Tiruchendur: வாழ்க்கையில் ஏற்றம்… திருச்செந்தூர் முருகன் கோயில் ரகசியம் தெரியுமா? - Tamil News | spiritual interesting information about tiruchendur murugan temple | TV9 Tamil

Tiruchendur: வாழ்க்கையில் ஏற்றம்… திருச்செந்தூர் முருகன் கோயில் ரகசியம் தெரியுமா?

நாம் பிறந்ததால் தான் வாழ்க்கையில் இன்பம், துன்பம், கவலை, படிப்பு, பக்தி, முக்தி என பல விஷயங்களை நாடுகிறோம். நாம் பிறக்கவே இல்லை என்றால் இத்தகைய விஷயங்கள் எல்லாம் இருக்காது. எதைப்பற்றிய சிந்தனையும் நமக்கு இருக்காது. அத்தகைய பிறவாமை என்ற அருளை நமக்கு முருகன் அருளாகிறார். திருச்செந்தூர் முருகனை நாம் பார்த்தால் அவரின் கையில் ஒரு மலர் இருக்கும்.

Tiruchendur: வாழ்க்கையில் ஏற்றம்... திருச்செந்தூர் முருகன் கோயில் ரகசியம் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Updated On: 

16 Oct 2024 12:56 PM

திருச்செந்தூர் முருகன்: தமிழ் கடவுள் என கொண்டாடப்படுபவர் முருகன். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த கடவுள். எப்போதும் சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்பவர். இப்படி முருகனை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். முருகன் என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரின்  தோற்றம் தான். குழந்தை முருகனாக, வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் என அவர் எப்படிப்பட்டவராக காட்சிக் கொடுத்தாலும் நாம் மெய்மறந்து தான் தரிசிப்போம். இந்த முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் தமிழ்நாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் இருக்கும் முருகன் கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வாழ்க்கையில் ஒருமுறையாவது நாம் அறுபடை வீடுகளுக்கு சென்று வர வேண்டும் என சொல்வார்கள்.

Also Read: Tata Motors: இளைஞர்களே ரெடியா.. 5 ஆயிரம் பேருக்கு வேலை… தமிழக அரசின் புதிய துவக்கம்!

அப்படிப்பட்ட முருகப்பெருமானின் 2வது படைவீடாக அமைந்துள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர். மிக அற்புதமான திருத்தலம். கடற்கரையோடு அமையப்பெற்றுள்ள இத்தலம் சூரனை முருகன் வதம் செய்த இடமாகும். அதனால் இங்கு ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கும். குறிப்பாக ஆவணி திருவிழா, ஐப்பசி சஷ்டி, ஆடி கிருத்திகை, கார்த்திகை மாதம் விரதம் என பல நிகழ்வுகளுக்கு இக்கோயில் பிரசித்திப் பெற்றது. திருச்செந்தூருக்கு பேருந்து, ரயில், கார் என எது மூலமாக வேண்டுமானாலும் வரலாம். இங்கு முடி காணிக்கை, உயிரினங்களை பலி கொடுத்தல், நேர்த்திக்கடனாக கொடுத்தல் உள்ளிட்ட பல வேண்டுதல்கள் பக்தர்களால் செய்யப்படுகிறது. மேலும் நாள் முழுவதும் அன்னதானம், தங்கத்தேர் பவனி என ஆண்டு 365 நாட்களும் திருச்செந்தூர் களைக்கட்டும்.

தற்போது பௌர்ணமி நாளில் தங்கி வழிபட்டால் சிறப்பு என்ற வைரலாக பரவும் தகவலை நம்பி பலரும் திருச்செந்தூருக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. எனவே பக்தர்கள் குழந்தைகளோடு வந்து சிரமப்பட வேண்டாம் என ஆன்மிக அன்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: Food Recipes: புரட்டாசி சனிக்கிழமை விரதமா..? இந்த முறையில் பாயாசம் செய்து விரதம் விடுங்க!

இங்கு செந்திலாண்டவர், சுப்பிரமணிய சுவாமி, ஜெயந்தி நாதராக இங்கு முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த திருச்செந்தூர் கோயிலுக்கு முருகனை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்ன நடக்கும் என்பதை காணலாம். பிறவி என்னும் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பிறவாமை என்ற பெரும் பேற்றை அருளக்கூடியவர் திருச்செந்தூர் முருகன்.

நாம் பிறந்ததால் தான் வாழ்க்கையில் இன்பம், துன்பம், கவலை, படிப்பு, பக்தி, முக்தி என பல விஷயங்களை நாடுகிறோம். நாம் பிறக்கவே இல்லை என்றால் இத்தகைய விஷயங்கள் எல்லாம் இருக்காது. எதைப்பற்றிய சிந்தனையும் நமக்கு இருக்காது. அத்தகைய பிறவாமை என்ற அருளை நமக்கு முருகன் அருளாகிறார். திருச்செந்தூர் முருகனை நாம் பார்த்தால் அவரின் கையில் ஒரு மலர் இருக்கும். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து லிங்கங்களை வைத்து முருகன் தன்னுடைய தந்தையான சிவபெருமானை வழிபாடு செய்வதை அது குறிக்கிறது.

அப்படி பூஜை செய்துக்கொண்டிருக்கும்போது முருகனை தேவர்கள் அழைத்ததால் கணப்பொழுது கையில் இருந்த பூவோடு திரும்பி காட்சிக் கொடுத்தார். அதனால் இன்றைக்கும் முருகன் கையில் ஒரு பூ இருப்பதை காணலாம். அதனால் அவர் பூஜாமூர்த்தி என அழைக்கப்படுகிறார். அவர் தான் ஜெயந்தி நாதராக நமக்கு காட்சிக்கொடுக்கிறார். நாம் திருச்செந்தூரில் முருகனை தரிசிக்க சன்னிதிக்குள் செல்லும்போது நன்றாக கவனித்தால் நாம் கீழே நோக்கி இறங்கிபோவது போல இருக்கும். ஆனால் சாமி தரிசனம் முடித்து வெளியே வரும்போது மேடான பகுதியாக நாம் செல்லும் பகுதி இருக்கும்.

எவ்வளவு தான் வாழ்க்கையில் இறங்கிய நிலையில் சென்றால் என்னை வந்து சந்திதால் வாழ்க்கை ஏறுமுகமாக தான் இருக்கும் என்பது தான் இதன் அர்த்தமாகும். திருச்செந்தூருக்கு வரும் ஒவ்வொருவருக்கும் பக்தர்கள் அன்பு, கருணை ஆகியவற்றை அள்ளி அள்ளி தருவார்கள். வாழ்க்கையில் திருச்செந்தூர் சென்று வந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் நம்மிடையே நிகழும் என்பது நம்பிக்கையாகும்.

வைரல் நாயகிதான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்