Sabarimala: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?

Ayyappan Temple: சபரிமலை என்றாலே காடு மலை தாண்டி ஐயப்பனை நோக்கி செல்லும் ஒரு புனித பயணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை காண பெரிய பாதை மற்றும் சிறிய பாதை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். உடலில் பலம், போதுமான நேரம் போன்றவை இருப்பவர்கள் பெரிய பாதையைத் தேர்வு செய்து பயணப்படுவார்கள்.

Sabarimala: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?

கோப்பு புகைப்படம்

Updated On: 

16 Nov 2024 07:49 AM

சபரிமலை யாத்திரை: கார்த்திகை மாதம் மாலை அணிந்து.. பார்த்த சாரதியின் மைந்தனே.. உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து என கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சபரிமலை சீசன் தான். கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் கோயில் கொண்டுள்ள ஐயப்பனை காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் வருகை தருவார்கள். நிச்சயம் 48 நாட்கள் கிட்டத்தட்ட ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயனை காணும் அந்த ஒரு நொடி விரதம் இருந்த கஷ்டம் எல்லாம் நீங்கி இன்பம் மனதில் மகிழ்ச்சி பொங்க உற்சாகம் பிறக்கும். சபரிமலைக்கு தங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என பல பேர் நினைக்கிறார்கள்.

ஐயப்பனை காணும் புனித பயணம்

மாலை அணியாமல் விரதம் இருந்து எப்போது வேண்டுமானாலும் சபரிமலை சென்று வரலாம். அதே சமயம் முதல்முறையாக மாலை அணியும் பக்தர்கள் தொடர்ச்சியாக மூன்று முறை மாலை அணிந்து சபரிமலை சென்று வர வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும்.சபரிமலை என்றாலே காடு மலை தாண்டி ஐயப்பனை நோக்கி செல்லும் ஒரு புனித பயணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை காண பெரிய பாதை மற்றும் சிறிய பாதை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். உடலில் பலம், போதுமான நேரம் போன்றவை இருப்பவர்கள் பெரிய பாதையைத் தேர்வு செய்து பயணப்படுவார்கள். அது என்ன பெரிய பாதை, சிறிய பாதை என்பது இன்றைய தலைமுறையினருக்கு குழப்பமாக இருக்கலாம் அல்லது பெரிய தெளிவில்லாமல் இருக்கலாம்.

Also Read: Sabarimala: சபரிமலை போகும் பக்தர்களுக்கு சிக்கல்.. இந்த தப்பை பண்ணாதீங்க!

பெரியபாதை

பெருவழிப்பாதை எனப்படும் இந்த பெரிய பாதை கிட்டத்தட்ட 48 மைல் தூரம் கொண்டதாகும். எருமேலி ஆரம்பித்து சபரிமலை வரை உள்ள அந்தப் பாதையை கடக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஐயப்பனும் நம்முடன் வர வேண்டும். இந்தப் பாதை அடர்ந்த வனப் பகுதிகள் நிறைந்தது. ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி என்பதால் நீண்ட காலமாக சபரிமலைக்கு சென்று வரும் பக்தர்களின் விருப்பமாக பெரிய வழிப்பாதை உள்ளது.

சபரிமலை பயணத்தில் நிஜமான திருப்தி கிடைக்க வேண்டும் என்றால் பெரிய பாதையை சிறந்தது என குருசாமி என்று சொல்லப்படும் ஐயப்ப பக்தர்கள் தெரிவிப்பார்கள். எருமேலி செல்லும் பக்தர்கள் அங்கு தர்ம சாஸ்தா ஆலயத்திற்கு முன்பு பேட்டை துள்ளலில் ஈடுபடுவார்கள். பின்னர் வாவரை வணங்கி விட்டு மலை மீது ஏறுவார்கள். அங்கிருந்து தான் பெரிய வழி பாதைக்கான பயணம் தொடங்கும்.

பேரூர் தோடு, காளைகட்டி, அழுதாநதி,அழுதாமலை, கல்லிடம் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் போன்ற இடங்களைக் கடந்தால் பம்பையின் அடிவாரத்தை நாம் அடையலாம். இதில் காளைகட்டியில் வெடி வழிபாடு செய்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். அழுதாநதியில் நீராடி கல் எடுத்து பின்னர் அழுதமலையில் செங்குத்தான பாதையில் ஏறுவார்கள். அழுதாநதியில் எடுக்கப்பட்ட கற்களை கல்லிடம் குன்றில் வீசி வணங்குவார்கள்.

Also Read: Astrology: விருச்சிக ராசியில் புதன்.. 6 ராசிக்கு வாழ்க்கையே அடியோடு மாற வாய்ப்பு!

பின்னர் இஞ்சிப்பாறை கோட்டை மற்றும் அழுதாமலை இறக்கம் கடந்து முக்குளி தாவளத்தில் வீற்றிருக்கும் மாரியம்மனை வழிபட்டு கரிவலந்தோடு தாண்டி கரிமலை ஏற்றம் இறக்கம் கடந்தால் பம்பை நதியை அடையலாம். இங்கு நீராடி பூஜைகள் செய்த பின்னர் தான் மீண்டும் ஐயப்பனை காண்பதற்கான யாத்திரையை தொடங்குவார்கள்.

சிறிய வழி பயணம்

பம்பையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதுதான் சிறிய வழி பயணம். பள்ளிக்கட்டு தொடங்கும் இந்த சிறிய வழி பாதையில் தான் ஆபத்துகள் அதிகம் உள்ளது. நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்களை இந்த பாதைகள் எளிதாக சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்கிறது. கன்னிமூல கணபதியை வணங்கி தொடரும் இந்த பயணத்தில் முதலில் வருவது நீலிமலை ஏற்றம். கருங்கல்படிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த பயணம் மிகவும் சிரமம் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

வயதானவர்கள் நீண்ட நேரம் ஏறும் வகையில் சிரமப்படக்கூடியதாக இருக்கும். இதனால்தான் சிறிய வழி பயணத்தில் சரண கோஷங்கள் அதிகமாக எழுப்பப்படுவது உண்டு. இதன் மூலம் பக்தர்கள் தங்கள் களைப்பை போக்கி ஐயனை காண உற்சாகத்துடன் செல்வார்கள். நீலிமலை தாண்டினால் அப்பாச்சி மேடு பகுதியை அடையலாம். இங்கு விற்கப்படும் மாவால் செய்த உருண்டைகளை வாங்கி பகுதியில் உள்ள மலையின் மீது வீச வேண்டும். இது வன தேவதையை திருப்திப்படுத்த செய்யப்படும் செயல் என கூறப்படுகிறது.

நீதிமலை கடந்தால் வருவது சபரிமலை பீடம். இங்குதான் ஐயப்பனை ஆராதித்த அன்னை சபரி வசித்து வந்தார் என சொல்லப்படுகிறது. அவரது நினைவாகவே இங்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. சபரி பீடம் கடந்ததும் இரண்டு பாதைகள் பிரியும் ஒன்று யானை பாதை, மற்றொன்று சரங்குத்தி பாதை.

சரங்குத்தி பாதையில் நடந்து சரங்குத்தி என்ற இடத்தை அடையலாம். எருமேலியில் பேட்டை துள்ளி கன்னி சாமிகள் தாங்கள் கொண்டு வரும் மரத்தாலான வில், வேல் போன்றவற்றை இங்கு குத்தி வணங்குகிறார்கள். சரங்குத்தி கடந்ததும் வருவது சபரிமலை சாஸ்தாவின் 18 படிகள் தான். இந்த படிகளை கடந்து பரவச நிலையில் ஐயனை காண பக்தர்கள் ஏறும்போது மாலை அணிந்தது முதல் கோயிலுக்கு வந்தது வரை தாங்கள் வழியில் பட்ட துயரங்கள் அனைத்தையும் மறந்து மன நிறைவோடு ஐயப்பனை வணங்குவார்கள்.  ஒரு முறை சென்று வந்தவர்கள் மீண்டும் மீண்டும் சென்று ஐயப்பனை காண வருவது அவரை மகிமை ஆகும்.

உலகின் பாரம்பரியமான சந்தைகள் பற்றி தெரிஞ்சுகோங்க!
சரும வறட்சிக்கு சிகிச்சை அளிக்கும் கற்றாழை ஜெல்..!
மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!