Sabarimala: வீட்டிலேயே ஐயப்ப பக்தர்கள் கன்னிப்பூஜை எப்படி நடத்தலாம்?
Ayyappan Pooja: கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சபரிமலையில் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் 48 நாட்கள் கோயில் நடை பக்தர்களுக்காக திறந்து இருக்கும். மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து ஐயனை காண வரும் இலட்சக்கணக்கான பக்தர்களை கண்டாலே நம் மனதில் உள்ள பாரமெல்லாம் குறைந்து இலகுவாகிவிடும்.
சபரிமலையில் முதல்முறையாக மாலை அணிந்து போகும் சாமிகள் கன்னிச்சாமிகள் என அழைக்கப்படுகிறார்கள். அப்படியாக செல்பவர்கள் வீட்டில் கன்னிப்பூஜை நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சபரிமலையில் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் 48 நாட்கள் கோயில் நடை பக்தர்களுக்காக திறந்து இருக்கும். மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து ஐயனை காண வரும் இலட்சக்கணக்கான பக்தர்களை கண்டாலே நம் மனதில் உள்ள பாரமெல்லாம் குறைந்து இலகுவாகிவிடும். அப்படியான நிலையில் சபரிமலைக்கு முதல் முறையாக செல்லும் கன்னி சாமிகள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக வீட்டில் கன்னி பூஜை எப்படி நடத்துவது என்பது பற்றி காணலாம்.
Also Read: Sabarimala: சபரிமலை போகிறவர்கள் மறக்காமல் இந்த கோயிலுக்கும் போங்க!
அன்னதான பிரபு ஐயப்பன்
பொதுவாக ஐயப்பனுக்கு அன்னதான பிரபு என்ற பெயர் உண்டு. தன்னை வேண்டும் ஏழை எளியவர்களுக்கு உணவு தொடங்கி அனைத்தையும் எப்படியாவது யார் மூலமாக வழங்கி விடுவான். அப்படிப்பட்ட நிலையில் கன்னிச்சாமிகள் தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு கஷ்டப்படுபவர்களுக்கு உணவு, உடை மற்றும் பண உதவி செய்து குளிரச் செய்யலாம். சபரிமலைக்கு இருமுடி சுமந்து புறப்படுவதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் மண்டல காலத்தில் இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். அதாவது கார்த்திகை முதல் தேதியில் இருந்து மார்கழி பதினொன்றாம் தேதிக்குள் நாம் கன்னி பூஜை ஏதாவது ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டில் உள்ள பெண்களுக்கும் ஏற்றவாறு விவரிசையாக நடத்தலாம்.
வீட்டின் கிழக்குப் பக்கத்தில் சிறியதாக பந்தல் ஒன்றை அமைக்க வேண்டும். அதன் நடுவில் மேசை அல்லது அலங்காரம் மண்டபம் போன்றவை வைக்க வேண்டும். அதில் ஐயப்பன் படம் அல்லது சிலையை வைக்கலாம். மேலும் இருபுறத்திலும் விநாயகர், கருப்பசாமி, மாளிகை புரத்து அம்மன, வாபர் சுவாமி ஆகியவற்றின் படங்களை வைக்க வேண்டும். ஐயப்பன் முன்புறம் குத்து விளக்கு ஏற்றி அது பூஜை முடியும் வரை அணியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் முன்புறம் வாழையிலே விரித்து அவல்,பொரி, பழம் ஆகியவை படைக்க வேண்டும்.
Also Read: Sabarimala: இனி சபரிமலையில் கவலையே இல்ல.. வந்தாச்சு தனி வழி!
கன்னிப்பூஜை நடத்தும் முறை
ஐயப்பனுக்கு இலையின் இடது பக்கத்தில் நெல்லும் அரிசியும் நிரப்பி வைக்க வேண்டும். அதில் கிழக்கு திசையை நோக்கி நன்கு சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் வைக்கவும். இதன் பின்னர் பூஜைக்காக சக மாலை அணிந்திருக்கும் பக்தர்களையும், கன்னிச்சாமிகளையும், அக்கம் பக்கத்தினரையும் அழைக்க வேண்டும். ஐயப்பனின் பக்தி பாடல்கள், சரண கோஷம் உள்ளிட்ட அனைத்தையும் பாடி மனம் மகிழ வேண்டும். பின்னர் பூஜை முடிந்த பின்னர் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் முடிந்தவர்கள் உணவு வழங்கலாம்.
கன்னி பூஜையின் முக்கியமான நோக்கம் அன்னதானம் செய்வது என்பதுதான். அதனால் தகுதிக்கேற்ப செய்தாலும் ஐயப்பன் மனம் குளிரவே செய்வார். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி கன்னி பூஜைகள் செய்யவே கூடாது. குருசாமி சொல்லிவிட்டார், சக பக்தர்கள் இப்படி செய்கிறார்கள் என்றெல்லாம் அதிக மெனக்கடல் இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் கால் கிலோ உதிரிப் பூ, ஐயப்பன் புகைப்படத்திற்கு பூச்சரம், சிறிது வெல்லம், வாழைப்பழம், பத்தி, சூடம் ஆகியவை வாங்கி வைத்துக் கூட நாம் கன்னி பூஜையும் மேற்கொள்ளலாம்.
முதல் முறையாக கன்னிச்சாமிகள் மாலை அணியும்போது சாமி தரிசனம் செய்யும் வரை பல சிக்கல்களை சந்திக்கலாம். மனதை ஒருமுகப்படுத்தி, தூய்மையான சிந்தனைகளை வளர்த்து ஐயனை காணும் நோக்கத்தில் மட்டுமே விரதம் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருப்பவர்களையும், வெளியில் இருப்பவர்களையும் சாமி என அழைத்துப் பழக வேண்டும். அது மட்டுமல்லாமல் இளம் வயதினர் எந்தவித சுகத்திற்கும் இடம் தராமல் இந்த விரத காலத்தில் மிகுந்த பய பக்தியுடன் இருக்க வேண்டும். தினமும் இருவேளை குளித்து ஐயப்பன் புகைப்படம் அல்லது சிலை முன் விளக்கேற்றி வழிபட வேண்டும். கோபம், பொறாமை, முன்பகையை வளர்க்கக்கூடாது. அசைவம், புகைப்பிடித்தல், போதை பொருட்கள் போன்ற அறவே தவிர்க்க வேண்டும். கோயில் சென்று சாமி தரிசனம் செய்த பிறகு வீட்டிற்கு வந்த பிறகு தான் மாலையை கழற்ற வேண்டும்.