5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Spiritual: காலையில் வீட்டில் இப்படி விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் கொட்டும்!

பெரியவர்கள் கூற்றுப்படி வீட்டு வாசலில் சிறியதாக கோலாம் போட்டாலும் அதனை அந்த வீட்டின் தலைவி தான் போட வேண்டும். அல்லது அந்த வீட்டைச் சார்ந்த பெண்கள் போட வேண்டும். எக்காரணம் கொண்டும் பணிப்பெண்களை வைத்து கோலம் போட நினைக்க கூடாது. ஒரு பெண் எல்லா வேலைகளிலும் தன்னை முன்னிறுத்துக் கொண்டால் எல்லா நிலைகளிலும் சமாளித்து குடும்பத்தலைவியாக வெற்றி பெற முடியும் என்பது நம்பிக்கையாகும்.

Spiritual: காலையில் வீட்டில் இப்படி விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் கொட்டும்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 27 Sep 2024 15:00 PM

பூஜை வழிபாடு: அன்றாடம் பூஜை செய்வது எப்படி என்பதில் நம் அனைவருக்கும் மிகப்பெரிய அளவில் சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கிறது. காரணம் பூஜை வழிபாட்டில் நம் தினம்தோறும் அனைத்து வகையான பொருட்களை வைத்தும் வழிபட முடியாது. அதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கலாம். அந்த வகையில் தினசரி வீட்டில் பூஜை செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். நாம் ஏற்கனவே சொன்னபடி எப்போதும் அதிகாலையில் விழும் பழக்கத்தை ஆண்களும் பெண்களும் கடைபிடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதலில் வீட்டின் பின்புறம் உள்ள கதவை தான் திறக்க வேண்டும். தற்போதைய வீடுகளில் ஒரே ஒரு வாசல் வைத்து தான் கட்டப்படுகிறது. அப்படியானவர்கள் முதலில் குளிக்கும் இடத்தில் சென்று புனித நீராடி விட்டு வர வேண்டும். பின்னர் நெற்றியில் குங்குமம், திருநீர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொண்டு தான் முன் வாசல் கதவை திறக்க வேண்டும். அப்போதுதான் லட்சுமி கடாட்சம் எப்போதும் நம் வீட்டில் தங்கும். அதேபோல் வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு வந்த பிறகு கை கால் மட்டும் கழுவ வேண்டும். அதன் பிறகு தான் நாம் பூஜை அறைக்குச் செல்ல வேண்டும். எப்போதும் குளித்துவிட்டு வந்து தான் வாசல் தெளிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலம் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் கால நேரத்தை கணக்கிட்டு குளித்துவிட்டு கோலம் போடலாம்.

Also Read: Amazon & Flipkart Sale : ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை.. அதிரடி சலுகைகளை வாரி வழங்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்!

பெரியவர்கள் கூற்றுப்படி வீட்டு வாசலில் சிறியதாக கோலாம் போட்டாலும் அதனை அந்த வீட்டின் தலைவி தான் போட வேண்டும். அல்லது அந்த வீட்டைச் சார்ந்த பெண்கள் போட வேண்டும். எக்காரணம் கொண்டும் பணிப்பெண்களை வைத்து கோலம் போட நினைக்க கூடாது. ஒரு பெண் எல்லா வேலைகளிலும் தன்னை முன்னிறுத்துக் கொண்டால் எல்லா நிலைகளிலும் சமாளித்து குடும்பத்தலைவியாக வெற்றி பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். சிலருக்கு கோலம் போட்டுவிட்டு வீட்டு வாசலில் விளக்கேற்ற பழக்கம் இருக்கும். முன்பெல்லாம் விளக்கு மாடம் என்ற ஒன்று தனியாகவே வீட்டில் இருக்கும். இப்போது வாசலில் வாசல் படியில் விளக்கு வைக்கும் பழக்கம் உள்ளது. அப்படிப்பட்டவர்கள் எப்போதும் வீட்டு வாசலில் விளக்கேற்றிவிட்டு அதன் பிறகு வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டின் பூஜையறையில் நுழைந்தவுடன் முதலில் நாம் செய்ய வேண்டியது முந்தைய நாள் கடவுள் படங்களுக்கும், விளக்குக்கும் போடப்பட்டிருக்கும் பழைய காய்ந்த பூக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றால் ஏற்பட்டுள்ள தூசுகளை அகற்ற வேண்டும்.

Also Read: TN Govt Jobs: மாதம் ரூ.18,000 சம்பளம்.. உள்ளூரிலே பெண்களுக்கு அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

இதன் பின்னர் விளக்கேற்றி அனைத்து கடவுள் படங்களுக்கும் பூக்கள் வைத்து வழிபடலாம். பூக்கள் கண்டிப்பாக வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வெள்ளி, செவ்வாய் இரண்டு நாட்களைத் தவிர விளக்கு மணி போன்ற பூஜைக்கான பொருட்களை தேய்த்து கழுவிக்கொள்ளலாம். ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம் ஆகியவை எப்போதும் பூஜை அறையில் இருக்க வேண்டும். எனவே பூ வைத்தால் பரவாயில்லை இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை வைத்து வழிபடலாம். அப்போது உங்களுக்கு எந்த மந்திரம், பக்தி பாடல் தெரிகிறதோ அதனை சொல்லலாம்.

நம்மால் அன்றாடம் கடவுளுக்கு நைவேத்தியம் வைக்க முடியாது. குறைந்தப்பட்சம் பால், உலர் பழங்கள், பழங்கள், கல்கண்டு ஆகியவை வைத்தும் வழிபடலாம். நைவேத்தியம் வைத்த பொருட்களை கடவுள் வழிபாடு எடுத்து முடிந்தவுடன் செலவழிக்க பழக வேண்டும். அது எப்போதும் அதில் வைத்து மறுநாள் அகற்றக்கூடாது. பிறரின் பசி தீர்ப்பதிலும், பிரசாதம் சாப்பிட்டு மன மகிழ்ச்சியடைவதிலும் தான் கடவுள் மன திருப்தியடைவார் என சொல்லப்படுகிறது. வீட்டில் இருக்கும் அனைவரும் காலையில் குளித்து விட்டு கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் வரை அந்த விளக்கு எரிய வேண்டும்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News