5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!

Sabarimala Ayyappan Temple: கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி பை சுமந்து பெருவழி அல்லது சிறுவழி வழியாக சென்று 18 படிகள் ஏறி ஐயனை காண்கையில் நாம் விரத காலத்தில் பட்ட துன்பங்கள், கவலைகள் என அனைத்து பறந்தோடி போகும். ஐயப்பனின் பாதம் சரணடையும் பட்சத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் செல்லும் என்பது நம்பிக்கையாகும்.

sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Nov 2024 21:15 PM

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடத்தில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தின் 45 நாட்கள் சீசன் காலமாகும். கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி பை சுமந்து பெருவழி அல்லது சிறுவழி வழியாக சென்று 18 படிகள் ஏறி ஐயனை காண்கையில் நாம் விரத காலத்தில் பட்ட துன்பங்கள், கவலைகள் என அனைத்து பறந்தோடி போகும். ஐயப்பனின் பாதம் சரணடையும் பட்சத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் செல்லும் என்பது நம்பிக்கையாகும். 48 நாட்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் என்பது கிடையாது. பக்தர்கள் குறைந்தது 3 நாட்கள் விரதம் கடைபிடிக்க வேண்டும். 5,7,11,21 நாட்கள் கணக்கிட்டு விரதம் இருக்கலாம். அந்த வகையில் மாலை அணிபவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி காணலாம்.

Also Read:  Sabarimala: பெரிய வழி vs சிறிய வழி .. ஐயப்பனை காண எது சிறந்தது?

கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவது தொடங்கி கோயில் சென்று வருவது வரை அனைத்தையும் நல்ல நேரத்தில் தான் செய்ய வேண்டும்.
  • கம்பியால் நன்கு கட்டப்பட்ட ஒரு மாலையே போதும். துணை மாலை வேண்டுபவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
  • சிலரால் மொத்த நாட்களும் மாலை அணிவித்து கொள்ள முடியாத சூழல் உண்டாகலாம். அவர்கள் உண்மையின்படி விரதம் இருந்து கோயில் செல்லும் நாள் கூட மாலை அணிந்து செல்லலாம்.
  • ஒவ்வொரு முறையும் புதிதாக மாலை வாங்கி அணிய வேண்டும் என்பது இல்லை. கடந்த முறை அணிந்திருந்த மாலை உறுதியாக இருந்தால் அதனைப் போட்டுக் கொள்ளலாம். அதேபோல் இருமுடிப்பையையும் பயன்படுத்தலாம்.
  • மாலை அணிவதற்கு முன் வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி ஐயப்பனை வழிபடுவதற்கென பூஜையறையில் தனியிடத்தை ஏற்படுத்த வேண்டும். தினமும் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்.
  • அதேசமயம் வீட்டில் இருக்கும் பெண்களின் மாதவிடாய் காலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாலை அணியலாம். இந்த காலக்கட்டத்தில் சிலர் வெளி இடங்களில் தங்கிக்கொள்வதிலும் தவறில்லை. 3 வேளையும் புது உணவுகள் தான் சமைக்கப்பட வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் மாலை அணிந்த காலக்கட்டத்தில் தலையணை, போர்வை போன்ற தூக்கத்திற்கான பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அதேபோல் சோப்பு, பவுடர் போன்ற அலங்கார பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம்.
  • முடிந்தவரை சந்தனம், குங்குமம் நெற்றியில் இருக்க வேண்டும். அதேபோல் சாமிகளுக்கான உடைகள் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் கழுத்தி துண்டு அணிய வேண்டும். இது நம் எதிரில் வருபவர்கள் சுத்தப்பத்தமாக இல்லை என்றால் விலகிச் செல்ல வழிவகுக்கும்.

Also Read: Sabarimala: சபரிமலை போகும் பக்தர்களுக்கு சிக்கல்.. இந்த தப்பை பண்ணாதீங்க!

  • விரதம் காலம் முழுவதும் இலையில் சாப்பிட்டு இருவேளை குளித்து சாமி வழிபாடு செய்ய வேண்டும். இந்த நேரம் என்பது இல்லை என்பது மாலை அல்லது இரவு வேளையில் குளிக்கலாம். காலையில் கண்டிப்பாக குளித்து விட்டு தான் பொழுதை தொடங்க வேண்டும்.
  • எந்த காலத்திலும் மாலை அணிவித்ததால் ஏற்படும் அசௌகரியங்களை கண்டு சுணங்கி விடக்கூடாது. விரதம் இருப்பது தவத்திற்கு சமம் என்பதால் இறைவன் அருள் கிட்ட சில சோதனைகளை தான் சந்திக்க வேண்டும்.
  • மாலை அணிந்தால் செருப்பு அணியக்கூடாது என சொல்வார்கள். ஆனால் பணி என்று வரும்போது அணிந்துக் கொள்ளலாம். அதேபோல் தொழிலுக்கும், விரதம் இருப்பதற்கும் சம்பந்தமில்லை என்பதால் அதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாம்.
  • முதல் வருடம் சபரிமலை செல்பவர்கள் கண்டிப்பாக கன்னி பூஜை நடத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் 3ஆம் வருடம் செல்பவர்கள் கோயிலில் மணி கட்டி வழிபட வேண்டும்.
  • விரத காலக்கட்டத்தில் மது, புகைப்பிடித்தல், சினிமா போன்ற பிற பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது.
  • வீட்டில் விரதம் இருப்பவர்கள், குடும்பத்தில் யாருக்காவது அம்மை நோய் தாக்கினால் மாலையை கழற்றி விட வேண்டும். அதுபோல் குடும்பத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் பூஜையறை முன்பு மாலையை நீங்களே கழற்றி பாலில் போட்டு விட வேண்டும்.
  • சபரிமலை மாலை அணிந்து சென்று வரும் வரை மற்ற புதிதாக வருபவர்களிடம் அதன் பெருமையைப் பற்றி சொல்ல வேண்டும். எக்காரணம் நீங்கள் பலமுறை சென்று வந்ததை பெருமைப் பேசக்கூடாது.
  • சாமி தரிசனம் செய்த உடனேயே மாலையை கழட்டக்கூடாது. வீட்டிற்கு வந்தவுடன் தான் சாமி வழிபாடு செய்து விட்டு மாலையை கழற்ற வேண்டும்.

Latest News