5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Temple Special: மாங்கல்யம் காக்கும் மகா காளியம்மன்.. குவியும் பக்தர்கள்!

Maha Kaaliamman: சக்தியின் அவதாரங்களில் ஆக்ரோஷமான அவதாரம் காளியம்மன். சிதம்பரத்திற்கு நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்கள் எல்லை தெய்வங்களாக இருந்தாலும் பெருமளவில் மக்களால் கொண்டாடப்படுவது தில்லை எல்லை மகா காளியம்மன் ஆலயம் தான். மாங்கல்யத்தை காக்கும் மகாகாளி குடியிருக்கும் சிதம்பரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Temple Special: மாங்கல்யம் காக்கும் மகா காளியம்மன்.. குவியும் பக்தர்கள்!
மகா காளியம்மன் (Photo Credit: Tumblr)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 08 Oct 2024 10:30 AM

சக்தி வாய்ந்த மகா காளியம்மன்: அம்மன் அவதாரங்களில் மிகவும் ஆக்ரோஷமான அவதாரம் காளியம்மன். அம்மன் பொதுவாக சாந்தமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கக் கூடியவளாக இருப்பாள். ஆனால் காளி உக்கிரமாக காட்சியளிப்பாள். எனினும் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்க்க கூடியவளாக இருக்கிறாள். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள மகா காளியம்மனின் மகிமைகளை தெரிந்து கொள்வோம்.

தல வரலாறு:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் பகுதியை குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது குறுநில மன்னர்களுக்கும் ஜமீன் பரம்பனையினருக்கும் குதிரை சவாரி போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்காகவும் குறுநில மன்னர்களின் குதிரைகள் வேகமாக செல்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையிலும் பூமிக்கு அடியில் சில மந்திர தகடுகளை சிலர் புதைத்து வைத்தனர். இதனால் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகளும் இடையூறுகளும் ஏற்பட்டு வந்தன.

ஒரு நாள் அம்பாளின் அருள் பெற்ற பக்தர் ஒருவரின் கனவில் மகா காளியம்மன் தோன்றி, “விபத்து நடைபெறும் இடத்தில் எனக்கு ஒரு கோயில் கட்டுங்கள” என்று கூறியிருக்கிறாள். அதனைத் தொடர்ந்து அதன்படி அந்த இடத்தில் சிறிய அளவில் கோவில் அமைத்து தில்லை இல்லை மகாகாளியம்மன் என்று பேரிட்டு ஊர் மக்கள் அனைவரும் வணங்கத் தொடங்கினர். இதை எடுத்து அந்தப் பகுதியில் விபத்துகள் நடைபெறுவது முற்றிலுமாக நின்று போனது. இது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

கோவிலின் அமைப்பு:

பின்னர் இந்தக் கோவில் புனரமைக்கப்பட்டு தில்லை எல்லை மகாகாளியம்மன் உருவத்தை 53 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைத்தனர். இந்தக் கோயிலின் முன்னால் நின்று பார்த்தால் 53 அடி உயர தில்லை எல்லை காளியின் சிலை கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்குள் சென்றாள் உள்ளே திரிசூலம், பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவையும் வலது பக்கம் 5 தலை நாகம் அதில் அம்மன் ரூபம், நாகர் சிலைகள் உள்ளன. அதன் அருகில் சிரசு காளி, நவகிரகம், முருகன் சன்னதிகளும் உள்ளன. இடப்பக்கம் வனதுர்க்கை, நவகாளி ஆகிய சிற்பங்கள் வரிசையாக கோயிலை அலங்கரிக்கின்றன.

கருவறையில் தில்லை இல்லை மகாகாளியம்மன் 8 திருக்கரங்களோடு தெற்கு திசை நோக்கி சார்ந்து சொரூபமாக புன்னகைத்தவளாக காட்சி தருகிறாள். அன்னையின் மேற்குப் பகுதியில் சிரசு வடிவில் உக்கிர தோற்றத்துடன் சிற்பமாக இருக்கிறாள்.

Also Read: Tirupathi: திருப்பதியும் ’ஏழு’ எண்ணிக்கையும்.. பெருமையான 7 விஷயங்கள்.. என்னென்ன தெரியுமா?

கோயில் விசேஷங்கள்:

இந்த ஆலயத்தில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டி மறுநாள் சனிக்கிழமை அன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நவகாளிகளின் நடன நிகழ்வு நடைபெறும். அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று சக்தி கரகம் எடுத்து வந்து அம்பாளுக்கு அழகு சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. மாலை செடல் உற்சவம், பால்குடம் மற்றும் பூங்கரகம் எடுத்து வரும் வைபவமும் நடைபெறும். பால் குடம் எடுத்து வரும் பக்தர்கள் தாங்களே தாங்கள் கொண்டு வந்த பாலை கர்ப்ப கிரகத்துக்குள் இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய அன்று ஒரு நாள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

மாதம் தோறும் அமாவாசை அன்று மகா யாகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு 30 க்கு ராகு கால நேரத்தில் நடைபெறும் ராகு கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

Also Read: Navratri: அகண்ட ஜோதி ஏற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள்…

மகா காளியம்மன் வழிபாடு:

உடல்நிலை சரியில்லாத கணவருக்கு நோய் தீர வேண்டி இங்கு வந்து பெண்கள் வழிபடுகின்றனர். அப்படி கணவர் உடல்நிலை சரியானதும் தம்பதியர்களாக இந்த ஆலயத்திற்கு வந்து பொன் தாலி காணிக்கை செலுத்தும் வழக்கம் இருக்கிறது. நாகதோஷத்தால் வரும் இடையூறுகளை அகற்ற இங்குள்ள நாகராஜர் சிலைக்கு மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை. இந்த சாலையில் பயணிப்போர் வாகனங்களை நிறுத்தி அன்னையை வழிபட்ட பிறகு பயணத்தை தொடர்கின்றனர். இதனால் பயணம் பாதுகாப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

வழிபாட்டு நேரம்:

இந்த ஆலயம் தினமும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 7:00 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை நாலு மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் சாலையில், சிதம்பரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், லால்புரம் தில்லை எல்லை மகா காளியம்மன் கோயில் அமைந்திருக்கிறது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News