5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lord Shani: ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கிறதா? அதிலிருந்து விடுபட இந்த பரிகாரங்கள் மற்றும் பூஜையை செய்யுங்கள்…

Shani Dhosam: சனிதோசத்தால் பலரும் அவதிப்படுவதுண்டு. சனி தோசத்தை நீக்குவதற்கு பரிகாரங்கள் தெரியாமல் பல துன்பங்களை அனுபவித்து வருவார்கள். வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். சனிபகவானால் ஏற்படும் விளைவுகளும் மிகவும் ஆபத்தானவை. சனியின் தாக்கத்தால் யாரேனும் சிரமப்பட்டால் அந்த தோஷத்தை தவிர்க்க சில வழிகள் உண்டு. சில பூஜைகள் மற்றும் தானங்களை பரிகாரமாக செய்தால் சனி தோசத்திலிருந்து விடுபடலாம்.

Lord Shani: ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கிறதா? அதிலிருந்து விடுபட இந்த பரிகாரங்கள் மற்றும் பூஜையை செய்யுங்கள்…
சனி பகவான் (Photo Credit: Pinterest)
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 06 Oct 2024 06:46 AM

சனி தோஷத்திலிருந்து விடுபட பரிகாரங்கள்: நவகிரகங்களில் சனிக்கு தனி இடம் உண்டு. இதனை கரும பிரதாபம் என்று அழைக்கப்படுகிறது. சனீஸ்வரனுடைய கிரகம் மெதுவாக நகர்வதால் ஜாதகத்தில் சனி தோஷமும் விருச்சகத்தில் சனியும் இருப்பவர்கள் வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்நிலையில் சனி தோஷம் நிவர்த்தி செய்ய சனிக்கிழமை அன்று சனீஸ்வரரை வழிபட்டால் மனித வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். இப்படி செய்யும்பொழுது சனீஸ்வரர் அனைவருக்கும் அருள் பொழிகிறார். சனிதோசத்தால் பலரும் அவதிப்படுவதுண்டு. சனி தோசத்தை நீக்குவதற்கு பரிகாரங்கள் தெரியாமல் பல துன்பங்களை அனுபவித்து வருவார்கள். வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும். சனிபகவானால் ஏற்படும் விளைவுகளும் மிகவும் ஆபத்தானவை. சனியின் தாக்கத்தால் யாரேனும் சிரமப்பட்டால் அந்த தோஷத்தை தவிர்க்க சில வழிகள் உண்டு. சில பூஜைகள் மற்றும் தானங்களை பரிகாரமாக செய்தால் சனி தோசத்திலிருந்து விடுபடலாம்.

சனி தோஷம் என்றால் என்ன?:

சனி மெதுவாக கடக்கும் கிரகம். எனவே சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருடங்கள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சனி சந்திரனில் இருந்து நான்காம் ராசிக்கு சஞ்சரிப்பது அர்த்தாஷ்டம சனி எனப்படும். அர்த்தாஷ்டம சனி இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும். இந்த நேரத்தில் சனியின் தாக்கம் மக்கள் மீது தெரிய ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும். நிதி மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒருவர் வாழ்க்கையில் அர்த்தாஷ்டம் சனியின் தாக்கம் இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை நல்ல செயல்களை செய்ய முயல வேண்டும்.

சனி தோஷம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:

சனி தோஷத்தைப் போக்க சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம், உர்வருக் மிவ் பந்தனன் மிருத்யோர்முக்ஷிய மா மிருதத்’. இந்த மகா மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் சனி தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரம் மிகவும் நன்மை பயக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பாராயணம் செய்ய வேண்டும்.

Also Read: Navratri: அகண்ட ஜோதி ஏற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்…

தோஷம் நீங்க எளிய பரிகாரம்:

இரவில் தூங்கும் முன்பு, சிறிது கருப்பு எள்ளை எடுத்து தலையணைக்கு கீழ்வைத்து‌ படுக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் தலையனின் கீழ் வைத்த எள்ளை எடுத்து வடித்த சாதத்தில் கலந்து செக்கு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து அதை மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்து காக்கைக்கு போட வேண்டும்.

இப்படியாக தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். ஒன்பதாம் நாள் இரவில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் சனியன் தோஷம் நீங்கும்.

சனிக்கிழமை செய்ய வேண்டிய தானம்:

சனிக்கிழமையில் அன்னதானம் வழங்குவது சனீஸ்வரனின் சிறப்பு ஆசீர்வாதத்தை பெறுகிறது. கருப்பு நிற பொருட்களை தானம் செய்யலாம். அதுமட்டுமின்றி இந்த நாளில் கருப்பட்டி அல்லது கருப்பு எள் தானம் செய்யலாம். இப்படி தானம் செய்வது மூலமாக பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி கடுகு அல்லது எள்ளை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் இரும்பு பொருட்களையும் தானம் செய்யலாம்.

சனிபகவானை எப்படி வணங்க வேண்டும்:

நவகிரகங்களில் சனிபகவான் நீதி தவறாதவர். சனி கொடுத்தாலும் சரி எடுத்தாலும் சரி அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையின் சக்தியை தாங்கிக்கொள்ள முடியாது. சனிக்கிழமை தோறும் நவகிரகம் சுற்றும் பழக்கம் உடையவர்கள் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வணங்கக்கூடாது.

நவகிரக சன்னிதியில் பக்கவாட்டில் நின்று தான் வழிபட வேண்டும். சன்னதிகளில் நேருக்கு நேர் நின்று வழிபடாமல் இரு பக்கவாடுகளில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனி பகவானின் கேடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து முடித்த பிறகு சனிபகவானின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வது மூலமாக சனீஸ்வரன் தாக்கம் குறைந்து நல்லது ஏற்படும் என்பது ஐதீகம்.

Also Read: Saraswathy Pooja: சரஸ்வதி பூஜையின் நோக்கமும் வழிபாட்டு முறையும்..!

Latest News