Gaya Temple: அகால மரணமடைந்தவர்கள் முக்தியடைய வேண்டுமா? – இந்த கோயில் போங்க!
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கயா நகரின் முன்னோர்கள் இயற்கைக்கான மாறான முறையில் மரணித்தால் அவர்களுக்கு பிண்டம் வழங்குவதற்கான மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இங்கு பிண்டம் வைத்து வழிபாடு செய்வதால் உயிரிழந்தவர்கள் மன அமைதி பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. சாஸ்திரத்தின் படி, கயாவில் உள்ள மக்கள் முக்தி பெறுவதற்காக ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, பதினைந்து அல்லது பதினேழு நாட்கள் தங்கள் முன்னோர்களை வழிபடுகிறார்கள்.
முன்னோர் வழிபாடு என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது. எப்படி குல தெய்வ வழிபாடு நம்முடைய குடும்பத்தை காவல் காக்கிறதாக நம்பப்படுகிறதோ, அதேபோல் முன்னோர் வழிபாடு என்பது நம்முடைய தலைமுறையை காக்கும் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மதத்திலும் முன்னோர் வழிபாடு என்பது பல்வேறு விதமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் பொது வழிபாடாக விரதம் இருக்கும் நிகழ்வு உள்ளது. இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. அப்படி மாதம்தோறும் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையில் கண்டிப்பாக முன்னோர்களுக்கு திதியும், தர்ப்பணமும், வழிபாடும் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
நம்முடைய வீட்டில் மரணித்தவர்கள் சிலர் இயற்கையாகவும், சிலர் இயற்கைக்கு மாறாகவும் உயிரிழந்து இருப்பார்கள். இதில் இயற்கைக்கு மாறான விபத்து, தற்கொலை, கொலை போன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் ஆன்மா பூமியில் அவர்களின் நிறைவேறா ஆசைக்காக அலைந்து திரிவதாக இன்றளவும் பலராலும் நம்பப்படுகிறது. என்னதான் அவர்களை வழிபட செய்தாலும் ஆன்மா மன அமைதி பெற நாம் சில விஷயங்களை கண்டிப்பாக செய்தாக வேண்டும். அதில் ஒன்று தான் பீகாரில் அமைந்துள்ள கோயிலுக்கு சென்று வழிபடுவது.
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கயா நகரின் முன்னோர்கள் இயற்கைக்கான மாறான முறையில் மரணித்தால் அவர்களுக்கு பிண்டம் வழங்குவதற்கான மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இங்கு பிண்டம் வைத்து வழிபாடு செய்வதால் உயிரிழந்தவர்கள் மன அமைதி பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. சாஸ்திரத்தின் படி, கயாவில் உள்ள மக்கள் முக்தி பெறுவதற்காக ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, பதினைந்து அல்லது பதினேழு நாட்கள் தங்கள் முன்னோர்களை வழிபடுகிறார்கள். குறிப்பாக கயாவில் அகால மரணமடைந்தவர்களுக்கு இந்த வழிபாடு செய்யப்படுகிறது. பித்ரு பக்ஷத்துடன் தொடர்புடைய மற்றொரு பாரம்பரியம் உள்ளது. இதில் முன்னோர்களின் ஆன்மாக்கள் பிண்டம் வழங்கி வழிபடுவதன் மூலம் மோட்சத்தை அடைவதாக நம்பப்படுகிறது.
இந்த கோயில் எங்குள்ளது?
பீகாரில் உள்ள கயா நகரிலிருந்து 10 கிமீ தொலைவில் பிரேத ஷிலா என்ற மலை உள்ளது. இது கயா தாமின் வடமேற்கு திசையில் உள்ளது. இம்மலையின் உச்சியில் பிரேதஷிலா என்ற பலிபீடம் உள்ளது. ஆனால் முழு மலைப்பகுதியும் பிரேதஷிலா என்று தான் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உயரம் சுமார் 975 அடி ஆகும். முடிந்தவர்கள் சுமார் 400 படிக்கட்டுகள் கொண்ட பாதையில் ஏறி பலிபீடம் செல்கிறார்கள். எக்காரணத்திற்காகவும் அகால மரணம் அடைந்தவர்கள் இந்த தலங்களில் பிண்டம் கொடுப்பதால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.
Also Read: பிரதமர் பாராட்டிய மதுரை பெண்.. மூலிகைத்தோட்டம் மூலம் பிரபலம்.. யார் இந்த சுபஸ்ரீ?
அர்ச்சனை செய்வதால் முக்தி நிச்சயம்
பிரேத ஷிலா மலையில் பிண்ட தானத்திற்கு விசேஷ முக்கியத்துவம் உண்டு. இந்த மலையின் மேல் ஒரு கல் உள்ளது. அதன் மீது பிரம்மா, விஷ்ணு, மகேஷ் சிலைகள் உள்ளன. பக்தர்கள் இந்த மலையின் உச்சியில் இந்த பாறையை சுற்றி வந்து அதன் மீது வழிபாடு நடத்துகிறார்கள். இங்கு ஒரு உயரமான சிகரத்தில் பலிபீடம் உள்ளது. அதாவது ஒரு கல், அதிலிருக்கும் விரிசல் ஆகியவை முன்னோர்கள் சொர்க்கத்திற்கு செல்லும் வழியை திறக்கும் என்று நம்பப்படுகிறது.
தந்தைக்கு சடங்குகளை செய்த ராமபிரான்
புராணங்களின்படி, லக்ஷ்மணன் மற்றும் சீதை தேவியுடன் ராமர் இந்த மலைக்கு வந்தார். அதன் பிறகு பிரேத ஷீலாவில் உள்ள பிரம்மகுண்ட நீர் நிலையில் நீராடினார். அதன் பிறகு தன் தந்தை தசரதரின் சடங்குகளைச் செய்தார். பிரம்மாவின் கட்டை விரலால் வரையப்பட்ட இரண்டு கோடுகள் இன்றும் மலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இங்கு வரும் பக்தர்கள் பலர் தங்களுக்கு தாங்களே தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. தங்களுடைய மரணத்திற்கு பிறகு குடும்பத்தினர் யாரும் சரியாக வழிபடாமல் இருக்கக்கூடாது என்பதால் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)