Sabarimala : ஆடி மாத பூஜை.. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு தேதி அறிவிப்பு - Tamil News | Sabarimala Ayyappan Temple aadi month darshan date announced | TV9 Tamil

Sabarimala : ஆடி மாத பூஜை.. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு தேதி அறிவிப்பு

Sabarimala Temple : ஒவ்வொரு தமிழ் மாதத்தின் /மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

Sabarimala : ஆடி மாத பூஜை.. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு தேதி அறிவிப்பு

சபரிமலை

Published: 

05 Jul 2024 16:46 PM

சபரிமலை :  கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் மிகவும் பிரபலம். அந்த கோயிலுக்கு கேரளாவிலிருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகைதருவார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வருடம் முழுவதும் பக்தர்கள் அங்கு செல்வது வழக்கம். அந்த புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடை திறப்பையொட்டி, அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்

Also Read : கஜகேசரி யோகம் : அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 6 ராசிகள்!

16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடை பெறுகிறது

20-ந் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அன்றைய தினம், அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!