Margazhi Month: மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடுவதால் கைகூடும் திருமணம்!
திருப்பாவை - திருவெம்பாவை: மார்கழி மாதம் முழுவதும் ஏராளமான ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும். அந்த வகையில் பாவை நோன்பிருந்து பெருமானின் திருவடி சேர்ந்த ஆண்டாள் போலவே கன்னிப்பெண்கள் இந்த மாதத்தில் பாவை நோன்பிருந்து நல்ல கணவன் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை படிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மார்கழி மாதம் இன்று (16-12-2024) பிறந்துள்ளது. இந்த மாதம் ஆன்மீக நிகழ்வுகள் நிறைய நடக்கும் மாதமாகும். இந்த மாதத்தில் பாவை நோன்பு இருந்தால் விரைவில் திருமணம் கைகூடுவதோடு நினைத்த காரியமும் நடைபெறும். இதற்காக அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தப்படுத்தி, கோலமிட்டு விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை படிக்க வேண்டும். இதை செய்வதன் மூலமாக மனதிற்கு நிம்மதியும் ஏற்படும்.கன்னி பெண்களால் நோற்கப்படும் இந்தப் பாவை நோன்பானது மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதிகாலையில் எழுந்து பாசுரம் படிப்பதன் மூலமாக நல்ல கணவன் கிடைக்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாகும். ஆண்டாள் அருளிய முப்பது பாசுரங்கள் மார்கழி மாதங்களில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பாடப்படுகிறது.
கலியுகத்தில் பிறந்த ஆண்டாள் பெருமாளை திருமணம் செய்வதாக சபதமிட்டு பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபட்டு திருமாலின் திருவடியை சேர்ந்தார். இது மார்கழி மாதத்தில் கூடாரவல்லி என்றும் கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் பாடிய திருப்பாவையின் முதல் பாடல் இதன் நோக்கத்தை சொல்கிறது.
Also Read: வைகுண்ட ஏகாதசியின் வரலாறு மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?
திருப்பாவை பாடல் – 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: அழகிய அணிகலனை அணிந்து கொண்டு, செல்வ வளங்களை பெற்றிருக்கும் ஆயர்பாடி அழகிய கன்னிப் பெண்களே அதிகாலையில் அதிகாலையில் நாம் நீராட செல்லலாம். நமக்கு பாதுகாப்பாக கூர்மையான வேலுடன் நந்தகோன், யசோதா ஆகியோரின் மகன் வருகிறான். அவன் கார்மேகத்தைப் போன்ற மேனி, தாமரை போன்ற சிறந்த கண்கள், சூரியனைப் போல பிரகாசமான முகம், குளிர்ச்சி தரும் சந்திரனைப் போல் கருணை கொண்டவனாக இருக்கிறான்.
நமக்காக நாராயணனே கண்ணனாக பிறந்து எனவே அவனை நாம் புகழ்ந்து பாடினால் இந்த உலகம் நம்மை வாழ்த்தும் என ஆண்டாள் கன்னி பெண்களைப் பார்த்து பாடுகிறாள். வைகுண்டத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்த பாசுரத்தை ஆண்டாள் பாடுகிறாள்.
திருவெம்பாவை பாடல் – 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.
பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களை கொண்டவளே! சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லா ஜோதி வடிவத்தை புகழ்ந்து நாங்கள் பாடி கொண்டிருப்பது உன் செவிகளுக்கு கேட்காமல் இப்படியா தூங்குவது? அந்த மகா தேவனின் சிலம்பனிந்த திருவடிகளை புகழ்ந்த பாடி கொண்டிருக்கிறோம். அந்தப் பாடலைக் கேட்டு ஒரு பெண் விம்மி அழுது மகிழ்ச்சியில் தரையில் விழுந்து மூர்ச்சை ஆகிவிட்டால். ஆனால் இன்னும் நீ தூக்கத்திலிருந்து எழவில்லை. நாங்கள் பாடுவது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா என பெண்கள் பாடுகிறார்கள்.
Also Read: Margazhi Month: மார்கழி மாதத்தின் முக்கிய மற்றும் விசேஷ தினங்கள்
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் உலா வருகிறார். உலா வரும் சிவபெருமானை தரிசனம் செய்வதற்கு பெண்கள் பக்தியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பயனை தங்களைப் போலவே தங்கள் தோழிகளும் கிடைக்க வேண்டும் என்று அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்புகிறார்கள்.
இந்த பாடல்களை காலையில் மார்கழி மாதம் முழுவதும் பாடுவதால் திருமணமாகாத கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகி நல்ல கணவர் கிடைப்பார் என்றும் நினைத்த காரியங்கள் கைகொடும் என்பதும் நம்பிக்கை