5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திருவண்ணாமலை தீபத்துக்கு போறீங்களா? இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!

Parking Lots Of Thiruvannamalai Pilgrims: திருவண்ணாமலை மகா தீபத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் 116 இடங்களில் சிறப்பு வாகன நிறுத்துமிடங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்வதற்கு அவசர எண்களையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபத்துக்கு போறீங்களா? இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்!
அண்ணாமலையார் திருக்கோயில் (Photo Credit: TV9 English)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 13 Dec 2024 13:44 PM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 1ஆம் தேதி துவங்கி நேற்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு இன்று (13-12-2024) மாலை ஏற்றப்பட இருக்கிறது. போக்குவரத்து நெரிசலை குறைத்து சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக 116 இடங்களில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக வாகன நிற்கும் இடங்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடங்கள்:

வேலூரில் இருந்து போளூர் வழியாக வரும் பக்தர்களுக்கு அண்ணா நுழைவு வாயில் முதல் ஊசாம்பாடி வரை 13 வாகன நிறுத்தங்களும் சேத்துப்பட்டில் இருந்து அவலூர் பேட்டை வழியாக வரும் பக்தர்களுக்கு செரியாந்தல் பகுதியில் 3 வாகன நிறுத்தங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் செஞ்சியில் இருந்து கீழ்பெண்ணாத்தூர் வழியாக வரும் பக்தர்களுக்கு பெரியார் சிலை முதல் சோ காட்டுக்குளம் வரை உள்ளப் பகுதிகளில் 17 வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து வேட்டவலம் வழியாக வரும் பக்தர்களுக்கு திருவள்ளுவர் சிலை முதல் கீரனூர் வரை 9 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கூடுதல் வாகன நிறுத்தம் வசதி செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக வருபவர்களுக்கு திருவள்ளுவர் சிலை முதல் கொளக்குடி கிராமம் வரை 10 வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தியாகதுருகத்தில் இருந்து மணலூர் பேட்டை வழியாக வரும் பக்தர்கள் காமராஜர் சிலை முதல் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை 11 பகுதியில் வாகன நிறுத்தும் இடங்களும், தானிப்பாடியில் இருந்து தண்டராம்பட்டு வழியாக வருவோர் தாமரை நகர் முதல் மெய்யூர் வரை ஐந்து இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

Also Read: Tiruvannamalai: அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம் .. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்!

மேலும் ஊத்தங்கரையில் இருந்து செங்கம் வழியாக வரும் பக்தர்களுக்கு மேற்கு காவல் நிலையம் முதல் ஒட்டகுடிசல் வரை பத்து இடங்களிலும் புதுப்பாளையத்தில் இருந்து காஞ்சி வழியாக வரும் பக்தர்களுக்கு ஆடையூரில் இருந்து புனல்காடு வரை இரண்டு இடங்களிலும் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வெளிவட்ட சாலை (ரிங் ரோடு), வேலூர் சாலை, தீபம் நகர் முதல் செங்கம் சாலை, அய்யம்பாளையம் ஆகிய இடங்களில் கூடுதலாக 27 இடங்களில் வாகன நிறுத்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் மத்திய பேருந்து நிலையம் அருகே ஒன்பது வாகன நிறுத்தும் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  1. வழி – வாகன நிறுத்தமிடங்களின் எண்ணிக்கை – இருப்பிட விவரங்கள்
  2. வேலூர் (போளூர் வழியாக) – 13 -அண்ணா நுழைவாயில் முதல் ஊசாம்பாடி வரை
  3. சேத்துப்பட்டு (அவலூர் பேட்டை வழியாக) – 3 – செரியாந்தல் பகுதி
  4. செஞ்சி (கீழ்பெண்ணாத்தூர் வழியாக) – 17 – பெரியார் சிலை முதல் சோ காட்டுக்குளம் வரை
  5. விழுப்புரம் (வேட்டவலம் வழியாக) – 9 – திருவள்ளுவர் சிலை முதல் கீரனூர் வரை
  6. உளுந்தூர்பேட்டை (திருக்கோவிலூர் வழியாக) – 10 – திருவள்ளுவர் சிலை முதல் கொளக்குடி கிராமம் வரை
  7. தியாகதுருகம் (மணலூர்பேட்டை வழியாக) – 11 – காமராஜர் சிலை முதல் சண்முகா தொழில்சாலை கலை கல்லூரி வரை
  8. தானிப்பாடி (தண்டராம்பட்டு வழியாக) – 5 – தாமரை நகர் முதல் மெய்யூர் வரை
  9. ஊத்தங்கரை (செங்கம் வழியாக) – 10 – மேற்கு காவல் நிலையம் முதல் ஒத்தகுடிசல் வரை
  10. புதுப்பாளையம் (காஞ்சி வழியாக) – 2 – ஆடையூர் முதல் புனல் காடு வரை
  11. வெளி ரிங் ரோடு முதல் பிற பகுதிகள் – 27 – திருவண்ணாமலை வெளியில ரிங் ரோடு, வேலூர் சாலை, தீபம் நகர், செங்கம் சாலை மற்றும் அய்யம்பாளையம்
  12. கோயில் மற்றும் பேருந்து நிலையம் அருகில் – 9 -அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் மத்திய பேருந்து நிலையம்

காவல் உதவி மையங்கள்:

பக்தர்களுக்கு உதவி வழங்குவதற்காக காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் அவசர தேவைகளுக்கு நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தை 01475- 222303 என்ற எண்ணிலும், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை 94981-00431 என்று எண்ணிலும், காவல் கட்டுப்பாடு அறை 91596-16263 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Also Read: Local Holiday: தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

டிசம்பர் 12 முதல் 15 வரை நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எம்.சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் 93636-22330 என்ற வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தி பக்தர்கள் கூகுள் மேப்ஸ் இணைப்பை பெறலாம் .

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் வழிபடுவதற்கு பக்தர்கள் பொறுப்புடன் வாகனங்களை நிறுத்தவும் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது ‌

Latest News