5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Spiritual: கடவுள் வழிபாட்டின்போது கொட்டாவி வருவது கெட்ட சகுனமா?

நமக்கு பிடிக்காத ஒரு இடத்தில் இருக்கும்போதும் கொட்டாவி வரும். பிடிக்காத இடம், பிடிக்காத உறவினர், நண்பர்கள், வேலை செய்யும் இடம் என அனைத்து நேரங்களிலும் கொட்டாவி வரும். ஆனால் என்னதான் போதிய தூக்கம், ஓய்வு என எடுத்துக் கொண்டாலும், ஈடுபாட்டுடன் வேலையில் ஈடுபட்டாலும் கடவுள் வழிபாட்டில் கொட்டாவி வருவதற்கு காரணம் சொல்லப்படுகிறது.

Spiritual: கடவுள் வழிபாட்டின்போது கொட்டாவி வருவது கெட்ட சகுனமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 05 Oct 2024 22:01 PM

வீட்டிலோ, கோயிலிலோ நாம் கடவுள் வழிபாட்டில் ஈடுபடும்போது நம்முடைய மனம் சில நேரங்களில் அலைபாய்வதை உணர்ந்திருப்போம். கோயிலுக்கு வந்துவிட்டு இப்படியெல்லாம் நடக்கிறதே என குற்ற உணர்வில் நினைப்போம். சிலருக்கு சாமி கும்பிடும்போது கொட்டாவி வரும். அப்போது குடும்ப உறுப்பினர்களிடத்தில் திட்டு வாங்குவோம். இது ஒருநாள் பிரச்னையாக இருந்தால் பரவாயில்லை. தொடர்ச்சியாக இந்த மாதிரி எதிர்மறையான சம்பவங்கள் நடப்பது ஏதேனும் விஷயங்களுக்கான அறிகுறியா அல்லது இதனை எப்படி தடுப்பது என தெரியவில்லை என ஆன்மிக அன்பர்கள் குழம்பி போயிருப்பார்கள். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.பொதுவாக கொட்டாவி வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நல்ல உறக்கம், உடல் அசதி போன்றவை காரணமாக இருக்கலாம்.

Also Read: Gold Price October 05 2024: வார இறுதி நாள்.. மாற்றம் கண்டதா தங்கம் விலை? இன்றைய நிலவரம் என்ன?

அதேபோல் நமக்கு பிடிக்காத ஒரு இடத்தில் இருக்கும்போதும் கொட்டாவி வரும். பிடிக்காத இடம், பிடிக்காத உறவினர், நண்பர்கள், வேலை செய்யும் இடம் என அனைத்து நேரங்களிலும் கொட்டாவி வரும். ஆனால் என்னதான் போதிய தூக்கம், ஓய்வு என எடுத்துக் கொண்டாலும், ஈடுபாட்டுடன் வேலையில் ஈடுபட்டாலும் கடவுள் வழிபாட்டில் கொட்டாவி வருவதற்கு காரணம் சொல்லப்படுகிறது.

கடவுளை வழிபடும்போது சிலர் மந்திரங்கள், பக்தி பாடல்கள், வேண்டுதல் என ஏதாவது ஒன்றை யாருக்கும் தெரியாத வகையில் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு செய்யும்போது நம்முடைய உடல் தசவாயுவால் இயக்குகிறது. அதாவது பிரானன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய 9 வகையான காற்றுகளால் நம்முடைய உடலானது நிரம்பியிருக்கிறது. உயிர் தோன்றுவது முதல் சிதையும் வரை இந்த 9 வாயுக்களும் நம் உடலை இயக்கும்.

நாம் கடவுள் வழிபாட்டின்போது மந்திரங்கள் சொல்லும்போது அதற்கு தேவையான காற்றை தச வாயுக்கள் எடுத்துக்கொள்ளும். அதனால் நாம் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து விட்டு கார்பன் – டை- ஆக்ஸைடை வெளியிடுகிறோம். அது மந்திரம் சொல்லும்போது மட்டுமில்லை நம்முடைய உடலானது நெடுநேரம் ஒரே இடத்தில் எந்தவித செயல்பாடும் இல்லாமல் இருக்கும்போது கொட்டாவி வருவது இயல்பான ஒன்று தான். எனவே சாமி வழிபாட்டின்போது கொட்டாவி வந்தால் கவலைப்பட வேண்டாம். நம் உடலை ஆக்டிவாக வைத்துக் கொண்டால் கொட்டாவி வருவதை தடுக்கலாம். இருமல், தும்மல், கொட்டாவி என உடல் அனிச்சையாக செய்யக்கூடிய செயலுக்கும் கடவுள் வழிபாட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. அதனால் தான் உடலுக்கு செயல்பாடுகளை தரக்கூடிய அளவில் கடவுள் வழிபாடு உற்சாகம் மற்றும் கொண்டாட்டம் மிகுந்ததாக இருக்கிறது.

Also Read: உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!

மனம் அலைபாய்வது ஏன்?

கோயிலிலோ, வீட்டிலோ நாம் கடவுளை வணங்கும்போது நம்முடைய எண்ணங்கள் நான்கு திசையிலும் அலைபாயும். நம்முடைய வேண்டுதல் பலிக்குமா, நாம் சரியாக செய்கிறோமா, அன்றைக்கு என்ன நடந்தது என ஏகப்பட்ட சிந்தனைகள் மனதில் உதித்து சரியாக சாமியை கூட கும்பிட முடியாத நிலை உண்டாகும். இது அனைத்து வயதினரும் அனுபவிக்கக்கூடிய விஷயம். இதனை எளிமையாக நாம் தீர்க்கலாம். அதிக வெளிச்சத்தைப் பார்த்து விட்டு குறைவான வெளிச்சம் உள்ள இடத்தைப் பார்த்தால் முதலில் அந்த இடம் இருட்டாகத்தான் தெரியும். அதேபோல தான் பூஜையறை, கோயில் செல்லும் முன் நம்முடைய விஷயம் பல கோணங்களில் அலை பாய்வது இயற்கை தான். அதே சிந்தனையில் போய் உட்கார்ந்த உடனேயே எல்லாம் நின்று விடுமா? என கேட்டால் அதுதான் இல்லை.

நாம் கடவுள் வழிபாட்டில் ஈடுபடுவதற்கு முன் சில விஷயங்களை செய்ய வேண்டும். பூஜையறை, கோயிலுக்குள் சென்றவுடன் நம்முடைய மனதை ஓரிடத்தில் நிலை நிறுத்த முயற்சிக்க வேண்டும். கண்களை மூடி நாம் எந்த கடவுளை வணங்கப்போகிறோமோ அதனை நம் மனதின் மையத்தில் கொண்டு வந்து அந்த கடவுள் குறித்த பாராயணம், பக்தி பாடல்களை பாடலாம். அந்த 2 நிமிடங்கள் நிச்சயம் மனம் அலைபாய்வதை தடுக்கலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News