5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sabarimala: சபரிமலைக்கு முன் பக்தர்கள் செல்ல வேண்டிய சாஸ்தா கோயில்!

கேரளாவைப் பொறுத்தவரை அச்சன்கோவில், குளத்துப்புழா, ஆரியங்காவு, பந்தளம், எருமேலி, சபரிமலை ஆகியவை ஐயப்பனின் அறுபடை வீடுகளாக கருதப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அச்சன்கோவில், குளத்துப்புழா, ஆரியங்காவு, எருமேலி, சபரிமலை ஆகியவை காட்டிலும் முதன்மையாக இருப்பது இந்த கோயில் தான்.

Sabarimala: சபரிமலைக்கு முன் பக்தர்கள் செல்ல வேண்டிய சாஸ்தா கோயில்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 17 Nov 2024 10:10 AM

சொரிமுத்து அய்யனார் கோயில்: சபரிமலை செல்ல வேண்டிய பக்தர்கள் அதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று வணங்க வேண்டும் என வரலாறு சொல்கிறது. காரணம் ஐயப்பன் சபரிமலையில் அமர்வதற்கு முன்பாக இந்த கோயிலில் தான் தர்ம சாஸ்தாவாக காட்சியளித்தார். கேரளாவைப் பொறுத்தவரை அச்சன்கோவில், குளத்துப்புழா, ஆரியங்காவு, பந்தளம், எருமேலி, சபரிமலை ஆகியவை ஐயப்பனின் அறுபடை வீடுகளாக கருதப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அச்சன்கோவில், குளத்துப்புழா, ஆரியங்காவு, எருமேலி, சபரிமலை ஆகியவை காட்டிலும் முதன்மையாக இருப்பது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் கோயில் கொண்டுள்ள சொரிமுத்து அய்யனார் தான்.

Also Read: Sabarimala: சபரிமலை தெரியும்.. ஐயப்பனின் அறுபடை கோயில்கள் பற்றி தெரியுமா?

கோயிலுக்கு செல்வது எப்படி?

இந்த கோயிலுக்கு நாம் பேருந்து, ரயில், தனியார் வாகனங்கள் மூலம் செல்லலாம். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கட்டுப்பாட்டில் இந்த மலைப்பகுதி உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ரயில் மூலமாக செல்ல விரும்புவோர் திருநெல்வேலி அல்லது தென்காசியில் இருந்து பாசஞ்சர் ரயில் மூலம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் நேரடியாக சொரிமுத்து அய்யனார் கோயில், அல்லது பாபநாசம் சென்று செல்லலாம்.

கோயில் உருவான வரலாறு

சொரிமுத்து அய்யனார் பூரண புஷ்கலை தேவியருடன் இக்கோயிலில் காட்சியளிக்கிறார். சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலாக இக்கோயிலை கருதி இங்கு வந்து செல்கின்றனர். பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்த ஐயப்பன், தன் இளம் வயதில் சொரிமுத்தையனார் கோயில் அமைந்துள்ள பகுதிக்கு முதன் முதலில் வீர விளையாட்டுகளை கற்க வந்ததாக சொல்லப்படுகிறது. தன் காரணமாக ஐயப்பனுக்கு இங்கு தான் முதலில் கோயில் இருந்ததாக வரலாறு உள்ளது.

அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில் கோயில் எழுப்பப்பட்டதை தொடர்ந்து இறுதியாக அவர் தவம் மேற்கொள்ள சென்ற இடம் தான் தற்போது சபரிமலை கோயில் ஆக அமைந்ததாக சொல்லப்படுகிறது. சபரிமலையில் குத்து கால் இட்டு ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ஆனால் சொரிமுத்து அய்யனார் கோயிலில் சாஸ்தா இடது காலை மட்டும் குத்து காலிட்டு வலது காலை தொங்கவிட்டபடி சற்று இடப்புறமாக திரும்பி இருப்பார். இவருக்கு எதிராக ஒரே பீடத்தில் நந்தி யானை குதிரை ஆகிய வாகனங்கள் இருப்பதும், இவர் இருக்கும் சன்னதியில் சப்த கன்னியர்கள் இருப்பதும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

Also Read: sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!

இதே போல் கைலாயத்தில் சிவன் பார்வதியை திருமணம் நடைபெற்ற போது பூமி சமப்படுத்த பொதிகை மலைக்கு அகத்திய முனிவரை சிவன் அனுப்பி வைத்தார். அகத்தியர் அந்த மலையில் தங்கி இருந்தபோது லிங்க பூஜை செய்து வழிபட்டார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில் அந்த வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் நின்று பால் சொறிவது தொடர்ந்தது. இது அப்பகுதி மன்னருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த இடத்தில் தோண்டிய போது உள்ளே ஒரு லிங்கம் இருந்ததை கண்டு அம்மன்னர் அப்பகுதியில் கோயில் எழுப்பினார். அந்த இடத்திலேயே தர்ம சாஸ்தாவுக்கு சன்னதி கட்டப்பட்டது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் அய்யனார் என அழைப்பது வழக்கம். ஐயன் என்றால் தலைவன், மரியாதைக்காக ஆர் சேர்த்து சொல்லப்படுகிறது. பக்தர்களுக்கு அருளை சொரிபவர் என்பதால் இவர் சொரிமுத்து அய்யனார் என அழைக்கப்பட்டார்.

மற்ற தெய்வங்கள்

இக்கோயிலில் மகாலிங்கம், கரடி மாடசாமி, பிரம்மரட்சஷி, பேச்சியம்மன், சங்கிலி பூதத்தார்,பட்டவராயர், தூசி மாடன், தளவாய் மாடன், அகத்தியர், மொட்டையர், எண்ணெய் சாஸ்தா, பாதாள கண்டிகை, கும்பாமணி, இருளப்பன், இருளம்மன் ஆகியவை காவல் தெய்வங்களாக திகழ்கிறது. இந்த தெய்வம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமூக மக்களுக்கும் குல தெய்வமாக திகழ்கிறது. ஒருவேளை உங்களுக்கு குல தெய்வம் தெரியவில்லை என்றால் இந்த கோயிலுக்கு வந்து வணங்கலாம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா பூக்குழி நிகழ்வுடன் வெகு விமர்சையாக நடைபெறும்.

Latest News