Sabarimala Ayyappan Temple: சபரிமலை அயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் இலவச காப்பீடு.. நடை திறப்பு எப்போது?
சபரிமலை கோயில் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்காது. குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறந்து இருக்கும். அதாவது மாதந்தோறும் பூஜைக்காக 4 நாட்கள் நடை திறக்கப்படும். அதேபோல், விஷு, ஓணம், மண்டல பூஜை, மகர விளக்கு உள்ளிட்ட காலக்கட்டத்தில் கோயில் நடை திறக்கப்படும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கின் போது சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் மேற்கொள்ளப்படும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோயில் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்காது. குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறந்து இருக்கும். அதாவது மாதந்தோறும் பூஜைக்காக 4 நாட்கள் நடை திறக்கப்படும். அதேபோல், விஷு, ஓணம், மண்டல பூஜை, மகர விளக்கு உள்ளிட்ட காலக்கட்டத்தில் கோயில் நடை திறக்கப்படும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கின் போது சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் திருவாங்கூர் தேவசம் போர்டு தரப்பில் மேற்கொள்ளப்படும்.
ரூ.5 லட்சம் காப்பீடு:
கடந்த ஆண்டு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையின் போது நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் சபரிமலையே ஸ்தம்பித்தது. சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. மேலும் ஒரு சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு மகர விளக்கு – மண்டல பூஜையின் போது சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் வி.என். வசவன், “ இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் காப்பீட்டுத் தொகையை கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) மூலம் வழங்க உள்ளது. ஒருவேளை எதிர்பாராத சம்பவங்களால் பக்தர்கள் இறந்தால், உடலை வீட்டிற்கு கொண்டு வர தேவசம்போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும். ரூ.5 லட்சம் நிதியும் வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், வருடாந்திர பயணத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்தி முதலமைச்சர் பிணராயி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதல் தேர்தலை சந்திக்கும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் 5 நாட்கள் தொடர் பிரச்சாரம்..
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
சபரிமலை சீசன் தொடங்க இருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது 13,600 போலீசார், 2,500 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் மற்றும் 1,000 துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வழிநெடுகிலும் போதிய குடிநீர் கூடாரம் மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்காக போதிய மருத்துவ மவசதிகளும் செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கட்டுகடங்காத கூட்டம் வந்த நிலையில், சுமார் 15 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 20 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி.. தண்டவாளத்தில் தூய்மை பணியிம்போது நேர்ந்த சோகம்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல் பூஜைக்காக வரும் நவம்பர் 15 ஆம் தேதி நடை திறக்கப்படும் என திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. அதேபோல் மகர விளக்கு பூஜை ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறும். மண்டல பூஜைக்காக வரும் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 26 ஆம் தேதி நடை சாத்தப்படும். அதேபோல் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்படும் நடை ஜனவரி 20 ஆம் தேதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.