Spiritual: வீட்டில் எப்படி விளக்கேற்ற வேண்டும்? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
ஒருவேளை உங்களால் அதிகாலையிலேயே விளக்கேற்ற முடியாமல் போனாலும் கவலைப்பட வேண்டாம். குறைந்தபட்சம் காலை 6 மணிக்கு முன்பாக விளக்கேற்றி வழிபாடு செய்ய முயற்சிக்க வேண்டும். மேலும் காலை, மாலை இரு வேளைகளும் வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் நல்ல நேர்மறையான ஆற்றலை உண்டாக்கும். குறிப்பாக காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் விளக்கேற்ற வேண்டும்.
பூஜையறை வழிபாடு: கடவுள் வழிபாடு என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் இன்றியமையாதது. லாபம், நஷ்டம், மகிழ்ச்சி, துன்பம் என என்ன நடந்தாலும் நாம் எந்த வகையான கடவுளாக இருந்தாலும் அவர் பாதம் சரணடைய வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. இத்தகைய கடவுள் வழிபாட்டில் நாம் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். கடவுள் வழிபாட்டில் அவருக்கு எந்தவித குறைகளும் வைக்காத அளவுக்கு நடக்க வேண்டும். கடவுள் எதிர்பார்க்காதவர் என்றாலும் நம்முடைய சூழலில் மனமுவந்து செய்யும் வழிபாட்டு முறையை கண்டு அவர் மனம் குளிர்ந்து நம் மீது கருணை மற்றும் அன்பை பொழிவார் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் நான் இந்த தொகுப்பில் விளக்கேற்றும் வழிமுறைகள் பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் நாம் காணலாம்.
Also Read: Alwarthirunagiri: நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீ ஆதிநாதர் ஆழ்வார் ஆலயம்!
கருணையின் சொரூபமாக விளங்க கூடியவன் இறைவன். அவருடைய சன்னதியில் கருணை, அன்பு அருளைத் தவிர நமக்கு வேறு எதுவும் கிடைக்காது. அந்த அன்பும், அருளும் இறைவன் வழியாக நமக்கு கிடைக்கும் வரை எதை பற்றியும் நாம் கவலைப்பட வேண்டாம். கோயிலுக்கு தினமும் செல்ல முடியாது என்பதால் தான் வீட்டில் பூஜையறை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாம் நம்முடைய இல்லங்களில் அதிகாலை 3 மணி முதல்5.30 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது மிக நல்லதாக கருதப்படுகிறது. காரணம் இந்த சமயத்தில் தான் வீட்டில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. ஒருவேளை உங்களால் அதிகாலையிலேயே விளக்கேற்ற முடியாமல் போனாலும் கவலைப்பட வேண்டாம். குறைந்தபட்சம் காலை 6 மணிக்கு முன்பாக விளக்கேற்றி வழிபாடு செய்ய முயற்சிக்க வேண்டும். மேலும் காலை, மாலை இரு வேளைகளும் வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் நல்ல நேர்மறையான ஆற்றலை உண்டாக்கும். குறிப்பாக காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் விளக்கேற்ற வேண்டும்.
சிலருக்கு வீட்டில் எத்தனை முகம் வைத்து வழிபட வேண்டும் என்ற கேள்வி இருக்கும். அதாவது ஒருமுகம் கொண்ட விளக்கு என்றால் நற்பலன்களை தரும். இரண்டு முகம் கொண்ட விளக்கு என்றால் குடும்ப ஒற்றுமை தழைத்தோங்கும். மூன்று முகம் கொண்ட விளக்கு என்றால் குழந்தைகள் தொடர்பான இன்பங்களை பெற்று மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். நான்கு முகம் கொண்ட விளக்கு என்றால் அஷ்டலட்சுமிகள் அருளுடன் சர்வ நன்மைகளும் கிடைக்கு. ஐந்து முகம் கொண்ட விளக்கு வீட்டில் எப்போதும் செல்வம் எப்போதும் செழிக்கும்.
அதேபோல் தினமும் குடும்பத்தினர் காலை எழுந்தவுடன் நன்றாக குளித்துவிட்டு வாசல் தெளித்து கோலமிட்டு வாசலில் விளக்கு வைத்து வழிபடலாம். முன்பெல்லாம் விளக்கு வைக்க விளக்கு மாடம் என்ற ஒன்று தனியாக இருக்கும். காவல் தெய்வத்தை அதாவது குல தெய்வத்தை சிறப்பிக்கும் பொருட்டு அந்த விளக்கு வைக்கும் இடத்தை உங்கள் பூஜை அறையாக நினைத்துக் கொள்ளலாம். மேலும் வீட்டு வாசலில் தான் லட்சுமி குடியிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இங்கிருந்து கொண்டும் இறைவழிபாட்டில் ஈடுபடலாம்.
எக்காரணம் கொண்டும் தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. கிழக்கு திசையில் தீபம் ஏற்றினால் துன்பம் அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் மேற்கு திசையில் ஏற்றும்போது கடன்கலும் தோஷங்களும் முற்றிலுமாக நீங்கும். வடக்கு நோக்கி ஏற்றினால் செல்வம், ஞானம், அறிவு ஆகியவை பெருகும் என நம்பப்படுகிறது.
சிலருக்கு மாதவிடாய் காலத்தில் விளக்கேற்ற முடியாத சூழலின்போது திருநீறு, குங்குமம் போன்ற பக்தி அடையாளங்களை நாம் அணியும் பழக்கம் உள்ளது. இறைவனை மனதார நினைத்து விட்டால் எல்லாம் நன்மையாகவே இருக்கும். ஆனால் திருநீறு, குங்குமம் பூஜை அறையில் இருந்து எடுக்கக் கூடாது. அதற்காக வாங்கி வைத்து பயன்படுத்தலாம் எனவும் சொல்லப்படுகிறது.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)