Astrology: தினமும் இதை வீட்டில் செய்தால் மகிழ்ச்சி பொங்கும்.. ட்ரை பண்ணி பாருங்க! - Tamil News | Spiritual 5 important activities on daily basis in home for get blessings from god | TV9 Tamil

Astrology: தினமும் இதை வீட்டில் செய்தால் மகிழ்ச்சி பொங்கும்.. ட்ரை பண்ணி பாருங்க!

Published: 

27 Aug 2024 22:15 PM

வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஜோதிடத்தின் கிரகப்பலன்கள் காரணமாக அமைகிறது. அதேசமயம் நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் செயல்களும் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. தினமும் காலையில் நாம் வீட்டில் சில செயல்களைச் செய்தால் அதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் அதிகாலையில் எழுந்தவுடன் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது சிறப்பாகும். அப்படி முடியாதவர்கள் குறைந்தது காலை 6 மணிக்குள்ளாவது விளக்கேற்ற வேண்டும்.

Astrology: தினமும் இதை வீட்டில் செய்தால் மகிழ்ச்சி பொங்கும்.. ட்ரை பண்ணி பாருங்க!

கோப்பு புகைப்படம்

Follow Us On

ஜோதிடம்: வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஜோதிடத்தின் கிரகப்பலன்கள் காரணமாக அமைகிறது. அதேசமயம் நம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் செயல்களும் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. தினமும் காலையில் நாம் வீட்டில் சில செயல்களைச் செய்தால் அதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் நாம் காலையில் எழுவது முதல் கடவுள் வழிபாடு செய்வது வரை என்னென்ன எப்படி எப்படி செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

1. காலையில் எழுவது

அதிகாலையில் எழுந்தவுடன் விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது சிறப்பாகும். அப்படி முடியாதவர்கள் குறைந்தது காலை 6 மணிக்குள்ளாவது விளக்கேற்ற வேண்டும். கண்டிப்பாக இந்த விஷயத்தை எல்லாரும் செய்ய வேண்டும். பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.30 மணிக்கு விளக்கேற்றினால் நாம் என்ன வேண்டினாலும் அவை அனைத்தும் நடக்கும். சூரிய உதயத்துக்கு முன்னாடி விளக்கேற்றவில்லை என்றாம் நாம் என்ன செய்தாலும் வளர்ச்சி இருக்காது. அதேபோல் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும். வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் வீட்டில் தெய்வீக ஆற்றல் நிறைந்திருக்கும்.

2. கோலம் போடுவது

கண்டிப்பாக காலையில் வீட்டு வாசலில் கோலம் போட வேண்டும். பசும் சாணம் தெளித்து பச்சரிசி மாவில் கோலம் போடலாம். பசு சாணம் கிடைக்காதவர்கள் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் போட்டுக் கொள்ளலாம். வாசலில் கோலம் போட முடியாதவர்கள் குறைந்தப்பட்சம் பூஜையறையிலாவது கோலம் போட வேண்டும்.

3. தூபம் போடுவது

இதனைத் தொடர்ந்து வீட்டு பூஜையறையில் பக்தி மணம் கமழும் அளவுக்கு சாம்பிராணி புகை போட வேண்டும். இதனால் நிறைய பலன்கள் கிடைக்கும். எந்த வகையான சாம்பிராணி வேண்டுமானாலும் போடலாம். அது அலர்ஜியாக இருப்பதாக இருந்தால் தசாங்கம் என்ற பொருள் பூஜை பொருட்கள் கடையில் கிடைக்கும் அதை பயன்படுத்தலாம். காலையில் தீபம், தூபம் கண்டிப்பாக போட வேண்டும்.

4. பதிகம் பாடுவது

காலையில் புனித நீராடி விளக்கேற்றி, தூபம் போடுவது மட்டுமல்லாமல் கடவுள் புகைப்படம் முன்பு உட்கார்ந்து மனதார நினைத்து கடவுள் பதிகம், பக்தி பாடல் பாட வேண்டும். இந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டி வழிபடலாம். நேரம் இருந்தால் மிகப்பெரிய அளவில் அதற்காக ஒதுக்கி வேண்டலாம்.

5.நைவேத்தியம் வழிபாடு

கடவுள் வழிபாட்டில் நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். எளிமையான கல்கண்டு தொடங்கி என்னென்ன உணவுப் பொருட்கள் வைக்க முடியுமோ அதனை வைக்கலாம். அதை நீங்கள் சாப்பிடலாம் அல்லது அருகிலுள்ள எறும்பு புற்றுக்கு வைக்கலாம். தொடர்ந்து நம்முடைய வீடு வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்றால் இதனைப் பின்பற்றலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version