5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Spiritual: தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?

கடவுள் வழிபாடு என்பது ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறான நடைமுறைகளை கொண்டுள்ளது. அதேசமயம் இந்து சமயத்தில் பல வித்தியாசமான முறைகளில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. தீப, தூப ஆராதனை தொடங்கி விளக்கு வைத்து வழிபடுவது, பூக்கள் மட்டும் வைத்து வழிபடுவது எனவும் பல வகைகளில் வழிபாடு செய்யப்படுகிறது. இதில் விளக்குகளின் அளவு மற்றும் எண்ணிக்கையானது அந்தந்த நிகழ்வை பொறுத்து மாறுபடுகிறது.

petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 24 Oct 2024 18:00 PM
கடவுள் வழிபாடு என்பது ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறான நடைமுறைகளை கொண்டுள்ளது. அதேசமயம் இந்து சமயத்தில் பல வித்தியாசமான முறைகளில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

1 / 6
தீப, தூப ஆராதனை தொடங்கி விளக்கு வைத்து வழிபடுவது, பூக்கள் மட்டும் வைத்து வழிபடுவது எனவும் பல வகைகளில் வழிபாடு செய்யப்படுகிறது. இதில் விளக்குகளின் அளவு மற்றும் எண்ணிக்கையானது அந்தந்த நிகழ்வை பொறுத்து மாறுபடுகிறது.

2 / 6
இதனிடையே விளக்கேற்றும்போது விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை தங்களால் இயன்ற அளவு பயன்படுத்துகின்றனர். சிலர் மட்டும் தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகின்றனர். தேங்காய் எண்ணெயை வைத்து வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

3 / 6
வீட்டில் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபடுவதால் சுப காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாகும். குறிப்பாக கோயில்களில் மரத்தடியில் உள்ள நாக தெய்வ சிலைகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவி வழிபட்டால், சுவாமியின் அருள் விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

4 / 6
அதேபோல், தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றி வழிபடுவதால், கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி போய் பாசிட்டிவ் எனர்ஜி உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

5 / 6
மேலும் மகாலெட்சுமிக்கு 40 நாட்கள் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, சர்க்கரை அல்லது இனிப்புப் பொருட்களை நைவேத்யமாக வைத்து வழிபட்டால் வீட்டில் இருந்த பொருளாதாரக் கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையை அடைவீர்கள் என நம்பப்படுகிறது. (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

6 / 6
Latest Stories