர்களின் நட்பு கிடைக்கும். பெண்களுக்கு பொருத்தவரை குடும்ப சூழ்நிலை மன அமைதியை கொடுக்கும். பராமரிப்பிலும், குடும்ப நிர்வாகத்திலும் பிரச்சனை ஏதும் இருக்காது. திருமணத்திற்கு தயாராகி வரும் பெண்கள் சற்று காத்திருக்க வேண்டியது அவசியம் . இந்த ராசிக்காரர்கள் இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டுவது, உணவு சமைப்பதற்கு கேஸ் அடுப்பு உபயோகிப்பது, தனியே வெளியே செல்வது, தனியாக பயணங்கள் மேற்கொள்வது ஆகியவற்றை தவிர்ப்பது அவசியமாகும்.
கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் போதிய அளவில் இருப்பதால் பணப் பிரச்சனை இருப்பதற்கு வாய்ப்பில்லை. குடும்பத்தில் மனநிறைவு நிலவும். சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி களைக்கட்டும். மனைவியின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். திருமண முயற்சிகளுக்கு மிகவும் உகந்த மாதம் இந்த புரட்டாசி. உத்தியோகத்தை பொருத்தவரை உங்கள் தனித்திறமையை வெளிக் கொண்டு வர ஏற்ற மாதமாகும். உங்கள் உண்மையான உழைப்பிற்கு நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும், அங்கீகாரமும் கிடைக்கும். மனம் நிறைந்த நிறுவனத்தில் மிக நல்ல வேலை கிடைக்கும்.
உங்கள் வியாபாரத்தில் உற்பத்தியை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம். சில்லறை வியாபாரிகளுக்கு கூட குறைந்த வட்டியில் நிதி உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும். குடும்ப கவலைகள் படிப்பு பாதிக்கும். திருமணத்திற்கு காத்துள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமையும். கன்னி ராசக்காளர்களே, உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட கூடும். அந்த தருணங்களில் அலட்சியமாக இருந்து விடாமல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.